Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

0
80

Government office- ல உங்க வேலை சீக்கிரமா நடக்க வேண்டுமா?? கட்டாயம் இதை பண்ணுங்கள்!!

இன்றைய காலத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயமாக லஞ்சம் என்கின்ற பணத்தை கொடுத்தே தீர வேண்டும்.அப்படி ஒரு சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் எந்த ஒரு வேலை உங்களுக்கு நடக்க வேண்டும் என்றாலும் அதற்காக உடனே நீங்கள் பணத்தை கொடுத்து விடுகிறீர்கள். லஞ்சம் வாங்கி அவர்கள் தப்பு செய்கிறார்கள் என்று கூறினால் லஞ்சம் கொடுத்து நீங்கள் தப்பு செய்கிறீர்கள் என்பதே உண்மையாகும்.

இன்றைய சூழலில் நியாயமாக செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் இப்பொழுது பணத்தை கொடுத்து நேர்மைக்கு எதிராக தான் செய்து வருகிறோம்.

ஏன் இந்த பணத்தை கொடுக்கிறோம் என்று பார்த்தால் நம்முடைய காரியங்கள் அனைத்தும் சீக்கிரமாக நடக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் ஒரு காரணமாக உள்ளது.

குறிப்பாக சொல்லப்போனால் அரசு துறைகளில் வேலை வேண்டுமானாலும் நமக்கு வேலை ஆக வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுத்தேன் அனைத்தையும் பெறவேண்டியதாக உள்ளது.

பொதுமக்கள் சிலர் லஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் தப்பு என்று நினைக்கிறார்கள். ஆனால் லஞ்சம் வாங்குபவர்கள் வாங்கிக் கொண்டே தான் இருப்பார்கள் கொடுப்பவர்கள் நாம் தான் நிறுத்த வேண்டும்.

இப்படி நிறுத்த நினைக்கும் பலருக்குத்தான் இந்த தகவல். நீங்கள் லஞ்சம் வாங்குபவர்களை பற்றிய புகார் எப்படி செல்வது யாரிடம் சொல்வது என்று தெரியாமல் உள்ளீர்களா?? இந்த தகவல் உங்களுக்காக,

யாரோ ஒரு அதிகாரி அவர் செய்யும் வேலைக்காக உங்களிடம் பணம் நகை அல்லது வேறு சில பொருட்கள் ஏதாவது கேட்டால் முதலில் நீங்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்று புகார் தெரிவிக்க வேண்டும்.

எப்படி என்றால், dvac.tn.govi.in என்ற இணையதள பக்கத்தில் உள்ள முகவரிக்கு புகாரை ரிஜிஸ்டர் செய்து அனுப்பலாம். இல்லையென்றால், 4422321090, 22321085, 22310989,22342142 இந்த கண்ட்ரோல் என் நிற்க அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம்.

இது மட்டுமல்லாமல் 1064 என்கின்ற எண்ணிற்கும் அழைத்து புகாரை தெரிவிக்கலாம்.

நீங்கள் அழைக்கும் பொழுது நீங்கள் எந்த மாவட்டம் அதிகாரியின் பெயர் எதற்காக லஞ்சம் கேட்கிறார் என்ற முழு விவரத்தையும் அவர்களிடம் கூறினால் போதும் அடுத்த நடவடிக்கையை அரசு எடுக்கும்.