லவ் யூ ஆல், மிஸ் யூ ஆல் பாதுகாப்பாக இருங்கள்!!! நடிகர் விஜய் ஆண்டனி மகள் எழுதிய கடிதம்!!!

0
73
#image_title

லவ் யூ ஆல், மிஸ் யூ ஆல் பாதுகாப்பாக இருங்கள்!!! நடிகர் விஜய் ஆண்டனி மகள் எழுதிய கடிதம்!!!

நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் அவருடயை அறையில் இருந்து கண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா அவர்கள் தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று(செப்டம்பர்19) அதிகாலையில் மீரா அவர்கள் அவருடைய அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டுள்ளார். பின்னர் மீராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இதை கேட்ட நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் உறவினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு மீரா அவர்களின் உடல் நடிகர் விஜய் ஆண்டனியின் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உறவினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையறிந்த சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சமூக வலைதளத்தில் மூலமாகவும் நடிகர் விஜய் ஆண்டனி அவர்களுக்கு ஆறுதல் கூறி மகள் மீரா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது மீரா அவர்களின் தற்கொலைக்கான காரணத்தை அறியும் விதமாக காவல் துறையினரும், தடயவியல் நிபுணர்களும் மீராவின் அறையை சாதனை செய்தனர். அப்பொழுது மீராவின் பாடப் புத்தகத்தில் அவர் எழுதிய கடிதம் இருந்துள்ளது.

அந்த கடிதத்தில் நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா அவர்கள் “என்னுடைய நண்பர்களை மிஸ் செய்வேன். என்னுடைய ஆசிரியர்களை மிஸ் செய்வேன். எல்லாரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். லவ் யூ ஆல். தேங்கா யூ ஆல்” என்று எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.