Sunday, July 13, 2025
Home Blog Page 3376

அகில இந்தியாவைக் கலக்கிய புஷ்பா… இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று

0

அகில இந்தியாவைக் கலக்கிய புஷ்பா… இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கிய புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்தது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிய படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வந்த இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பேன் இந்தியா ஹிட்டானது. இதையடுத்து பாகுபலி படம் போல இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகியுள்ளது.

முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகியும் இரண்டாம் பாகம் தொடங்கப்படவில்லை. முதல் பாகத்தின் எதிர்பாராத வெற்றியால் இரண்டாம் பாகத்தில் பல மாற்றங்களை இயக்குனர் சுகுமார் செய்து வருவதாக சொல்லப்பட்டது. அதையடுத்து படத்தின் கதையை சர்வதேச நாடுகளில் நடப்பது போல மாற்றியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா தி ரூல் படத்தின் பூஜை இன்று தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது புஷ்பா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. ஏற்கனவே இரண்டாம் பாகத்துக்கான சில காட்சிகளை படமாக்கி விட்டதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில் எஞ்சியுள்ள காட்சிகளை விரைவில் படமாக்கி அடுத்த ஆண்டில் படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் பாகத்தில் இந்த படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர் விலகல்… இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதியாக இருப்பார்கள்… மூத்த வீரர் கருத்து

0

பாகிஸ்தான் அணியில் முக்கிய வீரர் விலகல்… இந்திய பேட்ஸ்மேன்கள் நிம்மதியாக இருப்பார்கள்… மூத்த வீரர் கருத்து

ஆசியக்கோப்பை தொடரை வெகு சுவாரஸ்யமான ஒரு தொடராக மாற்றி இருப்பதே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிதான்.

கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த வெற்றியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி முக்கிய பங்கு வகித்தார், ஏனெனில் அவர் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மாவை முதல் மூன்று ஓவர்களில் வெளியேற்றினார், பின்னர் கேப்டன் விராட் கோலியை வெளியேற்றினார்.

இந்நிலையில் இப்போது அசுரபார்மில் இருக்கும் அவர் காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் “ஷாஹீனின் காயம் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஆசியக்கோப்பையில் அவர் இருக்க மாட்டார் என்பது வருத்தமாக இருக்கிறது.” என்று அவர் டிவீட் செய்திருந்தார்.

வக்கார் யூனிஸின் இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் “இந்த ஆசிய கோப்பையில் பும்ரா மற்றும் ஹர்ஷல் விளையாடாதது மற்ற அணிகளுக்கு ஒரு நிம்மதி!” என டிவீட் செய்துள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு  முக்கிய அறிவிப்பு… ஜெயிலர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

0

இன்று காலை 11 மணிக்கு  முக்கிய அறிவிப்பு… ஜெயிலர் அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்!

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமாக ஜெயிலர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார். ரஜினியுடன் தமன்னா, பிரியங்கா மோகன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதுபோல நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது யோகிபாபுதான் அந்த வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. நெல்சனின் கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் யோகி பாபுதான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல ரஜினிகாந்தின் தர்பார் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார்.

ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் இப்போது சன் பிக்சர்ஸ் ஜெயிலர் திரைப்படம் பற்றிய ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் “ஆகஸ்ட் 22 காலை 11 மணி” என்று அறிவித்துள்ள நிலையில் படத்தின் முக்கியமான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் ஷூட்டிங் பற்றியோ அல்லது படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் பற்றியோ முக்கியமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில படங்கள் ரஜினிகாந்துக்கு வெற்றியைக் கொடுக்காத நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை அவர் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி.. இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?

0

இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி.. இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமா?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.

இந்திய அணி ஜிம்பாப்வே கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டையும் வென்றுள்ள இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை வென்றுள்ளது.

