கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்படும் நபர் நடிகர் சூர்யா. இவர் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்த்து பேசினார். அதாவது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை, நீட் தேர்வு போன்ற திட்டங்களை விமர்சித்து பேசினார்.
அதாவது புதிய கல்வி கொள்கை மாணவர்களை பெரிதும் பாதிக்கும். நீட் தேர்வு காரணமாக ஏழை மாணவர்கள் பாதிப்படைகின்றன. நீட் கோச்சிங் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் 5000 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடத்துகின்றனர். ஒரு ஏழை மாணவர் அவ்வளவு தொகையில் எவ்வாறு படிக்க முடியும்.
மேலும் மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஒரு மொழியை திணிப்பது தவறாகும். அவரவர் தாய் மொழியில் படித்தால் தான் சிரிப்பாக படிக்க முடியும் என்று கூறினார்.
இவரின் பேச்சுக்கு பலரும் ஆதரவாகவும் தெரிவித்தனர். குறிப்பாக நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளிப்படையாகவே சூரியாவுக்கு ஆதரவு தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் சூர்யாவின் கருத்து சரியானது, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் சூரியா மீது பாஜக தலைவர்கள் விமர்சனம் வைத்தனர். அமைச்சர் கடம்பூர் ராஜூ, சூரியாவுக்கு என்ன தெரியும்? என்று கேட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் சூரியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது என்று கூறியுள்ளார்.
மேலும், பெற்றோரை இழந்த மாணவி மருத்துவம் முடித்து ராணுவத்தில் பணியாற்றுகிறார். கல் உடைக்கிற தொழிலாளியின் மகன், சென்னை மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் ஆகி கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார்.
இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம், ஏன் எதற்கு இந்த போராட்டம். எங்களுக்கு தனி மாவட்டம் வேண்டும் என மயிலாடுதுறை மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர்.
மக்களின் கோரிக்கை என்னவென்றால் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும். அதாவது மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார் கோவில், வைதீஸ்வரன் கோவில், ஆகியவை சேர்த்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என குத்தாலம், தாரங்கப்பாடி, மணல்மேடு மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர்.
அதாவது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரகள் செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் புதிய மாவட்டங்கள் ஆகும். என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தென்காசி நெல்லையில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், இரண்டு புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் எங்களது கோரிக்கையும் நிறைவேற்றவேண்டும் என மயிலாடுதுறை மக்கள் போராடுகின்றனர்.
மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார் கோவில், வைதீஸ்வரன் கோவில் ஆகிய ஊர் மக்களின் போராட்டங்களை ஏற்று அரசு செவிசாய்க்குமா? அல்லது முடியாது என்று கூறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆஹா, இது சூப்பர்! தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பெருமை! முதல்வர் அறிவிப்பு
ஆஹா, என்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி. இது தமிழகத்திற்கும் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமையான விஷயம் ஆகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை சிறப்பிக்கும் நாளாக விளங்குகிறது. அது போல் இனிமேல் தமிழ்நாடு நாள் என ஒன்றை நம் தமிழ் மக்கள் கொண்டாடவிருக்கிறோம்.
ஆம், இனி நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஏற்கனவே 110 விதியின் கீழ் தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்கள் உருவாகும் என முதல்வர் கூறியுள்ளார். அதை தொடர்ந்து இன்றும் 110 விதியின் படி தமிழ்நாடு நாள் என தமிழகத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் அவ்விதியின் படி நிறைய அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஒன்று , தமிழறிஞர்களுக்கு புதிய விருதுகளையும், வரலாற்றில் இல்லாத அளவிற்கு நிதியுதவிகளையும் வழங்கி வந்த மறைந்த செல்வி ஜெயலலிதா, மேலும் அதை தொடர்ந்து அவர்கள் வழியில் செயல்படும் இந்த அரசும், இது வரை 149 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, அவர்தம் மரபுரிமையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கியுள்ளது.
