Sunday, July 13, 2025
Home Blog Page 3377

தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..!

தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..!
தமிழகத்தில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை நாளை முதல் இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துளளது. மேலும் 12ம் வகுப்பு  துனைத்தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக நாளை பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும்  இந்த இணையதளத்தில் நுழைந்த உடன் ரிசல்ட் என்று தோன்றும் அதில் 12ம் வகுப்பு துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை கிளிக் செய்து மாணவர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விடை தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் வருகின்ற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை உரிய கட்டணம் செலுத்தி மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் குறிப்பாக விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 275 மற்றும் மறு கூட்டல் கட்டணமாக உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாய் மற்ற பாடங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 205 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி பேசாததால் கணவர் தற்கொலை! போலீஸார் விசாரணை !

மனைவி பேசாததால் கணவர் தற்கொலை! போலீஸார் விசாரணை !

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 37),இவர்  வீடுகளுக்கு சென்று பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி மலர்மதி (35). இந்த தம்பதிகளுக்கு  2 மகள்கள் உள்ளனர்.மேலும் ராஜா குடிப்பழக்கத்திற்கு  அடிமையானவர்.இவர் பல ஆண்டுகளாக குடித்து வருவதால் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மருந்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில்  மருத்துவர், ராஜா இனி குடிக்க கூடாது என்று  கூறியுள்ளார். மருத்துவர் கூறியதை கேட்டு  கடந்த 3 மாதங்களாக ராஜா குடிக்காமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடிரென்று ராஜா மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அவர் குடித்து வந்ததையடுத்து அவருடைய மனைவி மலர்மதி கோபித்துக்கொண்டு கணவருடன் பேசாமல் இருந்துள்ளார். இதனால் வேதனை அடைந்த ராஜா, வீட்டில் யாரும் இல்லாத போது  சேலையால் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு இடையே அதிர்ச்சியை எற்படுதிவுள்ளது. இது  குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கண்ணிமைக்கும் நொடியில் பெண் உயிரிழப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

கண்ணிமைக்கும் நொடியில் பெண் உயிரிழப்பு! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவர் டி என் பி எல் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருடைய மனைவி திவ்யபாரதி. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று காலை திவ்யபாரதி வழக்கம் போல் அவரின்  வீட்டின்   அருகில் உள்ள பைபிள் குடிநீர் எடுத்து வருவதற்காக சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று திவ்யபாரதியை கடித்து விட்டது. அந்த பாம்பானது அவ்விடத்தில்லிருந்து சென்று மறைந்து விட்டது. அதனையடுத்து திவ்யபாரதி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அந்த  சிகிச்சை பலன் அளிக்கவில்லை என மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ கேம்மால் ஏற்ப்பட்ட விபரீதம்! பள்ளி மாணவி தற்கொலை!

வீடியோ கேம்மால் ஏற்ப்பட்ட விபரீதம்! பள்ளி மாணவி தற்கொலை!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள துளுக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் லாறி பட்டறை மெக்கானிக்காக கர்நாடக மாநிலத்தில் தங்கி பணி புரிந்து வருகிறார்.இவரின் மனைவி பரிமளா கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு 15 வயதில் ஹரிணி ஶ்ரீ என்ற மகள் உள்ளார் .இவர் அதே பகுதியில் உள்ள ஒன்றிய பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த பத்தாம் தேதி செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார்.செல்போனை அதிகமாக பயன்படுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.அதனை கவனித்த மாணவியின் தயார் பரிமளா இப்போது அதிகமாக செல்ஃபோன் பயன்படுத்தி வருகிறாய் என கண்டித்து உள்ளார்.தயார் கண்டித்ததும் கோபம் அடைந்த மாணவி அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அதனை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மாணவி ஹரிணி ஶ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு! ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் ஆய்வு முடிவு?

எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு! ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் ஆய்வு முடிவு?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவர்களை விசாரணை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி மருத்துவர்களை விசாரிக்க ஏழு பேர் கூடிய எய்ம்ஸ் மருத்துவ குழு அமைக்கப்பட்டது. அந்த மருத்துவ குழு ,தற்பொழுது மருத்துவர்கள் அளித்த  வாக்குமூலங்கல் மற்றும்  அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கைகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர்.அந்த ஆய்வில் முடிவடைந்ததும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மூன்று பக்கத்தில் பதில் அளித்தனர்.

