சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதியின் மாமனிதன் 40 விருதுகளை வென்றது 

0
206
Maamanithan
Maamanithan

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதியின் மாமனிதன் 40 விருதுகளை வென்றது

சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் 40 விருதுகளை குவித்துள்ளது.

இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து நல்ல வரவேற்பை பெற்றப்படம் மாமனிதன். இந்தப்படத்தில் , இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் இணைந்து முதல் முறையாக இசையமைத்தனர்.

இந்தப்படத்துக்கு பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றுவரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், மாமனிதன் படத்துக்கு 40 விருதுகளைப் பெற்றுள்ளது. மற்றும் ஐஎம்டிபி நடத்தும் 3 விழாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Previous articleநாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு
Next articleநடிகர் பிரபாஸ் இந்தி நடிகை கிருதி சானோன் இடையேகாதலா? அவரே அளித்த விளக்கம்