இன்று முதல் தலைவர் 170 படப்பிடிப்பு ஆரம்பம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

0
17
#image_title

இன்று முதல் தலைவர் 170 படப்பிடிப்பு ஆரம்பம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கும் 170வது திரைப்படமான தலைவர்170 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(அக்டோபர்4) முதல் தொடங்கியுள்ளதாக படக்குழு ஒரு புதிய போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் த.செ ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் 170வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர்170 என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களாக தலைவர்170 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது.

அதன்படி நடிகைகள் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், நடிகர்கள் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக புதிய போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்தது. இதையடுத்து இன்று(அக்டோபர்4) திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இதற்காக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செட்டுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடைய காட்சிகள் மட்டுமே திருவனந்தபுரத்தில் படமாக்கப்படவுள்ளது. பின்னர் படக்குழு மீதம் உள்ள படப்பிடிப்பை கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயில் ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.