அதில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் ,தைராய்டு சர்க்கரை அளவு அதிகம் போன்றவை  இருந்ததாகவும் கூறப்படுகிறது.அதற்கு சிறப்பு மருத்துவங்கள் சிகிச்சை அளித்ததாகவும்  குறிப்பிட்டுள்ளனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது திராட்சை, கேக் போன்ற இனிப்புகளையும் சாப்பிட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. 20.09.16 அன்று  இரவு பத்து மணி அளவில் ஆம்புலன்ஸ் தேவை என ஜெயலலிதா இல்லத்திலிருந்து தொடர்பு கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.பின்னர் ஜெயலலிதாவிற்கு அப்போதிருந்த  உடல்நிலை பார்த்து அங்கேயே முதல் கட்ட சிகிச்சை அளித்த பிறகு தான்  மருத்துவமனைக்கு  கொண்டுவரப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்ன சர்க்கரையின் அளவை குறைக்க இன்சுலின் உள்பட நோய் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் அவருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்காலிகமாக பேஸ் மேக்கர் கருவியும் ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து  லண்டன் மருத்துவர்கள் உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள் மற்றும்  எய்ம்ஸ் மருத்துவ குழுவினர்  சிகிச்சை அளித்து வந்ததாகவும் அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதியில்  இனி பதிவெண் இல்லாத வாகனங்கள் பறிமுதல்!

போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதியில்  இனி பதிவெண் இல்லாத வாகனங்கள் பறிமுதல்!

சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு கூடுதல் காவல் ஆணையர் கபில்குமார் ஸ்ரீ சரத்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சென்னையில் மோட்டார் சைக்கிளில் வாகன பதிவெண் பலகையை பொருத்தாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. அதனையடுத்து அந்த வாகனங்கள் பந்தயங்களிலும் ,சாகசங்களிலும், குற்ற சம்பவங்களில் போன்றவைகளில் ஈடுபடுகின்றன எனவும் தகவல் வெளியாகிறது.

இதை கட்டுப்படுத்தி தடுக்கும் வகையில் கடந்த 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சிறப்பு வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அந்த சோதனையில் வாகன பதிவின் பலகை இல்லாமல் சென்ற 828 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது அந்த வாகன உரிமையாளர்களின்  மீது ஏதேனும் குற்றவவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா. அந்த வாகனங்கள் இதற்கு முன்பு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் குற்றச்சம்பங்களில் யாரும் ஈடுபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு வாகன பதிவின் பலகை பொருத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 813 வாகனங்களில் பதிவெண் பலகை பொருத்தி அவை விடுவிக்கப்பட்டது எனவும் கூறினார். 15 வாகனங்களுக்கு எந்த ஒரு ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்ட அனைவரும் வாகன பதிவெண் பலகையை பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிலையில் சாலைகளில் பதிவெண் பலகை இல்லாத வாகனங்களை பார்த்தால் பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவிக்கலாம் இதற்கான சமூக ஊடங்களில் போக்குவரத்து போலீஸ் சார்பில்  குறுந்தகவல் பரப்பப்பட்டு வருகிறது எனவும் கூறினார். பதிவெண் பலகை மீது ஏதேனும் எழுதினாலும் ,படங்கள், ஸ்டிக்கர் ஒட்டினால் குற்றம் தான் எனவும் அறிவித்தார். ஒரு லட்ச வழக்குகள் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை வாகன பதிவெண் பலகை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

தலைகவசம் அணியாமல் வாகன ஓட்டுபவர்கள் மீது தினந்தோறும் 300 வழக்குகளும், மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது தினந்தோறும்  100 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இரண்டு வாரமாக  சிறப்பு வாகனத்தணிக்கை  செயல்பட்டு வருகிறது. சிறப்பு வாகன தணிக்கையில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது மட்டும் சுமார் 250 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் கவனமாகவும் ,தலைக்கவசம் அணிந்தும் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு!

அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. அதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓ பன்னீர் செல்வம் ,  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் பலர் காயமடைந்தனர். அதிமுக அலுவலகம் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர்  சீல் வைத்தனர்.

மேலும் இது தொடர்பான வழக்கில் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வன்முறையை தவிர்க்க கடந்த 21 முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை அதிமுக அலுவலகத்தில் தொண்டர்களை அனுமதிக்க கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் இன்று முதல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவினர் இப்போதும் ஓபிஎஸ் ,இபிஎஸ் தலைமையில் இரு அணியாக செயல்பட்டு வருகின்றனர். இரு அணியினரும் அதிமுக அலுவலகத்திற்கு வரும்போது மோதல் ஏற்படுமா என்கிற சந்தேகம் இருந்து வருகிறது . இந்நிலையில் அதிமுக அலுவலகத்தில் இரு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 35 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை ! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை ! நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!

