மது போதையில் நாய் மீது கல்லை போட்டு கொன்ற சிறுவன்

மது போதையில் நாய் மீது கல்லை போட்டு கொன்ற சிறுவன்

கோவையில் மது போதையில் நாய் மீது கல்லை போட்டு கொன்ற சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.

கோவை ரத்தினபுரி பகுதி சுப்பிரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜீவா(63). இவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன்(சூர்யா) நேற்றிரவு குடிபோதையில் வந்து தெருவோரம் தூங்கி கொண்டிருந்த நாயை சீண்டியதாக தெரிகிறது.

இதில் நாய் குலைக்கவே குடிபோதையில் இருந்த சிறுவன் ஆத்திரத்தில் அருகில் கிடந்த கல் ஒன்றை எடுத்து நாயின் தலையில் போட்டுள்ளார். இதில் நாய் அங்கேயே உயிரிழந்தது.

இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அச்சிறுவனை கண்டித்துள்ளனர். மேலும் நாயின் உரிமையாளரான ஜீவா அளித்த புகாரின் பேரில் ரத்தினபுரி காவல்துறையினர் அச்சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.