பயணிகளுக்கான நற்செய்தி!! குறைந்த கட்டணத்தில் உள்ளூர் விமான சேவையை அறிமுகப்படுத்தும் ஏர்லைன்ஸ்!!

0
72
Good news for travelers!! Airlines to launch local flights at low fares!!
Good news for travelers!! Airlines to launch local flights at low fares!!

இந்தியாவில் தற்பொழுது பிளாக் ஃப்ரைடே சேல் ஆனது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் தங்களுடைய கட்டணங்களில் குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை செல்லுபடி ஆகக்கூடிய வகையில் கட்டண குறைவு பயண சீட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஏர் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவை கட்டணத்தில் சுமார் 20% வரை தள்ளுபடி வழங்குகிறது மற்றும் பிரபல விமான சேவை நிறுவனமான இண்டிகோ, ஒரு வழி விமான டிக்கெட்டுகளை இப்பொது 1,199ல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

நேற்று நவம்பர் 29, 2024 வெள்ளியன்று தொடங்கியுள்ள இந்த விற்பனையானது, எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி, 2024 திங்கட்கிழமை இரவு 11:59 வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியாவின் இந்த பிளாக் பிரைடே விற்பனையானது, உள்நாட்டு விமானங்களில் சுமார் 20 சதவிகிதம் மற்றும் சர்வதேச விமான வழித்தடங்களில் சுமார் 12 சதவிகிதம் வரை கட்டணக் குறைப்புகளைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த சலுகை காலகட்டத்தில் விமான பயணிகள் செய்யும் முன்பதிவுகள் வருகின்ற 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை மேற்கொள்ளக்கூடிய பயணத்தை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அல்லது வட அமெரிக்கா இடையேயான விமானங்களுக்கான நீட்டிக்கப்பட்ட சலுகை, அக்டோபர் 30, 2025 வரை கிடைக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் கிடைக்கும் இன்னும் பெற தள்ளுபடிகள் :-

✓ UPI மற்றும் இன்டர்நெட் பேங்கிங் பயனர்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச முன்பதிவுகளில் முறையே 400 மற்றும் 1,200 மதிப்புள்ள தள்ளுபடியைப் பெற விளம்பரக் குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.

✓ ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுதாரர்கள் வணிக வகுப்பு டிக்கெட்டுகளில் 3,000 வரை பலன்களைப் பெறலாம்.

இதற்கிடையில், IndiGo தனது Black Friday Sale விற்பனையை பற்றி வெளியிட்டுள்ளது. உள்நாட்டு வழித்தடங்களுக்கு 1,199 ரூபாய் மற்றும் சர்வதேச இடங்களுக்கு 5,199 ரூபாய் முதல் என ஒரு வழி கட்டணத்தை வழங்குகிறது. இந்த விற்பனை ஜனவரி 1 முதல் மார்ச் 31, 2025 வரையிலான பயணத் தேதிகளை உள்ளடக்கியுள்ளது.

விமானச் சலுகைகளுடன், IndiGo, செக்-இன் மற்றும் பேக்கேஜ் டெலிவரியை விரைவுபடுத்தும் 15 சதவிகிதம் மற்றும் அதன் FastForward சேவையில் 50 சதவிகிதம் வரை முன்கூட்டியே செலுத்தப்பட்ட கூடுதல் பேக்கேஜ் தள்ளுபடிகள் உட்பட துணை சேவைகளில் குறைப்புகளை வழங்குகிறது.

Previous article“இயக்குனர் தன் எல்லையைத் தாண்டிவிட்டார்! – மகாராஜா திரைப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்
Next articleபேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு திட்டம்!! மகிழ்ச்சியில் காவல்துறையினர்!!