அவற்றின் அடிப்படையில் பரிசு பெறுவோர் விவரம்;
பண்டித ம. கோபால கிருட்டிணன்
புலவர் இறைக்குருவனார்
தமிழறிஞர் அடிகளாசிரியர்
முனைவர் இரா.இளவரசு
உளுந்தூர் பேட்டை திரு. சண்முகம்
பாபநாசம் குறள்பித்தன்
கவிஞர் நா. காமராசு
இவர்களின் படைப்புகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் நாட்டுடைமையாக்கப்படும். இதற்கென 35 லட்சம்
ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும்,முதல்வர் கூறியதாவது தனி தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1, 1956-ஆம் நாளினை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர்-1ஆம் நாள் ‘தமிழ்நாடு தினம்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்.
தமிழ் மொழிக்கு ஒரு இருக்கையும் ஆசிரியரும் வாரணாசி இந்து பல்கலைக் கழகம், கவுகாத்தி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கிவரும் தென்னிந்திய மொழிகள் துறையில் தலா ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணியிடம், 36 லட்சம் ரூபாய் தொடர் செலவினத்தில் தோற்றுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உலகபொது மறை என அழைக்கப்படும் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு ஒரு ஆண்டும் ஒரு இந்திய மொழி ஒரு உலக மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து திருக்குறளை பெருமை படுத்தபடும். இதற்கென 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டு இந்திய மொழிகளான அசாமி மற்றும் சிந்தி மொழிகளிலும், உலக மொழியான டஃப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்பதை தெரிவித்தார்
டாக்டர். ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளின் தலைவர் என அனைவராலும் அறியப்படும். அவரின் தமிழ்ப் பணியினைப் போற்றி சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் தமிழ் பல்கலைகழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும். இதற்கென ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் ‘ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சித் திட்ட”த்தின் கீழ், தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்பிக்கும் வகையில் 20 கோடி ரூபாய் நிதியில் புதிய கட்டுமான வசதிகள், மேம்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள், புதிய கருவிகள் வாங்குதல் மற்றும் ஏனைய வசதிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அண்டை மாநிலம் கர்நாடகா, கர்நாடகா நாள் என கொண்டாடுவது போல நாமும் தமிழ்நாடு நாள் என கொண்டாடுவோம்.
சட்ட பேரவையில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார்! வாக்குறுதியை நிறைவேற்றிய டாக்டர் ராமதாஸ்!
நாட்டில் நிறைய தலைவர்கள் சுதந்திரத்திற்காகவும், மண்ணிற்காகவும், பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், போராடி தன் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அப்படி இருக்க நாம் அனைவரும் அறிந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி படையச்சியார் அவர்கள் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும், போராடியவர் ஆகும்.
அவருக்கு நமது மாநில முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த வருடம் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதாவது, எஸ் எஸ் ராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு சட்ட சபையில் அவரை போற்றும் வகையில் திரு உருவ படம் வைக்கப்படும் எனவும், அவரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களின் திரு உருவப் படத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கலந்து கொள்வாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பங்குகொள்ளவில்லை.
ஏனெனில் பாமகவை தொடங்கிய பொழுது டாக்டர் ராமதாஸ் அளித்த ஒரு வாக்குறுதி எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ படாது என அறிவித்திருந்தார். இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பதை, மற்ற கட்சிகள் தான் அதிகமாக எதிர்பார்த்திருந்தார்கள்.அந்த வாக்குறுதியை இன்று மீறுவாரா? என பல ஊடகங்களும் கடுமையாக விமர்சனம் செய்து எழுதி இருந்தனர்.
திமுக உள்ளிட்ட கட்சியின் இணையதள உறுப்பினர்களும் அதை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக டாக்டர் ராமதாஸ் தன்னுடைய வாக்குறுதியில் உறுதியாக இருப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார். எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாமக சார்பில் தலைவர் ஜிகே மணி, எம்பி அன்புமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி கலந்து கொண்டார்கள்.
டாக்டர் ராமதாஸின் கடிதத்தில் தெரிவித்தது என்னவென்றால், “அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கம்!
உழவர் உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை சட்டப் பேரவை மண்டபத்தில் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு திறக்கும் விழாவிற்கான சட்டப் பேரவைச் செயலாளரின் அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க நன்றி!
