பராமரிப்புக்காக நிறுத்தப்பட்ட கப்பலில் தீ விபத்து! துறைமுகத்தில் பரபரப்பு!
ராசல் கைமாவில் அல்-ஜசீரா துறைமுகம் வர்த்தக ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். உள்நாடு மற்றும் வெளிநாட்டுக் கப்பல்கள் அதிக அளவில் வந்து செல்லும் ஒரு முக்கியமான இடமாக இந்த துறைமுகம் இருந்து வருகிறது. இந்த துறைமுகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் திடீரென்று கப்பலில் தீ பிடித்து விட்டது.
சற்று நேரத்தில் மளமளவென தீ பரவி கப்பல் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. இது பற்றி தகவல் அறிந்த 4 தீயணைப்பு நிலையங்களில், இருந்து வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக தீயை அணைக்கப் ஆரம்பித்தனர். அவர்கள் நீண்ட நேரமாக தீயை அணைக்க போராடினர்.
அதன் பிறகு கிரேன் மூலம் நாலாபுறமும் தண்ணீரை பீச்சி அடித்து 1:20 மணி வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதன் பிறகு விடிய, விடிய நெருப்பை அணைக்கும் பணி நடைபெற்றது. முழுமையாக நேற்று அதிகாலை 4 மணிக்கு தீயை அணைத்தனர். 4 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ராசல் கைமாவின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை திறக்கப்படும் முதுமலை காப்பகம்! இவர்கள் வருகையை தவிர்க்க வேண்டும்!
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. பல இழப்புகள் ஏற்பட்டதும் குறிப்பிடத் தக்கது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் மக்கள் சொல்லொனாத் துயரில் இருந்தனர். தோற்று பாதிப்பு அவ்வளவு அதிகமாக இருந்தது என்பது நாம் அறிந்த விஷயம் தான்.
தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்துமே முடங்கின. பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத் தளங்கள் என அனைத்தும் மூடியதால் பொருளாதார நிலை மிகவும் மோசமானதாக இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகமும் ஏப்ரல் 20 ம் தேதி மூடப்பட்டு, சுற்றுலா பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் தற்போது கொரோனா கணிசமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி, பலவும் திறக்கப்பட்டுள்ள போதும் மிக ஜாக்கிரதையாக சூழ்நிலை கையாளப்பட்டு வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை சுற்றுலா மையம் 5 மாதங்களுக்குப் பிறகு நாளை திறக்கப்பட உள்ளது. சுற்றுலா மையத்தில் முதல் கட்டமாக வாகன சவாரி மட்டும் தொடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் முதுமலை சுற்றுலா மையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. வனத்துறையினர் இதுபற்றி கூறுகையில் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் பாதித்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வருகையை தவிர்க்க வேண்டுமெனவும் கூறினார்கள்.
23 வயது இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்குகளை துவக்கி தான் ஒரு பெண் எனக் கூறி பல சிறுமிகளை ஆபாச படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப சொல்லி தவறாக நடந்துகொண்ட அவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் அப்துல் சமத், ஏசி மெக்கானிக் என லக்னோவை சேர்ந்தவர் என தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவனை கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், இவர் சிறுமிகளிடம் டீன் ஏஜ் பெண்களை போல் உரையாடலைத் தொடங்கி அவர்களிடம் ஆபாச படங்கள் மற்றும் போட்டோக்களை கேட்டு அதை பார்த்துள்ளார்.
