மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேற்கு வங்க மாநில பயணம் திடீர் ரத்து !! காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் !!

0
84

மேற்குவங்க மாநிலம் சிலிகிரியில் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ள துர்கா பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்க மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2021-இல் மேற்குவங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்நடைபெறயுள்ளது. வருகின்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் , இடதுசாரி கட்சியும் இணைந்து போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர் . தற்பொழுது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த மம்தா பானர்ஜி முதல்வராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயத்தில் , அம்மாநிலத்தில் பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் வரும் 22-ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ள துர்கா பூஜையில், மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , தற்பொழுது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அவருக்கு பதிலாக கட்சியின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா கலந்துகொள்வார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K