Tuesday, July 15, 2025
Home Blog Page 3385

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்?

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்?

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாறி வருகிறது. இந்நிலையில்  ஹோட்டல்கள், ஷாப்பிங் மால், வணிக வளாகங்கள், கடைகள், மெடிக்கல் ,சில்லறை வியாபார கடை முதல் மொத்த வியாபார கடைகள் , துணி கடைகள்  என அனைத்து இடங்களிலும் பணப்பரிவர்த்தனை செய்வது  என்பது க்யூ ஆர் மூலம்  நடந்து வருகிறது.

மக்கள் அனைவரும் தற்போது அவரவர்களின் வங்கி கணக்கில் இருந்து நேரடிய பணம் செலுத்துகின்றனர். அதற்காக   கூகுள் பிளே, ஃபோன் பே போன்ற செயலி மூலம் அன்றாட தேவைக்கான பொருட்களையும் வாங்கும் பொழுது பணம் பரிவர்த்தனை செய்கின்றனர்.

மேலும் பெரிய தொகையிலிருந்து சிறிய தொகை வரையிலும் வீட்டிலிருந்தபடியே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதற்காகவும் இது போன்ற ஆன்லைன் செயலிகளை பயன்படுத்துகின்றார்கள். இந்நிலையில் ரிசர்வ் வங்கியானது பண பரிவர்த்தனை செய்யும் பொழுது அதற்கான குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்க படலாம் எனவும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஆனது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை முதலமைச்சர் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை! டெல்லியில் பரபரப்பு!

0

புதுடெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நடவடிக்கைக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வரும் டெல்லியில சமீபத்தில் மதுபான ஆயத்தீர்வை குறித்த சில சட்ட மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் மதுபான தயாரிப்பாளர்கள் மது பார் நடத்துதல் மது கடைகள் உரிமம் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பலனடைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

சிபிஐ விசாரிப்பதற்கு ஆளுநர் பரிந்துரை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது, இதை தொடர்பாக சென்ற சில வாரங்களுக்கு முன்னர் காவல் துறை அதிகாரிகள் பலர் பணியினை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மனிஷ் சிசோடியா வீடு மற்றும் துறை சார்ந்த சில அதிகாரிகள், வீடு அலுவலகங்கள், என 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த அதிரடி சோதனையின் மூலமாக சிபிஐ எந்தவிதமான பலனும் அடையப்போவதில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது இது அரசியல் உள்நோக்கம் கொண்டது, கல்வி போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சியை உண்டாக்கியவர் மனீஷ் சிசோடியா.

ஆனாலும் அவர் நாட்டுக்கு நல்லது செய்வதால் அவர் மீது சிலர் குறி வைத்திருக்கிறார்கள். எங்களுடைய நாட்டுப் பணி தொடரும், யாரும் நிறுத்த முடியாது. சிபிஐக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும், அவர் கூறியிருக்கிறார்.

நாட்டில் மறுபடியும் அதிகரிக்கத் தொடங்கிய நோய் தொற்று பாதிப்பு!

0

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற புள்ளிவிவரத்தினடிப்படையில் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 15,754 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,220பேர் நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

இதுவரையிலும் ஒட்டுமொத்தமாக 4,36,85,535 பெயர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். இன்று மட்டும் 47 பேர் இந்த நோய் தொற்றுக்கு உயிரிழந்துள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரையில் 5,27,253 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்கள்.

நாடு முழுவதும் தற்போது 1,01,830 பேர் இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாட்டில் இந்த நோய் தொற்று தினசரி சதவீதம் 3.47 எனவும், வாராந்திர சதவீதம் 3.90 ஆகவும், இருக்கிறது. இந்தியாவில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் சதவீதம் 98.58 சதவீதமாகவும், உயிரிழப்பு சதவீதம் 1.19 சதவீதமாகவும், இருக்கிறது.

தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாட்டில் இதுவரையில் 209.27 கோடி 93.90 கோடி 2வது தவணை தடுப்பூசி மற்றும் 13.18 கோடி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 31,52,882 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கோலாகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா! மதுராவில் குவிந்த பக்தர்கள்!