துணை போலீஸ் கமிஷனர் (தெற்கு) அதுல் குமார் தாக்கூர், “ஃபதேபூர் பேரி காவல் நிலையத்தில் இருந்து எங்கள் குழு அப்துல் சமத்தை லக்னோவில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்து பல சிறுமிகளின் விவரங்கள் மற்றும் அவர்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய ஸ்மார்ட் மொபைல் போனை மீட்டது என தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 27 அன்று பாதிக்கப்பட்ட ஒரு 15 வயது பாதிக்கப்பட்டவரிடமிருந்து புகார் பெறப்பட்ட பிறகு இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
விசாரணையின் போது, அந்த இளைஞர் பயன்படுத்திய மொபைல் எண்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐடிக்களின் விவரங்களைப் பெற வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு மெசேஜ் அனுப்பப்பட்டது.அந்த விவரங்களின் அடிப்படையில், போலீஸ் குழு லக்னோவிலிருந்து குற்றவாளியைக் கண்டுபிடித்தனர்.
விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவர் ஒரு டீனேஜ் பெண்ணுடன் உரையாடலைத் தொடங்க தன்னை ஒரு பெண்ணாக அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் உரையாடலை தொடங்குகிறார்.
அந்த இளைஞர் இணைய அடிப்படையிலான சமூக தளங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், . ‘டெக்ஸ்ட் நவ்’ போன்ற வேறு சில அப்ளிகேஷன்களையும் அந்த இளைஞர் கற்றுக்கொண்டு அதில் அவர் பெண்களுக்கு செய்திகளை அனுப்புவது மற்றும் சர்வதேச எண்கள் மூலம் பெண்களுக்கு வீடியோ அழைப்புகள் செய்து அவர் கனடாவிலிருந்து ஒரு NRI ஆக தன்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி பேசு தொடங்கி உள்ளார் என போலீஸ் அதிகாரி கூறினார்.
உடனே சிறுமிகள் அவருடைய ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அந்த இளைஞருக்கு அனுப்பியபோது, அவன் அவர்களை மிரட்டி மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில் பரப்பி உள்ளார். அவரிடம் பல இன்ஸ்டாகிராம் ஐடிகள் உள்ளன. அவனிடம் ஏகப்பட்ட இன்ஸ்டாகிராம் ஐடிகள் உள்ளன. அவன் ஒவ்வொரு முறையும் இன்ஸ்டாகிராம் ஐடியை மாற்றி வந்ததால் ஐடியை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரி கூறியுள்ளார்.
சிவன் மலை கண்ணாடி பெட்டியில் வைத்த பரிகார பொருள்! பலன் என்ன?
திருப்பூர் பகுதியில் காங்கேயம் என்ற இடம் உள்ளது. அங்கு சிவன்மலை என்ற இடத்தில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி என்று ஒன்று உள்ளது. அங்கு ஒவ்வொரு வருடமும் ஒரு பொருள் வைக்கப்படும். அப்படி தற்போது அதிலிருந்த பொருள் எடுக்கப்பட்டு விட்டு வில் மற்றும் அம்பை வெள்ளியினால் செய்து வைத்துள்ளனர். அதற்கு பூஜையையும் மேற்கொண்டனர்.
இந்தக் கோவில் சிவவாக்கிய சித்தர் ஆல் பாடல் பெற்ற தலமாகும். எனவே இது மிகவும் பிரபலமான கோவிலாக இருக்கிறது. இதில் உள்ள பெட்டியில் நாம் வைக்கும் பொருட்களை பொறுத்து, அதற்கு தகுந்தாற்போல ஒவ்வொரு உலக நிகழ்வுகளும் நடந்தேறி வருகின்றன. இது பலருக்கு அதிசயத்திலும் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இறைவன் நமக்கு அறிகுறிகளை முன்னமே உணர்த்தி வருவதாக ஒரு ஐதீகமும் சொல்லப்படுகிறது.
எனவே காரணமூர்த்தி என்றும் சொல்கிறார்கள். இந்த இறைவன் பக்தர்களின் கனவில் வந்து ஏதாவது ஒரு பொருளை கொண்டு வந்து அந்த பெட்டியில் வைக்க சொல்வதாக ஒரு பாரம்பரியம் இங்கு உள்ளது. அந்த வகையில் இறைவன் குறிப்பால் உணர்த்திய பொருளை செய்து வரும் பக்தர்களிடம் இருந்து அதை வாங்கி வைத்துவிட்டு கோவிலில் இருக்கும் குருக்கள் அங்கு பூப்போட்டு பார்ப்பார்கள்.
