Saturday, July 12, 2025
Home Blog Page 4

அதிமுக முக்கிய புள்ளி கொடுத்த பேட்டி.. டென்ஷனான பாஜக!! முதல்வர் வேட்பாளரில் வரும் மாற்றம்??

ADMK BJP: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதில் கட்சிக்குள்ளேயே பல குழப்பங்கள் எழுந்துள்ளது. பாஜக, 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் இலை மேல் தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சிதான் எனக் கூறி வருகிறது. ஆனால் எடப்பாடி இதற்கு முழு மறுப்பு தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி முதல்வர்  வேட்பாளரையும் அறிவித்துவிட்டார். இப்படி இருக்கும் சூழலில் தற்போது அதிமுகவின் அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா அளித்துள்ள பேட்டி சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி யளித்துள்ளார். அதில் கட்டாயம் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது, அதேபோல கூட்டணி குறித்த கேள்விக்கும், கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு என விளக்கம் அளித்தார். வேலுமணி உள்ளிட்டவர்களை வைத்து முதல்வர் வேட்பாளர் நிறுத்தலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக கேள்விகளை எழுப்பினர்?? இப்படி ஒரு எண்ணம் பாஜகவிடம் இருந்தால் தவிடுபொடி ஆகும் என்று எச்சரித்து பேசினார்.

இவ்வாறு அன்வர் ராஜா பேட்டையளித்தது பாஜக மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி நிற்கும் நிலையில் அதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பாஜக மத்தியிலிருந்து ஆர்டர் வந்துள்ளதாம். இது ரீதியாக இன்று எடப்பாடி-யிடம் டெல்லி தலைமையே பேச உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அப்படி பாஜக விதிக்கும் கண்டிஷன்களுக்கு எடப்பாடி ஒத்து வரவில்லை என்றால் கட்டாயம் கூட்டணி உடையும் என கூறுகின்றனர்.

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. வீடு தேடி வரும் ரூ 1000!! கட்டாயம் இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

DMK: திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்களுக்கு மாதம் ரூ 1000 தருவதாக தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தான் இந்த உரிமை தொகை வழங்கப்பட்டது. அதிலும் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இந்த தொகையை கொடுத்து வந்தனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவியதால் விதிமுறைகளுக்கு சில தளர்வுகளை ஏற்படுத்தியது. அதவாது கார்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு இந்த தொகை கிடைக்காமல் இருந்தது.

நாளடைவில் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்கள் முதல் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவி வரை அனைவருக்கும் இந்த தொகையை கொடுக்க உத்தரவிட்டனர். தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு நிபந்தனைகளை தவிர்த்து உள்ளது. அதாவது அரசு துறைகளில் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதிலும் சிறப்பு காலம் வரை ஊதியம் பெறுபவர்களுக்கு கட்டாயம் கிடைக்கும். அரசின் மூலம் மானியம் பெற்று நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் உரிமை தொகை கிடைக்கும்.

மேலும் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட உதவித்தொகை பெரும் குடும்பங்களில் உள்ள பெண்களுக்கும் இந்த உதவி தொகை கிடைக்கும் என கூறியுள்ளனர். அதிலும் இம்முறை வீடு தோறும் சென்று மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு அவர்கள் கைகளிலேயே விண்ணப்பம் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் பெண்கள் முகாம் தேடி அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அதனை சமர்பித்தால் அடுத்த ஓரிரு மாதங்களில் அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என கூறியுள்ளனர்.

கட்சியில் முக்கியத்துவம் இல்லை! புலம்பிய நயினார் – அண்ணாமலை காரணம்?

