இனிமேல் மகளிர்க்கு இலவசம் தான்! சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!

0
124
#image_title

இனிமேல் மகளிர்க்கு இலவசம் தான்! சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு! 

புதுச்சேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.

அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மகளிர்க்கு அரசு பேருந்துகளில் இலவச பயண சேவை வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் மகளிர்க்கு இலவச பயணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அனைத்து பெண்களும்  புதுச்சேரியில் உள்ள அரசு பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

அடுத்து அவர் சட்டப்பேரவையில் விதவைகளுக்கான உதவித்தொகையை ரூ.2500 இல் இருந்து ரூபாய் 3000 ஆக உயர்த்துவதாக அறிவித்தார். மேலும் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூபாய் 7500 நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

மேலும் புதுச்சேரியில்  மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில்  புதிய தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட  தனது அறிக்கையில் தெரிவித்தார்.