அதில் ஆண்டவனின் முடிவு தெரிந்துவிடும். வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து பூ போட்டு பார்க்கும் போது வெள்ளை பூ வந்தால் மட்டுமே அந்தப் பொருள் அந்தப் பெட்டியில் வைக்கப்படும். இது தொன்றுதொட்டு செய்யப்படும் வழக்கம் என்றும் கூறுகிறார்கள். இது வரை இங்கு மண், தங்கம், ரூபாய் நோட்டுகள், நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, துப்பாக்கி, ஏர், கலப்பை, சர்க்கரை, தெய்வ ஜாதகம் மற்றும் குங்குமம் போன்றவற்றை அந்த கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து பூஜை செய்துள்ளனர். நீர் வைக்கும்போது சுனாமி வந்ததும், தங்கம் வைக்கும் போது தங்கத்தின் விலை உச்சம் தொட்டதும், மண் வைத்து பூஜை செய்யும்போது மண் நிலங்களின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.
அதுபோல் இறைவனின் நாசுக்கான இந்த பொருட்களை வைத்து வழிபடுவதன் காரணமாக இதில் வைக்கப்படும் பொருளினால் சமுதாயத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரூபாய் வைக்கும் போது ரூபாயின் மதிப்பு இஇழந்து போனதும் குறிப்பிடத்தக்கது. இன்றுவரை உத்தரவு பெட்டியில் இருந்த பொருட்கலான பச்சை வேட்டி, துண்டு, வெள்ளை சட்டை, மதிப்பு இழந்த 500 ரூபாய் 2 மற்றும் 5,2,1 ரூபாய் நாணயம் என மொத்தம் ரூ.1008, இரண்டு ராசி கட்டங்கள், தேங்காய், எலுமிச்சை, வெற்றிலை, பூ, பாக்கு ஆகியவற்றை எடுத்துவிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ரேணுகா தேவி என்ற பெண் கொண்டு வந்த வில் மற்றும் அம்பு அந்த கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப் பட்டுள்ளது. இதன் பலன் என்னவென்று பொருத்திருந்து பார்க்கலாம்.
பானி பூரியால் வீட்டில் தலைதூக்கிய பிரச்சனை! மனைவியின் பரிதாப நிலை!
தற்போது உள்ள கால சூழலில் ஒரு வீட்டில் கூட கூட்டுக் குடும்பம் என்பதே கிடையாது. சிறு சிறு குடும்பங்கள் கணவன், மனைவி பிள்ளைகள் என்ற முறையில் மட்டுமே அதிக அளவில் வசிக்கிறார்கள். அதில் அவர்களுக்கு கருத்து வேறுபாடுகளும் மிகப் பலவாறு உள்ளன. முதலில் பெரியோர்கள் இருக்கிறார்கள் சண்டை போடக் கூடாது என்று ஒரு பக்கம் இருந்தார்கள். அவர்களுக்கு ஆத்திரம் இருந்தாலும் பெரியவர்களுக்காக அவர்களுக்குள் சண்டை வராமல் இருந்தது.
