ஓபிஎஸ்யின் ட்விட்டர் பதிவு! நோயை உடனடியாக கட்டுப்படுத்த  கோரிக்கை!

ஓபிஎஸ்யின் ட்விட்டர் பதிவு! நோயை உடனடியாக கட்டுப்படுத்த  கோரிக்கை!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் அளவில் பாதிப்படைந்தது. நடப்பாண்டில் தான்  கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா பரவல் தற்போது வேகமெடுத்துள்ளது அதனால் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.  கொரோனாவை அடுத்து டெங்கு,ப்ளூ மற்றும் பன்றி காய்ச்சல் ஆகியவை பரவ தொடங்கியுள்ளது எனவே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓபிஸ் அவரத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தவும், ஆங்காங்கே பரவி வரும் டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கையினை எடுத்திடுக!

இவ்வாறான காய்சல் பரவி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் சுகாதார துறை அறிவுறுத்தலை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.