0

கிருஷ்ணர் பிறந்த இடமான கோவில் அமைந்திருக்கின்ற உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஜென்மாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த விதத்தில், இந்த வருடத்திற்கான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்றைய தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் ஜென்மாஷ்டமி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ணர் ஜென்ம பூமி கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகிறது. நேற்றிரவு முதல் நடைபெற்று வரும் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சென்னையிலுள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

என்னைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது! அதிரடியில் இறங்கிய ஓபிஎஸ்!

0

அதிமுகவின் பொதுக்குழு குறித்து தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவை எதிர்க்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்திருக்கின்ற நிலையில், பன்னீர்செல்வம் அது தொடர்பாக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதாவது அதிமுகவின் தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட இயலாத நிலையில், இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ளார்.

அவர் தாக்குதல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் எம் துரைசாமி, சுந்தர் மோகன், உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நாகலின்றி மேல்முறையீட்டு மனுவை பட்டிலிடும்படி எடப்பாடி பழனிச்சாமி கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமியின் அந்த கூடுதல் மனு எதிர்வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு நடுவில் இந்த வழக்கில் பன்னீர்செல்வம் கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு வழக்கில் தன்னுடைய தரப்பு வாதத்தை கேட்ட பிறகு தான் எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என ஒரு கோரிக்கையுடன் கூடிய கேவியட் மனு பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி கூடுதலான மனுவுடன் பன்னீர்செல்வத்தின் கேவியட் மனுவும், விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. திங்கள்கிழமையன்று எடப்பாடி பழனிச்சாமி மனு ஏற்கப்படும் பட்சத்தில் அடுத்த ஓரிரு தினங்களில் அவருடைய பிரதான மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது!

அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது!

நேற்று அம்பேத்கர் சட்ட பல்கலைகழகம்  அறிவிப்ப ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தின்யின் கீழ் செயல்பட்டு வரும் சட்ட கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி படிப்பில் சேர மாணவர்களுக்கான சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சீர்மிகு சட்ட கல்லூரி 14 அரசு கல்லூரிகளில் மற்றும் திண்டிவனம் தனியார் சரஸ்வதி சட்டக்கல்லூரி போன்றவைகளில்  17610 இடங்களில் மாணவர் சேர்க்கப்பட உள்ளனர்.

மேலும் அதற்கான விண்ணப்ப படிவம் கடந்த நாலாம் தேதி தொடங்கியது. இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க  சட்டப் பல்கலையின் www.tndalu.ac.in/ என்ற அதிகார பூர்வமான  இணையதளத்தில் ஆகஸ்ட்   முப்பதாம் ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அம்பேத்கர் சட்டப் பல்கலை கழகம்  கூறியுள்ளது.இந்த படிப்பில் சேர்வதற்கு தகுதியுடைய மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த கால அவகாச வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!. அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சகர டிஐஜி உத்தரவு!…

கொள்ளையருக்கு உதவிய காவல் ஆய்வாளர்!. அதிரடியாக சஸ்பெண்ட் செய்ய சகர டிஐஜி உத்தரவு!…

சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டிலிருந்து 3.15 கிலோ தங்கம் வியாழக்கிழமை அன்று தனிப்படை போலீசாரால் மீக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கம் வங்கியில் நடந்த நகைக்கொள்ளையில் அமல்ராஜிற்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகைகள் பறிமுதல் குறித்து அமல்ராஜிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரும்பாக்கம் வங்கி கொள்ளை போன சுமார் 31 கிலோ நகைகளும் மீக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் காவல் ஆய்வாளர் வீட்டில் மூன்று புள்ளி ஐந்து கிலோ தங்கம் மீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அரும்பாக்கம் ரசாப் கார்டன் சாலையில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வந்திருந்தது. அந்த வங்கியில் கடந்த 13 ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இச்சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

கொள்ளையர்களை கண்டறிந்து கைது செய்ய 11 தனிப்படைகள் அதில் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் அந்த வங்கி கிளையில் ஊழியராக பணியாற்றி  வந்த கொரட்டூரை சேர்ந்த முருகன் என்பவர் தான் இதற்கு முக்கிய காரணம் என்று தெரியவந்தது.