பெண்கள் எப்பொழுதும் முக அழகிற்கு தனி கவனம் செலுத்துவார்கள். முகத்தில் முகப்பரு கருவளையம் தழும்புகள் இதுபோன்று ஏதேனும் ஒன்று இருந்தால் கூட அதற்கென தனி கவனம் செலுத்தி முகத்தை பராமரிப்பதில் முதலிடம் பெண்கள் தான். அந்த வகையில்

தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.

புதினா மற்றும் கொத்தமல்லி இலை அரைத்து தினமும் உதட்டில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும். உங்களுக்கு மென்மையான பட்டுப் போன்ற சருமம் வேண்டுமெனில், ஓட்ஸ், பால், வெள்ளரிக்காய் சாறு மற்றும் சிறிது கொத்தமல்லி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள் இருந்தால், கொத்தமல்லி சாறு சிறிது மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, கரும்புள்ளிகள் நீங்கும்.

சிலருக்கு முகத்தில் சிவப்பு நிற தடிப்புக்கள் ஏற்படும். இந்த பிரச்சினையில் இருந்து விடுபட கொத்தமல்லி சாறு, தக்காளி சாறு மற்றும் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.

தினமும் இரவில் படுக்கும் முன், கொத்தமல்லி இலை சாற்றினை உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் சிறப்பான பலனைக் காண அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் கலந்து பயன்படுத்துங்கள்.

சிறிது கொத்தமல்லி இலைகள், தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லை சரிசமமாக எடுத்துக் கொண்டு நன்கு அடித்து, பின் அதில் சிறிது அரிசி மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.

 

 

விபூதி எந்த விரலில் பூசினால் என்ன பயன்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

விபூதி எந்த விரலில் பூசினால் என்ன பயன்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால் அவ்விடங்களில் வலிமை அதிகமாகும் என்ற கருத்து நிலவுகிறது.

இதனால் தான் திருநீறு பூசுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாகக் கருதப்படுகிறது. நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது.

சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் அதிர்வுகளை உள்ளனுப்பும் செயலை திருநீறு செய்கிறது. அதனால் தான் திருநீறை நெற்றியில் கட்டாயம் பூசுகிறார்கள்.

கட்டைவிரல்:கட்டை விரலால் விபூதியை தொட்டு பூசினால் தீராத வியாதி ஏற்படும் என்பது முன்னோர்களின் வாக்கு.

ஆள்காட்டி விரல்:ஆள்காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசினால் பொருட்கள் நாசமாகும்.

நடுவிரல்:நடுவிரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் நிம்மதி இன்மை ஏற்படும்.

மோதிர விரல்:மோதிர விரலால் விபூதியை தொட்டு பூசினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும்.

மோதிர விரல் மற்றும் கட்டைவிரல்:மோதிர விரல் மட்டும் கட்டைவிரலை பயன்படுத்தி விபூதியை பூசினால் உலகம் உங்கள் வசப்பட்டு அனைத்திலும் வெற்றியை மட்டுமே காணலாம்.

அரசு ஊழியர் கழுத்து அறுத்து கொலை! கரும்புத் தோட்டத்தில் சடலம் மீட்பு!

0

அரசு ஊழியர் கழுத்து அறுத்து கொலை! கரும்புத் தோட்டத்தில் சடலம் மீட்பு!

தினந்தோறும் ஆங்காங்கே கொலை ,கொள்ளை சம்பவம் நடைபெறுவது வழக்கமாகவே ஆகிவிட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்து மாளிகை மேடு என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் திலீப் குமார். இவர் அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு அன்றாடம் சோளக்காடு வழியாக செல்வது வழக்கம். அதுமட்டுமின்றி அவர் சில நேரங்களில் அவர் வீட்டிற்கு அருகில் உள்ள தோப்பிற்கும் செல்வார். அவ்வாறு வீட்டிலிருந்து தோப்பிற்கு செல்லவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

வெகு நேரம் அவர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடி உள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால்  போலீசாரிடம் அவர் குடும்பத்தினர் காணவில்லை என்ற புகார் அளித்தனர். புகார் அளித்ததின் பேரில் போலீசார் அவரைத் தேடி உள்ளனர்.அப்பொழுது அவர் வீட்டின் அருகில் இருக்கும் கரும்பு தோப்பில் கழுத்து அறுத்த நிலையில் சடலமாக கிடந்தார்.

போலீசார் அவர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க சங்கிலி மற்றும் ஸ்மார்ட் போன் காணாவில்லை. யாரேனும் மர்ம நபர்கள் இவர் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் ஸ்மார்ட் போனை பிடுங்கிவிட்டு இவரை கொலை செய்து சென்றிருக்கலாம்  என போலீசார் சந்தேகமடைகின்றனர்.இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தும் வருகின்றனர்.