தமிழகத்தின் பாஜக மாநில தலைவராக தற்போது நயினார் நாகேந்திரன் பதவியில் உள்ளார். ஆனால் அதிமுகவின் கூட்டணிக்காக அண்ணாமலையை நீக்கிவிட்டு இவரை அமர்த்தியுள்ளனர். இதனால் பெரும்பான்மையான நிர்வாகிகளுக்கு இதில் திருப்தி இல்லை. நயினாருக்கு போஸ்டிங் கொடுக்கும்போதே பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. அதனை நாம் சமூக வலைத்தளம் வரை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் நயினாருக்கு கட்சிக்குள் மரியாதை கிடைப்பது சற்று சிரமம் தான். இது ரீதியான பேச்சுக்கள் கட்சிக்குள்ளேயே இருந்த நிலையில் தற்போது இதை அவரே வெளிப்படுத்தி உள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கலையரங்கத்தில் பூத் வலிமைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பாஜக மாநில தலைவர், கட்டாயம் 2026 ஆம் ஆண்டு நாம் வெற்றி பெறுவது உறுதி. அதேபோல யாரும் எதிர்பாராத வண்ணம் முருகர் பக்தர் மாநாடு இருந்தது. தமிழகத்தில் தினம் தோறும் பாலியல் ரீதியான வழக்குகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் லாக்கப் மரணமும் அதிகரித்துள்ளது என்று பேசினார்.

இதனை பேசிவிட்டு தனது உட்கட்சி சார்ந்த புலம்பலையும் கொட்டி தீர்த்துள்ளார். கட்சி நிர்வாகிகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டால் மரியாதை கொடுத்து வணக்கம் கூட சொல்வதில்லை. அதிலும் வடசேரி பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவர் என்னை தெரியவில்லை எனக் கூறிவிட்டார். அதேபோல கடலூரைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்ட போதும் அவரது அப்பா என்று என்னை நினைத்துக் கொண்டாரா என்னவோ தெரியவில்லை, ஒழுங்கா இருந்துக்கோ என கூறிவிட்டு செல்போனை வைத்து விட்டார்.

இந்நிலையில் நான் யாரையாவது தொடர்பு கொண்டு பேசினாலும் முதலில் வணக்கம் சொல்லிவிட்டு பேசுங்கள் என அறிவுரை கூறினார். இவரை கட்சியில் நிர்வாகிகள் மதிக்காததற்கு அண்ணாமலை தான் மிகப்பெரிய காரணம் என்று இதன் மூலமே தெரிகிறது.

பாஜக கூட்டணியை உதறி தள்ளும் அதிமுக.. மீண்டும் தலைவராகப்போகும் அண்ணாமலை!!

ADMK BJP: திமுகவை எதிர்கொள்ளவும் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இவர்கள் முந்தைய கூட்டணி பிரிவதற்கு அண்ணாமலை தான் முக்கிய காரணம். மறைந்த ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் அதிமுக அந்த முடிவை எடுக்க நேரிட்டது. இதனாலையே மீண்டும் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அண்ணாமலை இருக்கக் கூடாது என்ற நிபந்தனையை அதிமுக வைத்தது.

அதேசமயம் அண்ணாமலையும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் பதவியை  விட்டு விலகிக் கொள்கிறேன் என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி இந்த மறு கூட்டணியில் பல வரையறைகள் போட்டப்பட்டு தான் கூட்டணி அமைக்கப்பட்டது. அதிலும் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உளிட்டோருடன் கூட்டணி வைத்துக் கொள் என்று எனக்கு ஆர்டர் போடக்கூடாது என்பதை எடப்பாடி தெள்ளம் தெளிவாக கூறிவிட்டார். அதேபோல பாஜகவும், நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்        கொள்வோம் அதில் தலையிடக் கூடாது என்று பேசிவிட்டது.

இவ்வளவு தெளிவான விதிமுறைகள் போட்டு கூட்டணி வைத்தும் மறைமுக பனிப்போர் இருந்து தான் வந்தது. அதாவது பாஜக, கூட்டணி ஆட்சி தான் என கூறிவந்தது. ஆனால் இதனை எடப்பாடி முழுமையாக மறுத்து வருகிறார். தற்போது அதிமுக கட்சியின் அமைப்பு செயலாளர் அன்வர் ராஜ் கூட்டணி முறையில் ஆட்சி கிடையாது பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது அப்படி ஒரு எண்ணம் இருந்தால் அதிமுக அதனை தவிடு பொடியாக்கும் எனக் கூறிவிட்டார்.

