கடந்த 2021 ஆம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையின் போது, முதல்வர் ஸ்டாலின், ‘போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்’ வரை தங்கள் அடையாள அட்டையை காட்டி, அரசு பஸ்களில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள்,கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தாமல் இருந்ததை அடுத்து, தற்பொழுது அரசு பஸ்சில் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை உள்ளவர்களுக்கு, கட்டணமின்றி பயணம் செய்வதற்கான, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கான அரசாணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.இந்நிலையில், போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை, அரசு பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்வதற்கு, ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க, மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திட்டம் தொடர்பான விவரங்களை அறிக்கை மூலம் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அறிவுறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
காவல்துறையினர் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது தங்களுடைய அடையாள அட்டைகளை காட்டிய இதுவரை பயணித்து வந்த நிலையில் தற்பொழுது இவர்களுக்காக ஸ்மார்ட் கார்டு திட்டம் 2021 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டமானது செயல்படாமல் இருந்த நிலையில் அதனை தற்போது செயல்படுத்த டி ஜி பி அவர்கள் உத்தரவிட்டிருப்பது காவல்துறையினரிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.