அதனால் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் இதுவரை தொடரில் வாய்ப்பளிக்கப்படாத ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாட்டி ஆகியோருக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய நேரப்படி 12.45 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இறுதிப்போட்டியையும் வென்று இந்திய அணி ஜிம்பாப்வே அணியை வொயிட்வாஷ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிம்பாப்வே உத்தேச அணி

இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியுச்சி, தனகா சிவாங்கா

இந்தியா உத்தேச அணி

ஷிகர் தவான் / ருத்துராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் (கேட்ச்), ஷுப்மான் கில், இஷான் கிஷன், தீபக் ஹூடா/ ராகுல் திரிபாட்டி, சஞ்சு சாம்சன் (வி.கே.), அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர்/தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்/அவேஷ் கான்

அவர்கள் இருவரும் இல்லாததை பாகிஸ்தான் அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்… மூத்த வீரர் அறிவுரை

0

அவர்கள் இருவரும் இல்லாததை பாகிஸ்தான் அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்… மூத்த வீரர் அறிவுரை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியகோப்பை போட்டி பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் அணிகள் ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதையடுத்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும் ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் மோத உள்ளன.

இதில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை அடுத்த சுற்றுக்கு இரு அணிகளுமே தகுதி பெற்றால் மேலும் இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம் இந்த தொடரில் இரு அணிகளும் மூன்று முறை மோத வேண்டிய சூழல் ஏற்படலாம். இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே முடிந்துள்ளது.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னார் வீரர் சர்பராஸ் நவாஸ் பாகிஸ்தான் அணிக்கு ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அதில் “இந்தியா அணியில் பூம்ரா மற்றும் ஷமி இல்லாதது பாக் அணிக்கு சாதகமான ஒன்று.

அதை பாகிஸ்தான் அணி சரியாக பயன்படுத்திக் கொண்டால் கடந்த உலகக்கோப்பை போட்டியில் வென்றது போல ஆசியக் கோப்பையிலும் வெற்றி பெறலாம். ஒவ்வொரு போட்டியிலும் பந்துவீச்சாளர்களே முடிவைத் தீர்மானிக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

“14”ஆண்டுகளுக்கு பின் இப்போது இணையும் கச்சிதமான ஜோடி!..இவர்கள் தானா?

“14”ஆண்டுகளுக்கு பின் இப்போது இணையும் கச்சிதமான ஜோடி!..இவர்கள் தானா?

 

நடிகர் விஜய்யின் 67 ஆவதுபடத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார். தளபதி 67 பற்றி பல செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன.அதே நேரத்தில் த்ரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது. இப்போது லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தில் த்ரிஷா பங்கேற்பது குறித்து சூசகமாக கூறியுள்ளார்.சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த இயக்குனருக்கான இறுதி ஸ்கிரிப்டை உருவாக்குவதில் தனது கவனத்தை மாற்றியதால் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுத்தார்.மேலும் அவரது இடைவேளை குறித்து ரசிகர்களுக்கு புதுப்பிக்கப்பட்டது.ஆனால் இயக்குனர் இன்னும் சமூக ஊடகங்களில் ஒரு கண் வைத்திருப்பது போல் தெரிகிறது.இதற்கிடையில் சமீபத்தில் நடிகை த்ரிஷாவை தனது ட்விட்டர் பக்கத்தில் பின்தொடரத் தொடங்கினார்.

 

 

தளபதி 67 படத்தில் த்ரிஷா பங்கேற்பது குறித்து லோகேஷ் கனகராஜின் மறைமுகமாக கூறி வருகிறார்கள் என ரசிகர்கள் கூறுகின்றனர்.தங்களுக்கு பிடித்த ஜோடி மீண்டும் இணைவதைப் பற்றி உற்சாகமாக இருக்கிறார்கள். கில்லி,திருப்பாச்சி,ஆதி, குருவி,ஆகிய படங்களில் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்துள்ளார்கள். மேலும் இந்த ஜோடி தமிழ் சினிமாவில் திரையுலகில் பிடித்த ஜோடிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

 

இதற்கிடையில் தளபதி 67 படத்தில் சமந்தாவும் மற்றொரு நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் சஞ்சய் தத் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் அர்ஜுன் சர்ஜா ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களுக்காக அணுகப்பட்டதாகக் கூறப்படுகிறது. தளபதி 67 அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் பட வெளியீட்டின் போது தயாரிப்பாளர்கள் நடிகர்கள் மற்றும் குழுவினரை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவற்றை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என தெரிகிறது.

