இது தெரியுமா? சூடு நீரில் வெந்தயம் சேர்த்து அருந்தினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

0
86
#image_title

இது தெரியுமா? சூடு நீரில் வெந்தயம் சேர்த்து அருந்தினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள் பொருள் ஆகும். இவை உடல் சூடு, வயிறு எரிச்சல் உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.

வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் அடங்கி இருக்கிறது. இந்த வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இதில் தேநீர் செய்து பருகினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

சூடு நீரில் வெந்தயம் சேர்த்து அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்:-

*செரிமான பிரச்சனை, வாயு தொல்லை உள்ளிட்ட வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இது உரியத் தீர்வு கிடைக்கும்.

*உடல் சூடு, பித்தம் உள்ளிட்டவைகள் குறையும். நெஞ்சு எரிச்சல், அல்சர் உள்ளிட்ட பாதிப்புகள் குணமடையும்.

*மலச்சிக்கல் சிக்கல் பாதிப்பை குணமாக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

*மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ளிட்டவைகளை குணப்படுத்தும்.

*மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை சரி செய்ய உதவுகிறது.

*கூந்தல் நன்கு வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

*இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

*சரும பாதிப்புக்கும் வெந்தயம் சிறந்த தீர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம்

*தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து பருகவும்.