அவரைப் போல பேட்டிங் ஆட முடியாது!!! ரோஹித் சர்மாவை கலாய்த்த முன்னாள் இந்திய வீரர்!!!

0
19

அவரைப் போல பேட்டிங் ஆட முடியாது!!! ரோஹித் சர்மாவை கலாய்த்த முன்னாள் இந்திய வீரர்!!!

நேற்று(செப்டம்பர்2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் பேட்டிங்கை பார்த்து முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் கிண்டலான பதிவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகமே எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று(செப்டம்பர்2) இலங்கையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் இந்தியா பேட் செய்யும் பொழுதே அடிக்கடி மழை குறுக்கிட்டது. இருந்தும் இந்தியா 48.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 267 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான்.அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்னாள் மழை தன்னுடைய இன்னிங்ஸை தொடங்கியது. விடாமல் பெய்த மழையால் இந்திய் பாகிஸ்தான் போட்டி இரத்து செய்யப்பட்டது. மிகவும் எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி வீசிய பந்தில் போல்ட் ஆகி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவுட் ஆன விதம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது.

இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் சுப்ரமணியம் பத்ரிநாத் அவர்கள் ரோஹித் சர்மா அவர்கள் அவுட்டான விதத்தை அவருடைய எக்ஸ் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளார்.

பத்ரிநாத் பகிர்ந்த அந்த மீம் புகைப்படத்தில் ஒரு பாதியில் ரோஹித் சர்மா நேற்றைய(செப்டம்பர்2) போட்டியில் ஆட்டமிழந்த புகைப்படமும் கீழே மறுபாதியில் நடிகர் மிர்ச்சி சிவா அவர்கள் சென்னை 600028 திரைப்படத்தில் அவுட்டான புகைப்படமும் இருக்கின்றது.

இதையடுத்து சுப்ரமணியம் பத்ரிநாத் அவர்கள் அந்த பதிவில் “மிகவும் ஒற்றுப் போகின்றது” என்று பதிவிட்டு “நான் அவர் அவர்களுடைய ஷாட்டை சொன்னேன்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்பொழுது அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே நடிகர் மிர்ச்சி சிவா அவர்களும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித்சர்மா அவர்களும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்று பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பத்ரிநாத் இப்படி ஒரு வேடிக்கையான பதிவை போஸ்ட் செய்துள்ளார்.