தற்போது அப்படி இல்லாத காரணத்தினால் அவர்கள் எதை செய்கிறார்கள் என்றும் தெரிய மாட்டேன் என்கிறது, எதற்காக சண்டையிடுகிறார்கள், முடிவு என்னவாகிறது என்றும் தெரிய மாட்டேன் என்கிறது. மேலும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும், பொறுமையாக நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கவும் கூட ஆள் இல்லாத நிலைதான் பல வீடுகளில் நடக்கின்றது. என்னதான் பெரியவர்கள் இருந்தால் ஒரு பக்கம் குறை கூறுவார்கள் என்று சொன்னாலும், பல விஷயங்களில் அவர்கள் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
அனைவர் வீட்டிலும் வீட்டுக்கு வீடு வாசப்படி தான். தன்னிடம் சொல்லாமல் பானிபூரி வாங்கி வந்தார் என்பதற்காக ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் உள்ள ஒரு பகுதியில் ஒரு கணவன் மனைவி உள்ளனர். கணவர் படித்து நல்ல நிலையில் வேலைக்கு சென்று வருகிறார். அவர் பெயர் ககினிநாட் சர்வதே. அவருக்கு 33 வயது அவருடைய மனைவி பிரதிக்க்ஷா சர்வதே அவருக்கு 23 வயது. இவர்களுக்கு கடந்த 2019 ம் வருடம் திருமணம் ஆனது.
இந்நிலையில் கணவர் வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும்போது மனைவிக்காக பானிபூரி வாங்கலாம் என்று எண்ணி வாங்கிக் கொண்டு வந்துள்ளார். வீட்டிற்கு வந்து அதன் பிறகு அதற்காக ஒரு சண்டை ஏற்பட்டு உள்ளது. அதில் என்னிடம் சொல்லாமல் எப்படி பானிபூரி வாங்கலாம் என மனைவி கண்டித்துள்ளார். மனைவிக்கு கணவன் என்ன செய்வது, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் போகவே சண்டை பெரிதாக முடிந்துள்ளது.
இருவரும் அதே வீட்டில் வெவ்வேறு இடங்களில் படுத்து தூங்கி விட்டனர். காலையில் எழுந்து கணவன் பார்க்கும் போது மனைவி எழவே இல்லை. அதன்பிறகு மனைவியை தேடி பார்த்தால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் விஷம் அருந்தி அதன் காரணமாக உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை அவர் விஷம் அருந்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரை காப்பாற்ற முடியாமல் பலியாகிவிட்டார். அதன் காரணமாக மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அந்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் விமான நிலையத்தைத் திறக்க கத்தார் முழு முயற்சி! தாலிபான்களுடன் இணைந்து முன்னெடுப்பு!
காபூலின் விமான நிலையத்தை விரைவில் திறக்க கத்தார் தாலிபான்களுடன் இணைந்து செயல்படுகிறது.இவ்வாறு அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் வியாழக்கிழமை கூறினார்.ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு அவர் இஸ்லாமியர்களை வலியுறுத்தினார்.செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறுவதன் மூலம் முடிவடைந்த விமான நிலையம் வெறித்தனமான வெளியேற்றத்தின் காட்சி அதன் உள்கட்டமைப்பின் பெரும்பகுதி அழிக்கப்பட்டு அல்லது சீரழிந்த நிலையில் செயல்படவில்லை.
நாங்கள் விமான நிலையத்தைத் திறப்பதற்கு மிகவும் கடினமாக உழைக்கிறோம்.நாங்கள் அதை விரைவில் இயக்க முடியும் என்று நம்புகிறோம் என்று கட்டார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி கூறினார்.ஷேக் முகமது கூறுகையில் அடுத்த சில நாட்களில் சில நல்ல செய்திகளைக் கேட்போம்.
இது மிகவும் முக்கியமான ஒன்று.ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பாதுகாப்பான வழிநடத்துதலுக்கான சுதந்திரத்தை வழங்க தாலிபான்கள் தங்கள் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறார்கள் என்று அவர் தோஹாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.கட்டார் தொழில்நுட்பக் குழு புதன்கிழமை காபூலுக்கு பறந்தது.விமான நிலையத்தை மீண்டும் திறப்பது பற்றி விவாதிக்க வெளியேற்றத்திற்குப் பிறகு அங்கு தரையிறங்கிய முதல் விமானம் ஏர்லிஃப்ட்.