வாழ்நாளில் சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்தில் ஓர் அடி எடுத்து வைக்க மாட்டேன் என்று உறுதி ஏற்று, அதை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ராமசாமி படையாட்சியார் உரிமைகள் அற்று கிடந்த மக்களுக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்தவர், போராடியவர். அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் சட்ட பேரவை மண்டபத்தில் அவரது உருவப்படத்தை திறப்பது அவருக்கு செய்யப்படும் சரியான அங்கீகாரம் ஆகும். இதற்காக தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தாங்கள் தான் அறிவித்து அரசாணை வெளியிட்டு இருந்தீர்கள். அதுமட்டுமின்றி கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அவரது உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அதற்கான அடிக்கல்லையும் கடந்த ஆண்டு நட்டு வைத்தீர்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெரியவர் ராமசாமி படையாச்சியார் நினைவைப் போற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தொடர்ச்சியாக அவரது திருவுருவ படமும் சட்டப் பேரவை மண்டபத்தில் திறக்கப்படுவது அவருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. திரு ராமசாமி படையாச்சியார் உருவ படம் திறப்பு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என டாக்டர் ராமதாஸ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் அனைத்து எதிர்கச்சிகளும் டாக்டர் ராமதாஸ் சட்ட சபையில் கால் பதிப்பரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. எஸ் எஸ் ராமசாமி படையாட்ச்சியார் அனைவரும் போற்றகூடிய மாபெரும் தலைவர் ஆவார். உழைப்பாளர் மக்களின் முன்னேற்றம் அடைய பாடுபட்டவர்.
தமிழக
சட்டப்பேரவையில் எஸ்.எஸ்.
ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை எடப்பாடி
பழனிசாமி திறந்து வைத்தார்
தமிழக சட்டப்பேரவையில்
ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து
வைத்தார். மேலும் ராமசாமி படையாச்சியார்
மணி மண்டபம் விரைவில் திறப்பப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
வன்னிய சமூகத்தின் பெரும்
தலைவர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் கடலூர் மாவட்டத்தில் உள்ள
மஞ்சகுப்பத்தில் பிறந்தவர், பள்ளிப்
படிப்பை முடித்த காலத்திலேயே இவர் சுதந்திர போராட்டத்தில் மிகுந்த தீவிரத்தோடு
ஈடுபட்டவர்.
ஆரம்பத்தில்
சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட இவர் நாட்டின் விடுதலைக்கு
பின்னர் வன்னிய சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார், மேலும் தமது நோக்கத்தை நிறைவேற்ற 1951-ஆம் ஆண்டு தமிழ்நாடு
உழைப்பாளர் கட்சியை தொடங்கினார்.
1952-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில்
அவரது கட்சி வேட்பாளர்கள் 19 சட்டமன்ற தொகுதிகளிலும், 4 மக்களவை தொகுதிகளிலும்
வெற்றி கண்டனர். 1954-ஆம் ஆண்டு காமராஜர் தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற போது, அவருக்கு ஆதரவை
தெரிவித்த ராமசாமி படையாச்சியார், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை காங்கிரசில் இணைத்தார்.
இதனையடுத்து தமிழக
உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பொறுப்பு ஏற்றார். 1980, 1984 ஆம் ஆண்டுகளில்
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக திண்டிவனம் தொகுதியில்
போட்டியிட்டு இருமுறையும் வெற்றி கண்ட ராமசாமி படையாச்சியார், 1992-ஆம் ஆண்டு காலமானார்.
சுதந்திர
போராட்ட தியாகியும், தமிழக
முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் உருவப்படத்தை
சட்டமன்றத்தில் திறந்து வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு முடிவு
எடுத்தது.
ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில், மகாத்மா காந்தியடிகள்,ராஜாஜி, திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர்.
முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அம்பேத்கர், காயிதே மில்லத், ஜெயலலிதா ஆகிய 11 பேரின் படங்கள் உள்ளன.