இதனால் மேலிடம் அதிமுகவுடன் வைத்த கூட்டணியை நிறுத்திக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளது. இதனால் அண்ணாமலை மீண்டும் பாஜக மாநிலத் தலைவராக வர அதிக வாய்ப்புள்ளதாம். அதுமட்டுமின்றி பாஜகவின் பூத் கமிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயினாரும் இது குறித்த வேதனையை தான் வெளிப்படுத்தினார். அதாவது என்னை கட்சியில் யாரும் மதிப்பதில்லை என மேடையிலேயே புலம்பி தீர்த்தார். இவை இரண்டையும் ஒன்றுபடுத்தி பார்க்கையில் அண்ணாமலை தமிழக பாஜக மாநில தலைவராக மீண்டும் பதவி ஏற்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

கணவர் விந்தணுவில் விஷம் என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்!! பெண்ணிடம் அவதூறாக நடந்த போதகர்!!

கன்னியாகுமரி காவல்துறையினர், திருமணமான ஒரு இளம் பெண்ணை தனது நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் பெந்தேகோஸ்தே தேவாலயப் போதகரை கைது செய்துள்ளனர்.

“உங்கள் உடல்நலப் பிரச்சினைகள் உங்கள் கணவருடனான உறவிலிருந்து உருவாகின்றன. என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியுடன் நீங்கள் தூங்கினால் நீங்கள் குணமடைவீர்கள்” என்று பாதிரியார் அவளிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம், தக்கலை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைப் பற்றியது. சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். குணமடையும் நம்பிக்கையில், அவர் மெக்கமண்டபம் பகுதியில் உள்ள முழு நற்செய்தி பெந்தேகோஸ்தே தேவாலயத்திற்குச் சென்றார். அங்கு, தனிப்பட்ட பிரார்த்தனை மூலம் தன்னைக் குணப்படுத்த முடியும் என்று பாதிரியார் ரெஜிமோன் கூறினார். அமர்வின் போது, அவர் அவளைத் தழுவித் தாக்க முயன்றார். அந்தப் பெண் தப்பித்து உடனடியாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஜூன் 26, 2025 அன்று பாதிரியார் ரெஜிமோனைக் கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

 

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, அந்தப் பெண் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது, ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் பிற தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். ஆன்மீக குணமடையும் நம்பிக்கையில் உறவினர்கள் அவளை பாண்டிவிலை, மெக்கமண்டபத்தில் உள்ள பாதிரியார் ரெஜிமோனின் தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். வருகையின் போது, தனது வருமானத்தில் 10% தசமபாகத்தை தேவாலயத்திற்கு வழங்கினால், அவரது உடல் நோய்கள் குணமாகும் என்று ரெஜிமோன் அவரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

தவெக வில் திரிஷாவுக்கு பெரிய பதவி.. நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட ஆர்டர்!!

TVK: தமிழக வெற்றிக் கழகத்தில் திரிஷாவுக்கு முக்கிய பதவி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தங்களது எதிரி யார் என்பதை விஜய் மீண்டும் உறுதியாக கூறினார். இதனையடுத்து ஆலோசனை கூட்டம் முடிந்ததும் தனியாக ரகசிய மீட்டிங் நடைபெற்றதாம்.

அதில் முக்கிய அங்கமாக கட்சியில் திரிஷா இருப்பதாகவும் அவருக்கு விஜய்க்கு அருகிலேயே முக்கிய பதவியும் கொடுக்கப்படுவது குறித்து நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம். முன்னதாக வெளியான லியோ படத்திலேயே இருவரும் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததுடன் இவர்கள் குறித்து கிசுகிசுவும் வெளியானது. அச்சமயத்தில் விஜய் வீட்டில் விவாகரத்து வரை பிரச்சனை சென்றதாகவும் கூறப்பட்டது.

தற்போது நடத்தப்பட்ட ரகசிய மீட்டிங்கில் பெரும்வாரியான நிர்வாகிகளுக்கு இதில் ஒப்புதல் இல்லாததால் இது குறித்த ஆலோசனையை தள்ளி வைத்துள்ளாராம். அதிலும் ஒப்புதல் அளித்த போஸ்டிங்கிலிருக்கும் நிர்வாகிகள் மற்றவர்களிடம் இது குறித்து பேசி சமாதானம் வாங்கும் படி விஜய் ஆர்டர் போட்டுள்ளாராம். இது ரீதியாக வரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் ஜனானயகன் படத்தில் கூட திரிஷா இருபதாகவும் அதில் கூட நெருக்கமாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்யை வைத்து திரிஷா அரசியல் என்ட்ரி கொடுப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. ஆனால் இதில் நிர்வாகிகளுக்கு துளி கூட விருப்பமில்லையாம்.

