நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
58
#image_title

நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

சென்னையில் நாளை முதல் அதாவது நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

சென்னையில் பரங்கிமலை முதல் ஆலந்தூர் வரையில் மேம்பாலம் கட்டும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதனால் நாளை(நவம்பர்1) முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை முதல் விழுப்புரம் வரையிலான வழித்தடத்தில் பரங்கிமலை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்னரே இரண்டு நாட்கள் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. ஒரு சில ரயில்களின் சேவைகள் ரத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று(அக்டோபர் 31) மட்டும் சென்னை கடற்கரை சாலை முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்திலும், சென்னை கடற்கரை சாலை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்திலும் இயக்கப்படும் 53 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அது மட்டுமில்லாமல் இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்களின் சேவை மதியம் 3.45 மணிக்கு மேல் தான் தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களின் சாலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதாவது மயங்கி மலை முதல் ஆலந்தூர் வரையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் நாளை அதாவது நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு நேரத்தில் புறப்படும் மன்னை எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், மங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களும் நாளை(நவம்பர்1) முதல் நவம்பர் 3ம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

அது மட்டுமில்லாமல் தாம்பரம் முதல் சென்னை கடற்கரை சாலை வரையிலான வழித்தடத்தில் நவம்பர் 3ம் தேதி வரை இரவு 10.40 மணி முதல் 11.55 மணி வரை மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.