இந்நிலையில் 12 வது படமாக ராமசாமி படையாச்சியார் படத்தை முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், வாழும்போதே வரலாறாக
வாழ்ந்த மரியாதைக்குரியவர் ராமசாமி படையாச்சியார் என்றார். நாட்டுக்காகவும், சமுதாயத்திற்காகவும்
உழைத்த நல்லவர்களை சிறப்பிப்பதில், அரசும் முன்மாதிரியாக
திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.
ராமசாமி படையாச்சியாருக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர், கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1.5 ஏக்கர் அரசு நிலத்தில் ராமசாமி படையாச்சியாருக்காக கட்டப்பட்டு வரும் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்றும் கூறினார். படத்திறப்பு விழாவிற்கு பிறகு அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் 15 நிமிடங்க்ள ஆலோசனை நடத்தினார்.
TNPL 2019 டி.என்.பி.எல் 2019 முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகான்ஸ்!
TNPL 2019 டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கும் இடையேயான முதலாவது லீக் ஆட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் களமிறங்கினர். இதில் ஹரி நிஷாந்த் 1 ரன்னிலும், ஜெகதீசன் 17 ரன்னிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் சற்று அதிரடி காட்டிய ஆர்.அஸ்வின் 37 ரன்களில் எம்.அஸ்வின் பந்தில் கேட்ச் ஆனார். அதற்கு பின் விவேக் 4 ரன்னிலும், சதுர்வேத் 21 ரன்னிலும், சுமந்த் ஜெயின் 10 ரன்னிலும், முகமது 3 ரன்னிலும், அபினவ் 8 ரன்னிலும், எம்.சிலம்பரசன் 2 ரன்னிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்தது. கடைசியில் ரோஹித் 8 ரன்னுடனும், கவுசிக் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
TNPL 2019 Dindigul Dragons beat Chepauk Super Gillies by 10 runs-News4 Tamil Online Tamil News Sports News Cricket News Live
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர் 3 விக்கெட்டுகளும், எம்.அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஜி.பெரியசாமி, சித்தார்த், டி.ராகுல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கவுசிக் காந்தி மற்றும் கங்கா ஸ்ரீதர் ராஜூ ரன் எதுவும் எடுக்காமலும், கோபிநாத் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து வந்த ஆரிப் 16 ரன்னிலும், சசிதேவ் 13 ரன்னிலும், எம்.அஸ்வின் 16 ரன்னிலும், சித்தார்த் 12 ரன்னிலும், டி.ராகுல் 4 ரன்னிலும், ஹரிஸ் குமார் 15 ரன்னிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசியில் ஜி.பெரியசாமி 7 ரன்னுடனும், அலெக்சாண்டர் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளும், கவுசிக் மற்றும் முகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் , அபினவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கார்த்தியின் அதிரடி முடிவு..! அதிர்ச்சியில் உதவி இயக்குனர்கள்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிப்பாதை வகுத்து அதில் பயணித்துவருபவர் கார்த்தி. அவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கைதி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இவர் தற்போது, அடுத்த சில வருடங்களுக்கு எந்த அறிமுக இயக்குநரின் கதையிலும் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம். கார்த்தியின் முந்தைய படமான ‘தேவ்’, ரஜத் ரவிச்சங்கர் என்ற அறிமுக இயக்குநரால் உருவானது. அந்தப் படத்தின் படுதோல்வி காரணமாகவே, கார்த்தி இந்த முடிவை எட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே 2012-ல் வெளியான ‘சகுனி’ படத்தின் தோல்விக்குப் பிறகு சில வருடங்களாக உதவி இயக்குநர்களிடம் கதைக் கேட்பதைத் தவிர்த்துவந்த கார்த்தி, சமீபத்தில்தான் ‘தேவ்’ படத்தின்மூலம் மீண்டும் ஒரு உதவி இயக்குநருக்கு வாய்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இந்த முடிவை அவர் எடுத்திருப்பது கோலிவுட் உதவி இயக்குநர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கெனவே கார்த்திக்காக உதவி இயக்குநர்களிடம் கதை கேட்டு ஒப்பந்தம் செய்திருந்த தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார்களாம்.