அன்புமணி அதிரடி நீக்கம்.. ராமதாஸ் எடுத்த தடாலடி நடவடிக்கை!! ஆடிப்போன பாமக!!

PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே மோதல் போக்கானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கட்சியை உருவாக்கி தற்போது நிலை நிறுத்தி இருப்பது ராமதாஸான தனது அப்பா தான் என்பதை கூட மறந்து தலைமை பதவிக்கு அன்புமணி போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார். அதிலும் அவருடன் பல்லாண்டு காலம் துணை நின்ற நிர்வாகிகள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கவும் செய்கிறார். இதனையெல்லாம் பொறுக்க முடியாமல் தான் தற்போது அன்புமணியை தலைமை நிர்வாக குழுவிலிருந்து ராமதாஸ் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

முன்பிருந்த நிர்வாக குழுவை கலைத்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜிகே மணி அருள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் ராமதாஸ் கட்சியின் முழு பவரையும் தன் வசப்படுத்த உள்ளது தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கட்சி சார்ந்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இது ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை அன்புமணி உடையது என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ராமதாஸ் கட்சி அதிகாரத்தை முழுமையாக தன் வசம் கொண்டு வந்து முக்கிய பொறுப்புகளில் மகள் வழி பேரனான முகுந்தனை நிலை நிறுத்துவதாக கூறுகின்றனர். இது குறித்து தான் நேற்று தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது கட்சித் தலைமை நிர்வாக குழுவிலிருந்து அன்புமணியை நீக்கியுள்ளது அரசியல் களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷா-வால் முறியும் அதிமுக கூட்டணி.. தளபதியி பக்கம் தாவும் எடப்பாடி!!

ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணி வைத்தாலும் சமீப நாட்களாக இரு கட்சியினடையே உரசல் போக்கு இருந்து வருகிறது. இவர்கள் கூட்டணி அமைத்தும் சரியான பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை என்ற குழப்பம் எழுந்துள்ளது. ஏனென்றால் அதிமுக தங்கள் தலைமையில்தான் ஆட்சி அமையும் என கூறி வருகின்றனர். இதுவே பாஜக கூட்டணி ஆட்சி முறை எனக் கூறுகிறது.

சமீபத்தில் சென்னைக்கு வருகை புரிந்த அமித்ஷாவும் அதேதான் கூறியிருந்தார். இதனால் இரு கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. இந்த காரணத்தினால் அதிமுக தலைமை பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமா என்ற ரகசிய ஆலோசனையை செய்து வருகின்றனர். முன்னதாக பாஜகவே வேண்டாம் என எடப்பாடி திட்டவட்டமாக இருந்த நிலையில், பல விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் இந்த கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது.

அப்படி இருக்கையில் கூட்டணி ஆட்சி என்பது எடப்பாடிக்கு அறவே பிடிக்கவில்லை. இதனால் கொள்கை மற்றும் மதவாத எதிரியாக திமுக பாஜகவை எதிர்க்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் மீண்டும் கை கோர்க்க எடப்பாடி யோசனை செய்து வருகிறாராம். முன்னதாகவே விஜய்யுடன் தான் கூட்டணி அமைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் வைத்த டிமாண்டானது எடப்பாடிக்கு ஒத்துவரவில்லை.

தற்போது பாஜக கொடுக்கும் இடைஞ்சலை தவிர்க்க மீண்டும் விஜய்யுடன் பேசி பார்க்கலாம் என்று எடப்பாடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் கட்டாயம் இரட்டை முதல்வர் தமிழகத்தை ஆள வாய்ப்புகள் அமையும்.

திமுகவுடன் தான் கூட்டணி.. விஜய் பிராபகரன் கொடுத்த க்ளு!! ADMK வை கழட்டி விடும் தேமுதிக!!