ஏர்லிஃப்ட் நடவடிக்கையில் 123,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றனர்.ஆனால் பலர் வெளியேறத் துடித்துள்ளனர்.தற்போதும் பல மக்கள் உதவி கிடைக்காமல் போராடி வருகின்றனர்.இந்நிலையில் இரண்டு நாட்களில் தாலிபான்கள் தங்கள் அரசாட்சியை அமைக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் விமான சேவை தொடங்கும் என ஆப்கன் மக்களும் வெளிநாட்டைச் சேர்ந்த மக்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
இஸ்லாமியர்களுக்கு நான் ஒன்றை சொல்ல வேண்டும்! தலீபான்களை கொண்டாடுவது நல்லதல்ல! – நடிகர்!
ஆப்கானிஸ்தான் முழுவதும் தற்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து தலிபான்களின் கட்டுக்குள் வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் மே மாதம் முதல் வெளியேற ஆரம்பித்து தற்போது அங்கிருந்து முழுவதும் வெளியேறி விட்டனர். எனவே உலக நாடுகள் பலவும் தன நாட்டு மக்களை ஆப்கனை விட்டு வெளியே வந்து கொண்டு இருக்கின்றன.
அமெரிக்க படைகள் அமெரிக்க மக்களை முழுவதும் மீட்டு விட்டு செல்ல முயற்சித்து வந்தனர். அது மட்டுமல்லாமல் ஆப்கனின் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடி செல்கின்றனர். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து, பல்வேறு தரப்பினருடனும் கவலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பிரபல இந்தி திரைப்பட நடிகர் நஸ்ருதீன் ஷா தனது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
அதில் அவர் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததை கொண்டாடுவது ஆபத்தானது எனவும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இதை உணர வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் அவர் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது உலகம் முழுவதும் கவலைக்குரியதாக விசயமாக இருந்தாலும், இந்திய இஸ்லாமியர்கள் சிலர் காட்டும் இந்த காட்டு மிராண்டி தன கொண்டாட்டங்கள் ஆபத்தானவை எனவும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தில் சீர்திருத்தம் மற்றும் நவீனத்துவம் வேண்டுமா? அல்லது கடந்த சில நூற்றாண்டுகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் தொடர வேண்டுமா? என்று ஒவ்வொரு இந்திய இஸ்லாமியர்களும் தங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் மக்களை கேள்வி கேட்டுள்ளார்.
காற்று மாசுபாட்டால் 9 ஆண்டுகள் ஆயுள் குறையும்! இந்திய புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவின் காற்று மாசுபாடு அளவு காலப்போக்கில் புவியியல் ரீதியாக விரிவடைந்து மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.ஒரு சராசரி நபர் இப்போது கூடுதலாக 2.5 முதல் 2.9 ஆண்டுகள் வரை ஆயுட்காலத்தை இழக்கிறார் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.இந்தியா உலகின் மிக மாசுபட்ட நாடு.480 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்லது அதன் மக்கள்தொகையில் சுமார் 40% வடக்கில் உள்ள இந்திய-கங்கை சமவெளிகளில் வாழ்கின்றனர்.
அங்கு மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் காற்றின் தர வாழ்க்கை அட்டவணை (AQLI) அறிக்கை தெரிவிக்கிறது.பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனத்தின் ஆய்வு ஒரு நபர் சுத்தமான காற்றை சுவாசித்தால் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பதை அறியும்.2019ஆம் ஆண்டின் மாசு நிலைகள் தொடர்ந்தால் வட இந்தியாவில் வசிப்பவர்கள் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தை இழக்க நேரிடும்.இந்த பிராந்தியம் உலகின் மிக மோசமான காற்று மாசுபாட்டை அனுபவிக்கிறது.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் சராசரி துகள் பொருள் செறிவு ஒரு கன மீட்டருக்கு 70.3 மைக்ரோகிராம் (μg/m3) ஆகும்.இது உலகின் மிக உயர்ந்தது மற்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) 10 μg/m3 வழிகாட்டுதலின் ஏழு மடங்கு ஆகும்.இந்தியாவின் அதிக அளவு காற்று மாசுபாடு காலப்போக்கில் புவியியல் ரீதியாக விரிவடைந்துள்ளது.