நீங்கள் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களா?. அடடே அப்படி கடிப்பதால் இந்த விளைவு தான் உங்களுக்கு?..

நீங்கள் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களா?. அடடே அப்படி கடிப்பதால் இந்த விளைவு தான் உங்களுக்கு?..

 

நகச்சுற்று என்பது நகக்கண்ணில் வரும் புண் அல்லது நகத்தின் வெளி ஓரமாகவோ அல்லது நகத்தைச் சுற்றியுள்ளப் பக்கங்களில் உள்ள நகமடலின் தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித்தொற்று தான் நகச்சுற்று. அவ்விடம் வீங்கிச் சற்று சிவந்து கடுமையான வலியையும் ஏற்படுத்தும். தொட முடியாதளவு கடும் வலி ஏற்படுத்தும்.நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இது மிக அதிகமாக ஏற்படுகிறது.கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும்.

நகத்தை வெட்டும்போது சற்று ஆழமாக வெட்டி நகமடலைச் சேதமாக்குவதால் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமித் தொற்றிச் சீழ் பிடிப்பதால் நகச்சுற்று ஏற்படுகிறது.சில சருமநோய்களால் ஏற்படுகிறது. பெம்பிகஸ் போன்ற நோய்களால் சருமத்தின் மிருதுத்தன்மை பாதிப்படையும்போது அதில் கிருமித்தொற்று ஏற்பட்டுகிறது.சமையல் வேலை தோட்ட வேலை தச்சு வேலை போன்ற காயம் ஏற்படக்கூடிய எந்த வேலைகளின் போதும் தற்செயலாக அவ்விடத்தில் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றி நகச்சுற்றை ஏற்படுத்தும்.நகத்தின் ஓரமாகச் சிலருக்கு தோல் வளர்ந்து நீட்டிக்கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் ர்யபெ யேடை என்பார்கள். இதைப் பிய்த்து எடுக்க முயலும் போது அல்லது கத்தரியால் வெட்டும்போதும் காயம் பட்டுச் சீழ்பிடித்து அதனால் நகச்சுற்று ஏற்படுகிறது.பொதுவாகக் காயம் ஏற்பட்டு 2 முதல் 5 நாட்களில் அவ்விடத்தில் வலி தோன்றும். பின்னர் சீழ்ப்பிடித்து வீங்க ஆரம்பிக்கும்.இதனால் பெரும் அவதிக்கு உள்ளாகுவீர்கள்.

 

 

அச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?..

அச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான  அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?..

மூளையைத் தாக்கும் ஒரு நோய்தான் வலிப்பு நோய் என்கிறோம். அதாவது மூளையில் ஏதாவது ஒரு காரணத்தினால் உண்டாகிற அதீத அழுத்தத்தால் வேகமாக மின்சாரம் போல் உற்பத்தியாகி நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை ,கால்கள் உதறத் தொடங்குகின்றன.இதுதான் வலிப்பு என்று கூறுகிறோம். பரம்பரை தலையில் அடிபடுதல் பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு மூளையில் கட்டி ரத்தக்கசிவு ரத்தம் உறைதல் கிருமித் தொற்று மூளைக் காய்ச்சல் மூளை உறை அழற்சி காய்ச்சல் டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும். சர்க்கரை நோய் விபத்து போன்ற காரணங்களால் வலிப்பு நோய் உண்டாகும்.

மைய நரம்பு மண்டலத்திற்கு இழைக்கப்படும் சேதங்களால் ஏற்படும்.பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள் அல்லது சிராய்ப்புகளால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது.சிலருக்குப் பிறப்பின் போதே இருக்கும் நரம்புமண்டலக் குறைப்பாடு.விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்கள், மூளையில் ஏற்படும் கட்டிகள்,ஆல்கஹால் போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் நரம்பு மண்டலம் பாதித்தல் மூளைக் காய்ச்சலால் வலிப்பு வர வாய்ப்புள்ளது.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும்!!..அவல் பிரியாணி உங்களுக்கு செய்ய தெரியவில்லையா வாங்க கத்துக்கலாம்!.. 