ஏற்கெனவே கார்த்தியின் சகோதரர் சூர்யா, கடந்த 15 வருடங்களாகவே புதுமுக இயக்குநர்களின் கதைகளில் நடிப்பதில்லை என்பதை ஒரு அறிவிக்கப்படாத கொள்கையாகவே பின்பற்றிவருகிறார் என்பது ஒரு கூடுதல் தகவல்.
கொடுத்த வாக்குறுதியில் உறுதியாக இருந்த பாமக நிறுவனர்
ராமதாஸ்! ஆளுங்கட்சியினர் பெருமிதம்! எதிர்கட்சியினருக்கு ஏமாற்றம்
விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக உள்ளாட்சித்
துறையின் முன்னாள் அமைச்சரும், நலிந்த பிரிவு மக்களுக்காக குரல்
கொடுத்தவருமான மறைந்த எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப்
படத்தினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (19/07/2019)
திறந்து வைத்தார்.
இந்த விழாவில், சபாநாயகர்
தனபால், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், மாநிலங்களவை
உறுப்பினர்கள் மைத்ரேயன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட
மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்திரசேகரன் ,
அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே. மணி,
ஏ.கே .மூர்த்தி , முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் தமிழ்நாடு
அரசு சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
ஆளும் கட்சியின் கூட்டணி தலைவரான
மருத்துவர் ராமதாசின் வருகையை தமிழக முதல்வர் உள்பட பலரும் எதிர்பார்த்தனர்.இந்நிலையில்
இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பதை ஆளுங்கட்சியினரை விட மற்ற கட்சிகளும் தமிழக
ஊடகங்களும் தான் அதிகமாக எதிர்பார்த்திருந்தார்கள். ஏனெனில் பாமகவை தொடங்கிய
பொழுது மருத்துவர் ராமதாஸ் எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கால்கள்
சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ படாது என ஒரு வாக்குறுதி அளித்திருந்தார். இந்த
விழாவில் பங்கேற்பதன் மூலம் அந்த வாக்குறுதியை இன்று மருத்துவர் மீறுவாரா?
என பல ஊடகங்களும் கடுமையாக விமர்சனம் செய்து எழுதி எதிர்பார்த்து
காத்திருந்தனர்.
திமுக
உள்ளிட்ட எதிர்கட்சிகளின் இணையதள தொண்டர்களும் நிர்வாகிகளும் அதை ஆவலுடன்
எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக டாக்டர்
ராமதாஸ் தன்னுடைய வாக்குறுதியில் உறுதியாக இருப்பதை முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமிக்கு கடிதம் மூலம் தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார். இவ்வாறு
மருத்துவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பாமக சார்பில் தலைவர் ஜிகே மணி, எம்பி அன்புமணி, முன்னாள்
மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி போன்றவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள தமிழக முதலமைச்சர்
மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கம்!
உழவர்
உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி
படையாட்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை சட்டப் பேரவை மண்டபத்தில் இன்று மாலை ஐந்து
முப்பது மணிக்கு திறக்கும் விழாவிற்கான சட்டப் பேரவைச் செயலாளரின் அழைப்பிதழ்
கிடைத்தது. மிக்க நன்றி!
