இந்தியா ஆஸ்திரேலியா தொடர் தேவையற்றது!!! பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பேட்டி!!!

இந்தியா ஆஸ்திரேலியா தொடர் தேவையற்றது!!! பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பேட்டி!!!

உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்தியா ஆஸ்திரேலியா விளையாடும் ஒருநாள் தொடர் தேவையற்ற ஒன்று என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்தியா அணியும் ஆஸ்திரேலியா அணியும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர்பு செப்டம்பர் 22ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில இந்திய அணியின் இந்த முடிவை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் குறித்து வாசிம் அக்ரம் அவர்கள் “ஒரு நாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் தேவையற்றது. உலகக் கோப்பை தொடரில் விளையாடப் போகும் இந்திய அணியின் வீரர்களுக்கு இந்த தொடர் அதிக சோர்வை தரும்.

ஆகஸ்ட் மாதம் முதல் இந்திய அணி விளையாடி வருகின்றது. உலகக் கோப்பை தொடருக்கும் ஆஸ்திரேலியா தொடருக்கும் இடையே இந்திய அணி வீரர்களுக்கு சிறிதளவு ஓய்வு எடுக்க நேரம் இருக்கின்றது. எனவே தான் இந்திய அணியின் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடர் தேவையற்றது என்று கூறினேன்.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவதற்கு வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். விளையாடும் பகுதிகளுக்கு பயணம் செய்வதற்கே ஒருநாள் ஆகும். உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு ஆற்றலுடன் இருக்க வேண்டியது முக்கியமானதாகும். இப்படியான சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுவது ஏன் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.