சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் அலைமோதும் மக்கள் கூட்டம்!!

சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாத பௌர்ணமி நாளில் சைவர்கள் கொண்டாடும் விழாவாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள்.

அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும்.சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்கு சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இதையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன் ஒரு பகுதியாக நீரோடைகளில் பக்தர்கள் யாரும் இறங்கி குளிக்க கூடாது என்றும்
சாமி தரிசனம் முடிந்தவுடன் உடனடியாக அடிவாரம் திரும்ப வேண்டும் என்றும்
மலைப்பகுதிகளில் இரவில் தங்க அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பிலும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.