DMDK ADMK: அதிமுக எம்பி தேர்தலில் தேமுதிகவிற்கு சீட் வழங்க வில்லை. ஆனால் அதிமுக தேமுதிக விற்கு சீட் வழங்குவோம் என்று ஒப்புதல் அளித்ததாக பிரேமலதா கூறியிருந்தார். அதிமுக அதற்கு முழு மறுப்பு தெரிவித்தது. விஜயகாந்த் போல தனது மகனையும் எம்பி சீட் வாங்கி பதவியில் உட்கார வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பிரேமலதா தீவிரமாக இருந்தார். ஆனால் அவரது அரசியல் கணக்கெல்லாம் அதிமுகவால் தகிடுபொடி ஆகிவிட்டது.

இதனால் ஜனவரி மாதம் நடக்கும் மாநாட்டை அடுத்து தங்களது கூட்டணி குறித்து அறிவிப்போம் என தேமுதிக கூறிவிட்டனர். இவர்களை கைநழுவ விட்டு விடக்கூடாது என்பதற்காக அதிமுகவும் அடுத்த ஆண்டு கட்டாயம் எம்பி தேர்தலில் சீட் வழங்குவதாகவும் கூறிவிட்டது. அவ்வபோது பிரேமலதா மற்றும் அவரது மகன்களிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்கையில் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் பிரபாகரனிடம் கேட்டபோது, எங்களுக்கு திமுக அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. திராவிட கொள்கை மற்றும் சிந்தனை இருக்கும் கட்சியில் கட்டாயம் கூட்டணி வைப்போம் என தெரிவித்துவிட்டார். இவர் கூறுவதை வைத்து பார்க்கையில் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இதனால் அதிமுகவிற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும்.

முன்னதாக பாமக அதிமுக வை விட்டு விலகியது போல தற்போது தேமுதிக வும் கட்சியை விட்டு நீங்க தயாராகி விட்டது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அமித்ஷா வே சொல்லியாச்சு.. அமைச்சரவை தான்!! கன்பார்ம் செய்த டிடிவி!! நெருக்கடியில் அதிமுக!!

AMMK: அதிமுக மற்றும் பாஜக இரு கட்சிகளும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்ப்பதற்காக ஒன்றிணைந்துள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்ததிலிருந்து கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறும் என பாஜக கூறுகிறது. சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா கூட இதையேதான் தெரிவித்தார். அச்சமயம் அதிமுகவில் அனைவரது கவனமும் எடப்பாடி நோக்கி இருந்தது. எங்களுக்கே தெரியாமல் ஏதாவது மறைமுக உறுதி கொடுத்து விட்டீர்களா?? ஏன் பாஜக கூட்டணி ஆட்சி என கூறி வருகின்றனர் என கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

எடப்பாடியும், அவர்கள் கூறுவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கூட்டணி முறையில் ஆட்சி கிடையாது அதிமுக தலைமையில் தான் ஆட்சி என விளக்கம் அளித்து வருகிறார். இப்படி இருக்கையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், அமைச்சரவையில் கூட்டணி உண்டாகும் என தெரிவித்துள்ளார். அதன்படி முதல்வர் வேட்பாளர் யார் என்று ஆலோசனை செய்து தான் கூறுவார்கள். இது குறித்து நான் ஏதும் சொல்லத் தேவையில்லை. அமித்ஷாவே சொல்லிவிட்டார்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறியது அதிமுக கட்சிக்குள் பூதாகரமாக வெடித்துள்ளது. அமைச்சரவையில் கூட்டணி எனக் கூறினால், அதிமுகவுடன் கைகோர்க்க நேரிடும். இதனால் எடப்பாடி கொந்தளிப்பில் உள்ளார். இப்படியே கூட்டணி முறையில் ஆட்சி என பாஜக கூறி வந்தால் கட்டாயம் அதிமுக வெளியேறிவிடும் என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர். அதுமட்டுமின்றி டிடிவி தினகரன் பேசுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத நிலையில் கூட்டணி ஆட்சி தான் சரிவரும் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறுவது இவர்களுக்கு அடுத்து மோடி தான் சரியானவர் வேறு யாரும் கிடையாது என்பதை உணர்த்தும் படி உள்ளது.