ஜெயிலர் திரைப்படத்தில் வர்மனாக நடித்த விநாயகன் வாங்கிய சம்பளம்!!! சம்பளம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் விநாயகன்!!!

0
56
#image_title

ஜெயிலர் திரைப்படத்தில் வர்மனாக நடித்த விநாயகன் வாங்கிய சம்பளம்!!! சம்பளம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் விநாயகன்!!!

ஜெயிலர் திரைப்படத்தில் வர்மன் கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன் அவர்களிடம் சம்பளம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் விநாயகன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பதில் அளித்துள்ளார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜேக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், வசந்த் ரவி, யோகி பாபு, யூடியூப் பிரபலம் ரித்விக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்த ஜெயிலர் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

உலக அளவில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை பெற்றது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஆகியோர்களுக்கு கார்களை பரிசாக வழங்கினார். மேலும் ஜெயிலர் திரைப்படத்தின் இலாபத்தில் இருந்து விருப்பப்பட்ட தொகையை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஆகியோர்களுக்கு வழங்கினார். இதையடுத்து திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்த விநாயகன் அவர்களுக்கு எதுவும் கொடுக்கவில்லையா என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும் நடிகர் விநாயகன் அவர்கள் சமீபத்தில் அளித்த நேர்காணல் பேட்டி ஒன்றில் அவரிடம் “ஜெயிலர் திரைப்படத்தில் நடித்ததற்காக உங்களுக்கு 35 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது என்று கூறுகிறார்கள். அந்த தகவல் உண்மையா?” என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகர் விநாயகன் அவர்கள் ” ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்ததே என்னுடைய பாக்கியம் ஆகும். சம்பளம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் சொன்ன தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகவே தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் எனக்கு சம்பளமாக அளித்தார்” என்று அவர் கூறியுள்ளார்.