Tuesday, July 15, 2025
Home Blog Page 4230

பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது இப்படித்தான்!

0

மத்திய அரசு பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், முன்னரே இந்த இணைப்பிற்கு காலவரையறை நீட்டிக்கப்பட்டது.

ஆகவே ஒரு சில நிமிடங்களில் அமர்ந்த இடத்திலேயே பிஎஃப் கணக்கின் யு ஏ என் எண் இணைப்பது எவ்வாறு என்பதை இப்போது நாம் காணலாம். முதலில் இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள் உங்களுடைய யுஏஎன் என்னை பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா உள்ளிட்டவற்றை கொடுத்து உள்ளே நுழையுங்கள்.

மெனுவில் இருக்கும் மேனேஜ் என்பதை கிளிக் செய்துவிட்டு கேஒய்சி கிளிக் செய்யுங்கள், கிளிக் செய்தவுடன் புதிய பக்கத்திற்கு செல்லும். அந்தப் பக்கத்தில் நீங்கள் முன்னரே ஆதார் எண்ணை இணைத்து இருந்தால் எந்த விதமான பிரச்சனையும் கிடையாது.

ஆதார் எண் இல்லை என்றால் ஆதார் என்பதை கிளிக் செய்து உங்களுடைய ஆதார் எண்ணை அதில் பதிவிடுங்கள், ஆதார் எண்ணை பதிவிடுங்கள் அதன் பின்னர் சேவை என்பதை அழுத்தி கிளிக் செய்யுங்கள். சேவ் பட்டனை க்ளிக் செய்தவுடன் ஆதார தரவுகளில் பெயர் பிறந்த நாள் உள்ளிட்டவற்றை சரிபார்க்கப்படும்.

எல்லாவிதமான தரவுகளும் சரியாக இருக்கும் அதனால் செய்யப்பட்ட சேவை சி அறிக்கை உள்ளிட்டவற்றை நீங்கள் பெறுவீர்கள்.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 21.3 சதவீதம் வளர்ச்சி!

0

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி அடையும் என கணக்கிடப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், மும்பை பங்கு சந்தை சிறப்பான வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.தற்சமயம் வெளியாகி இருக்கின்ற அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் டிரெயிட்டர்ஸ் தளம் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்றும் எஸ்பிஐ வங்கியின் அறிக்கையில் 18.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்றும், ரிசர்வ் வங்கி 21.4 சதவீதம் ஆக இருக்கும் என்றும் இந்திய ரதிங்ஸ் அண்ட் ரிசர்ச் 9.4 சதவீதமாக இருக்கும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் &ரிசர்ச் கணித்து இருக்கிறது. இந்த நிலையில், நாட்டின் நிதி பற்றாக்குறை மற்றும் எட்டு முக்கிய துறையின் உற்பத்தியாளர்கள் தொடர்பான தகவல் கிடைத்திருக்கிறது.

இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி 20.3 சதவீதம் என்ற வரலாற்று உயர்வை அடைந்திருக்கிறது. ஆனாலும் மத்திய அரசு இரண்டு முறை நாட்டின் வளர்ச்சிக்காக ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்து 2019 மற்றும் 20 ஆம் வருடத்தின் ஜூன் காலாண்டு அறிக்கை இதுவரை நடக்கவில்லை என்பதுதான் தற்சமயம் வருத்தமான தகவலாக இருக்கிறது.

மத்திய அரசு வெளியிட இருக்கின்றனர் தரவுகளின் அடிப்படையில் நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி பற்றாக்குறையின் ஒட்டுமொத்த அளவில் ஜூன் காலாண்டு முடிவில் 21.3 சதவீதத்தை அடைந்திருக்கிறது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் நாட்டின் நிதி பற்றாக்குறையில் அளவீடு 3.21 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது ஒட்டுமொத்த நிதியாண்டின் அளவில் 21.3 சதவீதம் ஆகும்.

அதேபோல ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வரி வருமானத்தில் சுமார் 5.77 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதேசமயம் ஒட்டு மொத்த செலவுகளில் அழகு 10.4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

மத்திய அரசின் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை 6.8 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில். நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதத்தில் 21.34 சதவீதத்தை அடைந்திருக்கிறது.