குழந்தைகள் விரும்பி சாப்பிடும்!!..அவல் பிரியாணி உங்களுக்கு செய்ய தெரியவில்லையா வாங்க கத்துக்கலாம்!..

 

அவல் பிரியாணி செய்ய தேவை படும் பொருட்கள் இவைகள் தான்.தேவையான பொருள்கள்; கெட்டி அவல் – 2 கப், வெங்காயம் – ஒன்று , தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, காரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர், உருளை – ஒரு கப், மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி, தனியா தூள் – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி, கரம் மசாலா தூள் – கால் தேக்கரண்டி, இஞ்சி – ஒரு அங்குல துண்டு, பூண்டு – 4 பல், சோம்பு, பட்டை, இலவங்கம் – தாளிக்க, எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி, எண்ணெய் – 3 தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு, புதினா, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

 

வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்,செய்முறை ; காய்கறிகளை பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.அவலை களைந்து நன்கு கழுவி அரை கப் தண்ணீர், தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து பிசறி ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, இலவங்கம் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.அதனுடன் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.பிறகு எல்லா பொடிகளையும் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.அதில் அரிந்து வைத்துள்ள புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.பிறகு வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளற வேண்டும். காய்கறிகள் மீது மசாலா நன்கு பரவும் வரை வதக்கவும்.பின்பு அவல் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கினால் சுவையான அவல் பிரியாணி ரெடி.

தினம் ஒரு திருத்தலம்… வற்றாத ஊற்று… சகஸ்ர லிங்கம்..!!அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்…!!

தினம் ஒரு திருத்தலம்… வற்றாத ஊற்று… சகஸ்ர லிங்கம்..!!அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில்…!!

 

தினம் ஒரு திருத்தலம் இப்பகுதியில் நாம் இன்று அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க.ஈரோடு மாவட்டத்தில் உள்ள உதயகிரி என்னும் ஊரில் அருள்மிகு முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலுக்கு எப்படி செல்வது ஈரோட்டிலிருந்து சுமார் 43 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.சித்திரை மாதத்தின் சில நாட்கள் சூரியன் மூலவர் மீது விழும் அற்புத காட்சியால், ஸ்ரீ உதயகிரி வேலாயுதசாமி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுவது சிறப்பு.அக்னி, வாயு உள்ளிட்ட பஞ்சலிங்களும், ஒரே மண்டபத்தில் வரிசையாக அமைந்துள்ளன.ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள் அமைந்துள்ள சகஸ்ர லிங்கம் அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்பாகும்.

காலபைரவர் தனி சன்னதியிலும், சனீஸ்வரர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோர் தனி சன்னதிகளிலும் எழுந்தருளிகின்றனர்.இக்கோயிலுக்கு அருகில் தாமரைக்குளம் உள்ளது. வற்றாத ஊற்றுடன் மலை மேல் அமைந்துள்ள இக்குளத்தில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பது சிறப்பான ஒன்றாகும்.இங்கு வலது புறத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயமும், இடது புறத்தில் ஸ்ரீ காசிவிசாலாட்சியும் எழுந்தருளிகின்றனர்.கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம், திருக்கல்யாண மண்டபம், வாகன மண்டபம், அமுத மண்டபம் என ஆகம விதிப்படி ஒரு ஏக்கர் பரப்பளவில் முழுவதும் கற்களால் அமையப்பெற்றுள்ள பழமையான கோயிலாக இக்கோயில் விளங்குகிறது.

நில மட்டத்திற்கு கீழ், குகை போன்ற அமைப்பில் இத்திருக்கோயில் காணப்படுகிறது.தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானிடம் மனமுருகி எது வேண்டினாலும் அள்ளி கொடுப்பார் என்பது நம்பிக்கை.இத்திருக்கோயிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.