சில தசாப்தங்களுக்கு முன்பு ஒப்பிடும்போது துகள்கள் மாசுபாடு இனி இந்தோ-கங்கை சமவெளியின் ஒரு அம்சமாக இல்லை.மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் மாசு மிகவும் அதிகரித்துள்ளது.உதாரணமாக அந்த மாநிலங்களில் சராசரி நபர் இப்போது 2000 முதல் தொடக்கத்தில் ஒப்பிடுகையில் கூடுதலாக 2.5 முதல் 2.9 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் இழக்கிறார் என்று அறிக்கை கூறுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் 2000 களின் முற்பகுதியில் இருந்து சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.அதே நேரத்தில் பங்களாதேஷ்,இந்தியா,நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் 1998 முதல் 2017 வரை புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மின் உற்பத்தி மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
தெற்காசியா தொடர்ந்து மிகவும் மாசுபட்ட பகுதியாகும், அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையை சராசரியாக 5 வருடங்கள் குறைப்பதைக் காண்கிறார்கள்.இப்பகுதி WHO வழிகாட்டுதலுக்கு இணங்கினால் எப்படி இருக்கும்.மேலும் நாட்டின் மிகவும் மாசுபட்ட பகுதிகளில் வட இந்தியா என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் ஜுன்,ஜூலை மாதங்களில் 30 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்! வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி!
ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை வாட்ஸ்அப் மூலம் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.இடைநீக்கம் செய்யப்பட்ட கணக்குகளின் உண்மையான எண்ணிக்கை 30,27,000 ஆகும்.அந்த நேரத்தில் செய்தித் தளமானது 594 குறைகளை பெற்றது.
தானியங்கி செய்திகளின் அங்கீகாரமற்ற பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு புகார்களில் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.வாட்ஸ்அப் தனது சமீபத்திய அறிக்கையில் கணக்கு ஆதரவு (137),தடை மேல்முறையீடு (316),பிற ஆதரவு (45),தயாரிப்பு ஆதரவு (64) மற்றும் பாதுகாப்பு (32) ஆகியவற்றில் 594 பயனர் அறிக்கைகள் ஜூன் 16 முதல் ஜூலை 31 வரை பெற்றதாக தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் 74 கணக்குகள் நடவடிக்கை செய்யப்பட்டன.நடவடிக்கை எடுப்பது என்பது கணக்கை தடை செய்வது மற்றும் ஒரு கணக்கை மீட்டெடுப்பது என்பதாகும்.பயனர்கள் தங்கள் கணக்கை அணுக அல்லது சில அம்சங்களைப் பயன்படுத்த உதவி தேவைப்பட்டால் தடைசெய்யப்பட்ட கணக்கை மீட்டெடுக்க பயனர் கோரிய கோரிக்கை உட்பட பல காரணங்களுக்காக அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டிருக்கலாம்.
ஆனால் அதிரடி என சேர்க்கப்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.அறிக்கையிடப்பட்ட கணக்கு இந்தியாவின் சட்டங்கள் அல்லது வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை மீறவில்லை என்று செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது.இந்தியாவில் சமூக ஊடக இடைத்தரகர்கள் தங்கள் இணக்க அறிக்கையை ஐடி விதிகள் 2021இன் படி வெளியிட வேண்டும்.
ஐடி விதிகள் 2021 இன் படி நாங்கள் எங்கள் இரண்டாவது மாதாந்திர அறிக்கையை 46 நாள் காலத்திற்கு 16 ஜூன் முதல் 31 ஜூலை வரை வெளியிட்டோம் என வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறினார்.மே 26 முதல் நடைமுறைக்கு வந்த புதிய ஐடி விதிகள் பெரிய டிஜிட்டல் தளங்களுக்கு (5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன்) ஒவ்வொரு மாதமும் இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும்.