வங்கிக் கிளையிலே பணியாற்றி வங்கியிலே கொள்ளை அடிக்க சதி திட்டத்தை நிறைவேற்றி இருப்பது தெரியவந்தது. தனிப்படையினர் கொள்ளை நடந்த 24 மணி நேரத்திற்குள் வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த மோ.சந்தோஷ் அதே பகுதியைச் சேர்ந்தவர் தான் வீ.பாலாஜி மற்றும் செந்தில்குமரன் ஆகிய மூன்று பேரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து 8.5 கோடி மதிப்புள்ள 15 கிலோ தங்க நகைகள்,இரண்டு கார்கள்,மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதனிடையே தற்போது காவல்  ஆய்வாளர் அமல்ராஜை பணியிட நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி உத்தரவு வெளியிட்டுள்ளார். காவல் ஆய்வாளரை பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் போலீசார்களிடம் சற்று பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!

0

வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர்!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியிட்டு தேதியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.

வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தைத் திரையரங்குகளில் செப்டம்பர் 15 ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதில் ஒரு பாடலை சிம்புவும் மற்றொரு பாடலை ரஹ்மானும் பாடியுள்ளனர். இரண்டு பாடல்களையும் பாடல் ஆசிரியர் தாமரைதான் எழுதியுள்ளார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அமெரிக்காவில் இருப்பதால் இசை வெளியீடு தாமதம் ஆகி வந்த நிலையில் தற்போது வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி  பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடக்கும்  தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அன்றே படத்தின் டிரைலரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

மதிப்பூதியம் பெறுவோருக்கு கூடுதல் தொகையா? தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அகவிலைப்படி பெற்று வருகின்றனர். அவர்களுக்கான அகவிலைப்படி  உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  மதிப்பூதியம் பெறுவோருக்கும் தனியாக சிறிய தொகை உயர்த்தி தரப்படும் எனவும் நிதி துறை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதனையடுத்து ரூ. 2500 வரை பெரும் பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஐம்பது  ரூபாய் உயர்த்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரூ 2500க்கும் மேலாக பெரும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் நூறு ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் ஜூலை 1 முதல் முன்தேதியிட்ட இந்த தொகையை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீர் தேக்க  தொட்டி போன்றவைகள்  இயக்குபவர்களும் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமாக மொய்த்த ரசிகர்கள்… நடிகையைக் காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்ற தனுஷ்

0

கூட்டமாக மொய்த்த ரசிகர்கள்… நடிகையைக் காப்பாற்றி பத்திரமாக அழைத்துச் சென்ற தனுஷ்

நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் நேற்று வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

நேற்று வெளியான தன்னுடைய திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை தனுஷ் சென்னையின் பிரபல திரையரங்குக்கு சென்று பார்த்தார். அவரோடு படத்தின் நாயகி ராஷி கண்ணாவும் படத்தைப் பார்த்தார். படம் முடிந்து வெளியேறிய போது ரசிகர்கள் கூட்டம் கட்டுப்பாட்டை இழந்து இருவரையும் நெருங்கினர்.

பவுன்ஸர்களாலும் ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் நடிகர் தனுஷ் ராஷிகண்ணாவை கூட்டத்திடம் இருந்து காப்பாற்றி பத்திரமாக தன்னுடைய காரில் ஏற்றி அழைத்துச் சென்றார். இது சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தனுஷ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் நேற்று வெளியான திருச்சிற்றம்பலம். படத்தை இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளார். திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்று இப்போதே சொல்லப்பட்டு வருகிறது.

படத்தில் தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக படத்தில் ரசிகர்களைக் கவர்ந்தது நித்யா மேனன்தான். இந்த படத்துக்குக் கிடைத்து வரும் வரவேற்புக்கு மத்தியில் சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றில் ரசிகர்கள் பாடலுக்கு ஆடும் போது திரையைக் கிழித்த தேவையிலலாத சம்பவமும் நடந்துள்ளது.