எம்ஜிஆர் கேட்ட அதே கேள்வி !! குலுங்க போகும் திருச்சி மாநாடு ஓபிஎஸ் ஆதரவாளர் முழக்கம்!!

0
186
#image_title

எம்ஜிஆர் கேட்ட அதே கேள்வி !! குலுங்க போகும் திருச்சி மாநாடு ஓபிஎஸ் ஆதரவாளர் முழக்கம்!!

அதிமுகவில் நாளுக்கு நாள் பொது செயலாளர் தேர்தல் தொடர்பாக எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பிற்கும் இடையே கருத்து மற்றும் நீதிமன்ற மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன, அதிமுகவில் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா இருந்து வந்த நிலையில், அவரின் மறைவிற்கு பிறகு எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இடையே கடுமையான போட்டி நிலவி வந்த போது எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக அவரது ஆதரவாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என கூறி பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு அவற்றின் மூலம் எடப்பாடிக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர் பன்னீர்செல்வம் தரப்பினர்.

இந்த நிலையில் எடப்பாடிக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வந்த போதும் தாங்கள் விடுவதாக இல்லை என்பது போல, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவசர வழக்கில் பொது செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம் அதற்கு எந்தவித தடையும் இல்லை, ஆனால் முடிவுகளை மட்டும் அறிவிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தார் நீதிபதி குமரேஷ் பாபு.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும், மக்கள் நீதிமன்றத்தில் தங்களுக்கான நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றும், விரைவில் திருச்சியில் மாபெரும் மாநாடு ஒன்றிணை நடத்தி அங்கு வரும் மக்கள் முன்பு, எப்படி திண்டுக்கல்லில் எம்ஜிஆர் மக்கள் முன்பு நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டாரோ அதேபோல் பன்னீர்செல்வம் அவர்களும் மக்களிடத்திலே கேட்பார்.

நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தாலும், நாங்கள் மக்கள் மன்றத்திற்கு செல்வோம், அதிமுகவில் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதாவை தவிர மற்ற யாரையும் நாங்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை, அந்த பதவிக்கு வர யாருக்கும் தகுதி இல்லை அதனால்தான் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் கொண்டு வரப்பட்டதாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.