காலை உணவு திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

0
202
breakfast!! Postponement at school!!
breakfast!! Postponement at school!!

காலை உணவு திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

தமிழக  முதல்வர்  அவர்கள் அறிவித்த  திட்டங்களில் ஒன்றானது  அரசு பள்ளிகளில்  காலை உணவு திட்டம். தமிழகத்தில் 1 முதல்  5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் அறிவித்து சில மாதங்கள் ஆகின.

கடந்த  செப்டம்பர்  15 ஆம்  தேதி அண்ணா பிறந்த நாளில் மதுரையில் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையிலும்,  ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்க்கவும்,  பாதியிலேயே படிப்பை கைவிடுவதை தடுக்கவும்,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தலைமையில்  காலை சிற்றுண்டி திட்டம்மானது அறிமுகம் செய்யப்பட்டது.  அதன் அடிப்படையில் 1,547  அரசு  ஆரம்ப பள்ளிகளில்  முதல்கட்டமாக  இத்திட்டம்  தொடங்கப்பட்டது.

இத்திட்டமானது ‘காலை உணவு திட்டம்’ என்று பெயர் சூட்டி’  மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உணவு வகைகள்,  மற்றும்  தானிய வகைகள்,  சத்துமாவு,  வகைகளை அரசு முன்னதாகவே பட்டியலில்  அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவ, மாணவியருக்கு, காலை உணவு வழங்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ‘மாணவர் சேர்க்கை பணிகள் காரணமாக  இத்திட்டம் தாமதம் ஆகி வருகிறது. மாணவர் சேர்க்கைக்கு பின் கணக்கெடுப்பு முறையாக எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை வட்டாரங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டம்  ஜூலை முதல் தொடங்கவுள்ளதாக  அதிகாரபூர்வ  தகவல்  வெளியாகியுள்ளது.