Портал казино Вулкан Вегас хорош еще и тем, что имеет приятную графику, поддерживает не меньше 5 способов депозитов и предлагает множество игровых автоматов. Иначе говоря, каждый юзер может выбрать и найти что-то для себя. В целом в Вулкан Вегас casino предлагает 750 видеослотов, 6 видов Roulette, 2 наименования современного видеопокера и интересные карточные игры. Нет спора в том, что портал предлагает массу веселья, и уйти отсюда расстроенным точно не получиться!
Без споров, Vegas Vulkan привлекает внимание пользователей. Играть в casino могут только геймеры с возрастом 18 лет. Это ключевое правило, которого придерживается ресурс. Временами веб-сайт может запросить копию паспорта, чтобы удостовериться, что вам есть 18+. Клуб работает с мировыми регуляторами, которые всё время контролируют его работу. Международные органы предлагают варианты содействия для юзеров, которые на определённом этапе игры могут чувствовать себя небезопасно. С помощью элементов, предоставляемых клубом, юзер может заблокировать учетную запись на период само исключения. Хайроллеры также могут устанавливать лимиты депозита. При необходимости они могут сделать это, связавшись с представителями casino. Ко всем действиям по защите пользователей относятся очень серьезно, что повышает в целом авторитет Vulkan Vegas.
Портал Vulkan Vegas лицензирован 2 самыми международными агентствами в отрасли и регулируется строгими правилами.
Игровой каталог казино Vulcan Vegas
Портфолио оператора весьма обширное. Игры делятся на следующие категории:
– новые;
– в тренде;
– лайф казино;
– Roulette;
– джекпот;
– poker;
– blackjack;
– любимые игры.
Все слоты, которые вы выберите в casino Vulcan Vegas, от ведущих разработчиков, среди них:
– 1×2 Gaming;
– Thunderkick;
– Netent;
– ELK studio;
– Unicum;
– Red Rake
– Novomatic и другие.
Казино Вулкан Вегас не забыло и об супер разделе LIVE, где вы сможете играть (в покер, рулетку, блэкджек) с интересными дилерами, а также с бонусом. Это, например, такие варианты как:
– Ezugi Live казино;
– Live Ultimate Texas Hold’em;
– Live Dream Catcher;
– Live Football studio;
– Live Baccarat;
– Live Caribbean Stud Poker и другие.
Как увеличить депозит и снять финансы в клубе Вулкан Вегас?
Надо понимать, какая информация вам потребуется для входа и игры в казино Вулкан Вегас: сперва подтвердите свою личность по копии – ID или паспорта. Укажите ваш банковский счет, где служба суппорта проверит ваш действующий адрес.
Как минимум депозит составляет 12 евро, а варианты внесения средств доступны следующие: VISA, Мастеркард, Скрилл, Neteller и Zimpler. Также видно, казино Vulkan Vegas предлагает широкий выбор вывода валюты. Пополнение депозита происходит моментально. Скорость вывода зависит от того, какой метод оплаты вы выберете сперва. Casino гарантирует вывод валюты в течение максимум 2 дней.
Для получения интересующей Вас информации или ответов на свои вопросы, вам надо знать, что в казино работает служба поддержки клиентов. С ними есть возможность связаться в live chat, что актуален 24 часа в сутки, 7 дней в неделю или по e-mail. Также есть контактный номер телефона.
Игровой сервис Вулкан Вегас предлагает ряд функций, огромные бонусные предложения, множество азартных игр и самое главное живые игры! Это все, что нужно современному игроку. Нет сомнений в том, что любой, кто решится поиграть с этим оператором, будет доволен. Клуб Vulkan Vegas желает всем уйму веселья и, прежде всего, удачи!