வாழ்நாளில் சட்டப்பேரவையிலும்
நாடாளுமன்றத்தில் ஓர் அடி எடுத்து வைக்க மாட்டேன் என்று உறுதி ஏற்று,
அதை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் இவ்விழாவில் பங்கேற்க
இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமசாமி
படையாட்சியார் உரிமைகள் அற்று கிடந்த ஊமை ஜனங்களுக்காக இந்தியா விடுதலை அடைந்த
காலத்திலேயே குரல் கொடுத்தவர், போராடியவர். அவரது பணியை
அங்கீகரிக்கும் வகையில் சட்ட பேரவை மண்டபத்தில் அவரது உருவப்படத்தை திறப்பது
அவருக்கு செய்யப்படும் சரியான அங்கீகாரம் ஆகும். இதற்காக தங்களுக்கு பாட்டாளி
மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ராமசாமி
படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்
என்று தாங்கள் தான் அறிவித்து அரசாணை வெளியிட்டு இருந்தீர்கள். அதுமட்டுமின்றி
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அவரது உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும்
என்று அறிவித்து அதற்கான அடிக்கல்லையும் கடந்த ஆண்டு நட்டு வைத்தீர்கள். அதற்கான
பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெரியவர்
ராமசாமி படையாச்சியார் நினைவைப் போற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில்
தொடர்ச்சியாக அவரது திருவுருவ படமும் சட்டப் பேரவை மண்டபத்தில் திறக்கப்படுவது
அவருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. திரு ராமசாமி
படையாச்சியார் உருவ படம் திறப்பு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற பாட்டாளி
மக்கள் கட்சி சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என
டாக்டர் ராமதாஸ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பிக்கும் போது எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ படாது என்று கட்சியினருக்கு அளித்த வாக்குறுதியானது தேர்தல் அரசியல் மூலமோ அல்லது வேறு வகையிலோ பதவி பெற்று அங்கு செல்ல மாட்டேன் என்பதை தான் குறிப்பிட்டார் என்றாலும் தான் கொடுத்த வாக்குறுதியில் மருத்துவர் ராமதாஸ் உறுதியாக இருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதை வைத்து அரசியல் செய்ய காத்திருந்த எதிர்க்கட்சியினருக்கு இவரின் இந்த முடிவு ஏமாற்றத்தை தந்துள்ளது.
பப்பாளி பழம் அனைவரும் அறிந்ததே மிகவும் எளிமையாக கிடைக்க கூடிய ஒரு பழம் ஆகும். இப்படி எளிமையாக கிடைப்பது நாம் அனைவரும் அதிகமாக உண்பதில்லை. பப்பாளி மரத்தில் அதனுடைய இலை, பழம், விதை இப்படி அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தவை ஆகும்.
பப்பாளி பழத்தில் அதிக அளவு விட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் போன்ற உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது அனைவரும் உண்ணும் பழம் ஆகும்.
பப்பாளி பழத்தை தொடர்ந்து உண்ணுவந்தால் மலச்சிக்கல் குணமாகும். பப்பாளி பழத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்து வரும்போது நமது சீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் சருமத்தின் நிறத்திற்கு மற்றும் வடிவத்திற்கு உதவுகிறது. முடி வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.
பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது. எனவே இதனால் நாம் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. நொறுக்கு தீனியை விட மிகவும் விலை குறைவு.
பப்பாளி பழத்தில் கரோட்டீனாய்டுகள், பிலேவனாயிடுகள், வைட்டமின் சி போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதனால் நமது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். பப்பாளி வயிற்று பொருமலை ஏற்படாமல் தடுக்கும்.
பப்பாளிபழத்தில் கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் ஏ உள்ளது. இவை கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் பழத்தை கண் மற்றும் சருமத்தின் மேல் பற்றுபொடுவதால் சருமம் பொலிவோடு காணப்படும்.
மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் எலும்பு தேய்மானம் அடைந்து அவதிப்படுபவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் எலும்புகளில் ஏற்படும் அழற்சியை போக்க வல்லது.
சூர்யாவின் வீட்டுக்கு 100 கோடி பணம் எப்படி வந்தது? பாஜக நிர்வாகி கேள்வி
நடிகர் சூர்யாவிற்கு சொந்தமான வீடு சென்னை தி.நகரில் உள்ளது. இந்த வீடு ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து கட்டப்பட்ட 7 நட்சத்திர ஹோட்டலை போன்று மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. இதற்கான நிதியை நடிகர் சூர்யா எவ்வாறு திரட்டினார் என்று கூற முடியுமா? என பாஜக தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர். நிர்மல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ’’30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வி கொள்கைக்கு ஏன் அவசரம் என்று கேட்டுள்ளார் சூர்யா. 2015 ஆண்டு முதல் டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கமிட்டி அனைத்து மாநில பிரதிநிதி மற்றும் வல்லுனர்களுடன் பல கட்ட ஆலோசனைக்கு பிறகுதான் இதை பரிந்துரை செய்துள்ளனர்.
அதனுடன் டாக்டர் அப்துல் கலாம் உதவியாளர் பொன்ராஜ் அவர்களின் அனைத்து பரிந்துரையும் எந்தவித திருத்தமும் இல்லாமல் அப்படியே ஏற்று கொண்டது இந்த கமிட்டி. இதில் எந்த வித அவசரமும் காட்டவில்லை. அடுத்ததாக 3 வயது குழந்தையால் மூன்று மொழி கற்க முடியுமா என கேட்டுள்ளார். இன்று சூர்யா போன்ற வசதி படைத்தவர்கள் குழந்தைகள் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ சிலபஸில் தனியார் பள்ளிகளில் மூன்று மொழியை கற்கும் பொழுது, கிராமத்து குழந்தைகளால் கண்டிப்பாக கற்க முடியும்.
1848 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதே என குறிப்பிட்டுள்ளார் சூர்யா. நாம் நமது கல்வி கொள்கையில் எந்த வித மாறுதலும் செய்யாமல் இருந்தால் அனைவரும் தனியார் பள்ளிகளை தேடி செல்லும் நிலைதான் உருவாகும். இதே நிலை நீடித்தால் 1848 பள்ளிகள் மட்டுமல்ல, சில வருடங்களில் அனைத்து அரசு பள்ளிகளும் மூடப்படலாம்.
நீட் தேர்வு அவசியமா என கேட்டுள்ளார். கண்டிப்பாக அவசியம்தான். ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தால் யார் வேண்டுமானாலும் மருத்துவராகலாம் என்ற நிலையை மாற்றி, கல்வி தகுதி உடையவர்கள் மட்டுமே இன்று நீட் தேர்வால் மருத்துவராக முடியும். தனியார் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற ஒரு தகுதி தேர்வு மிக அவசியம். மேலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிப்படை தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மருத்துவராகும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி கொள்கை தொடர்பாக, எந்தவித அடிப்படை அறிவும் இல்லாமல், யாரோ எழுதி கொடுத்ததை மேடையில் நடித்துவிட்டு சென்றுள்ளார். இனிவரும் காலங்களில் ஆண்டிற்கு 5 லட்சத்திற்கும் அதிகமாக கல்லூரியில் இருந்து வெளிவரும் மாணவர்களுக்கு, சிறந்த கல்வி கொள்கையால்தான் வேலை வாய்ப்பு அமையும். நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் தொடர்பாக ஏராளமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை தொடர்பாக நமது கேள்விகளுக்கு விளக்கம் தருவாரா அவர்?
1) நடிகர் சூர்யா, தான் நிர்வகிக்கும் அகரம் அறக்கட்டளைக்கு அவருடைய குடும்பம் சார்பில் எவ்வளவு நிதி இதுவரை வழங்கபட்டுள்ளது என வெளியிட முடியுமா?
2) அகரம் அறக்கட்டளைகாக பல வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு பின்னர் மூடியுள்ளனர். இது எதனால் என தெரிவிக்க முடியுமா சூர்யா?
3) நடிகர் சூர்யா, வரி ஏய்ப்பிற்காக தனது சம்பளத்தை அகரம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு, துபாயை சேர்ந்த ஸ்டார் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சினி கேலக்சி போன்ற நிறுவனங்களில் இருந்து வாங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகர் சூர்யா எப்போது பதில் சொல்லப் போகிறார்?
4) நடிகர் சூர்யாவின் தி.நகர் வீடு, ரூ.100 கோடிக்கும் மேல் கட்டப்பட்ட 7 நட்சத்திர ஹோட்டலை போன்று பிரம்மாண்டமாக உள்ளது. இதற்கான நிதியை நடிகர் சூர்யா எவ்வாறு திரட்டினார் என கூற முடியுமா?
5) பேங்க் ஆப் இந்தியா மற்றும் அகரம் அறக்கட்டளைக்கு உள்ள உறவை நடிகர் சூர்யா தெளிவு படுத்துவரா? மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்ட வரைவு தொடர்பான நடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நாம் விளக்கம் தந்துவிட்டோம். அதேபோல, அகரம் அறக்கட்டளை தொடர்பான நமது கேள்விக்கு சூர்யா விளக்கம் தர வேண்டும் என கேட்டு கொள்கிறோம்’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.