நிதி பற்றாக்குறையை குறைப்பது அதற்காக மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை மற்றும் மற்ற பிரிவுகளில் இருந்து கிடைக்கும் வரி வருமானம் அதிகரித்து இருக்கின்ற காரணத்தால், இதனை கட்டுப்படுத்த இயலும் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயத்தில் ஏர்-இந்தியா எல்ஐசி மற்றும் தேசிய பணமாக்கல் திட்டம் மூலமாக திரட்டப்படும் நிதியின் மூலம் உபரி நிதி அதிகமாகவே இருக்கின்றது. அல்லது குறிப்பிட்ட இலக்கை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் உற்பத்தி ஜூலை மாதத்தில் 9.4 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. லோ பேஸ் எபக்ட் மூலமாக சென்ற வருடத்தை விடவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இரண்டாவது நோய்த்தொற்று அலையின் தாக்கம் குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் நிறைந்து இருக்கின்ற காரணத்தால், நாட்டில் பற்றாக்குறை சற்று கூடுதலாகவே அதிகரித்து இருக்கின்ற காரணத்தாலும் இந்தியாவின் மிக முக்கிய 8 உற்பத்தித்துறையில் 7 துறைகள் வளர்ச்சியில் இருக்கிறது.

ஜூலை மாத தரவுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த 8 உற்பத்தி துறைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி துறையில் மட்டுமே சரிவில் இருக்கிறது இந்தியா முழுவதும் கட்டுமானத் திட்டங்கள் வேகமெடுத்து இருக்கின்ற சூழ்நிலையில், துறை 21.8 சதவீதம் ஸ்டீல் துறை 9.3 சதவீதம் வளர்ச்சியை கொண்டிருக்கிறது.

ஜியோ வின் புதிய அதிரடி ஆஃபர்கள் அறிமுகம்! இதனால் யாருக்கு என்ன பயன்?

0

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான கலந்து கொண்டு இருக்கும் ஜியோவின் வருகைக்குப் பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.

ஏனென்றால் ஜியோ அறிமுகமான உடன் பல அதிரடி சலுகைகளை அறிவித்தது. அதில் இலவச டேட்டா உட்பட பல அம்சத் திட்டங்கள் இருந்தது. இதன் காரணமாக, ஜியோவின் அதிரடி அறிவிப்புக்கு முன்பு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதுவும் நிற்க முடியவில்லை அதன் காரணமாக, பல தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவின் மீது அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து லாபத்தை மறந்து பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள். ஆனாலும் எந்த தொலை தொடர்பு நிறுவனமும் ஜியோவிற்கு நிகராக முடியவில்லை. சலுகைகளை மாற்ற நிறுவனங்கள் தயங்கி கொண்டு இருக்கின்றன என்பதே உண்மையான விஷயம்.

அத்துடன் தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது தொடர்ந்து ஜியோ நிறுவனம் பல புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றது.

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது!

0

வரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது!

புதுச்சேரியில் அடுத்த வில்லியனூர் பகுதியில் வரதட்சணையாக கார் வாங்கி தரக்கோரி மருமகள் பெண்ணை தனி அறையில் பூட்டி வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருக்கனூர் பகுதியில் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகள் செவ்வந்தி இவருக்கும் சேதராப்பட்டு பழைய காலனியை சேர்ந்த புரட்சி வேந்தன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

அந்த திருமணத்தின் போது அவரது பெற்றோர் பெண்ணுக்கு 20 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் மற்றும் மாப்பிள்ளைக்கு 5 பவுன் நகை மற்றும் கார் வாங்க இரண்டு லட்சம் ரொக்கப் பணமும் கொடுத்தனர். ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு புரட்சி வேந்தனின் தாய், தந்தை மற்றும் புரட்சி வேந்தன் அந்த பெண்ணை தனி அறையில் அடைத்து வைத்து, உணவு கொடுக்காமல் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி செவ்வந்தி தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். அதன் பேரில் அவரது பெற்றோர் மருமகனிடம் நியாயம் கேட்டு மகளை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர்கள் கொடுமை படுத்தியது குறித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனுவும் அளித்தார்கள். அதன்பேரில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இனிமேல் வரதட்சணை கேட்க மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர்.

எனவே மீண்டும் தன் கணவனுடன் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி உள்ளார் அந்த பெண். ஆனால் மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு அவர் தன் பெற்றோர் மற்றும் உறவினர் பெண் ஆகியோரின் தூண்டுதலின் பெயரில் வரதட்சணையாக கார் வாங்கி தர வேண்டும் என்று மனைவியை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் செவ்வந்தி புகார் அளித்ததன் பேரில், அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்து விசாரித்து வருகின்றனர்.

எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு! ஹை கோர்ட் சொன்ன கருத்து!

0

எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு! ஹை கோர்ட் சொன்ன கருத்து!

பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான ஒரு கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அது மக்களிடையே மிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவரோ, அதில் சிக்காமல் தப்பித்துக் கொண்டே வந்தார். ஒவ்வொரு முறையும் அதற்காக தலைமறைவாகிவிட்டார்.

பொதுவாக பிரபலம் என்றாலே சொல்வதெல்லாம் சொல்லிவிட்டு அதிலிருந்து ஜகா வாங்குவது நடைமுறைதான். ஆனால் இவர் அரசியல் பிரமுகர் வேறு. எனவே சொல்ல வேண்டிய கமெண்டையும் சொல்லிவிட்டு, தற்போது அந்த வழக்கில் தெரியாமல் செய்ததாக கூறி வாபஸ் பெற நினைக்கிறார்.

தமிழக அரசும் அதன் பிறகு அதை கவனிக்கவில்லை. தற்போது அவர் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி நிஷா பானு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி சேகர் தரப்பில் ஆஜரான வக்கீல், அந்த பதிவை அவர் படிக்காமலேயே பிறருக்கு பகிர்ந்து விட்டார். அதாவது பார்வேர்ட் செய்துள்ளார் என்றும், அதற்கு தற்போது மன்னிப்பு கோரியுள்ளார் என்றும், தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி பதிவை படிக்காமல் ஏன் பிறருக்கு அனுப்புகிறீர்கள்? என்றும், அதன் பின் செய்யும் செயலை செய்துவிட்டு அதன் பின் அதற்கு மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தியும் வைத்துள்ளார்.

புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டும் போது இனி இது அவசியம்! கருத்தில் கொள்ள சொன்ன தமிழக அரசு!

0

புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டும் போது இனி இது அவசியம்! கருத்தில் கொள்ள சொன்ன தமிழக அரசு!

தமிழகத்தில் இனி புதிதாக கட்டப்படும் இரண்டு மாடுகளுக்கு மேல் உள்ள கட்டிடங்கள் அனைத்திற்கும் கட்டாயம் பின்தாங்கி வசதி அதாவது லிப்ட் வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் இன்று வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சி கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இனிமேல் இரண்டு அடுக்கு மாடிகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி கட்டிடங்களில் கட்டாயம் லிப்ட் வசதி இருக்க வேண்டும் என்றும், அதோடு சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் செய்ய வேண்டும் என்றும், பார்வையற்றோருக்கான அறிவிப்புப் பலகைகள், மற்றும் தனி வாகனம் நிறுத்துமிடம் ஆகியவையும் கட்டப்பட வேண்டியது கட்டாயம் என்றும் அந்த அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது திமுக ஆட்சியில், முதல்வர் அவர்கள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களுக்கு மகிழ்ச்சி அளித்து வருகின்றார். அதில் தற்போது மாற்று திறனாளிகளுக்காக இந்த வசதிகளை நடைமுறைபடுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது அந்த மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் நம்பப்படுகிறது.

650 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 32 பேர் பலியான பரிதாபம்!

0

650 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 32 பேர் பலியான பரிதாபம்!

தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமா மற்றும் சென்ரல் லண்டன் நகரை இணைக்கும் சாலை ஒன்றில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் மொத்தம் 63 பேர் பயணம் மேற்கொண்டனர். கார்ரிடிரா என்ற சென்ட்ரல் சாலையில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்ற போது, திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து 650 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து மிகப் பெரிய விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த நபர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த விபத்திற்கு காரணம் என்ன என ஆராய்ந்ததில் மலைப்பாங்கான பகுதியில் பஸ் மிகவும் வேகமாக சென்றது தான் இந்த விபத்துக்கு காரணம் எனவும் விசாரணையின் மூலம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாருங்கள் 2021 வருடம் முழுவதுமே ஏதோ ஒரு ஆபத்துக்கள் மக்களை துன்புறுத்திக் கொண்டே வருகிறது. நாமெல்லாம் எவ்வளவு நாள் இருப்போம் என்றே தெரியாத நிலைதான் நீடித்து வருகிறது. எனவே இருக்கும் வரை அனைவரிடமும் அன்புடன் இருப்போம். இயற்கை நமக்கு அடுத்தடுத்து நமக்கு என்ன வைத்திருக்கிறது என தெரியவில்லை. எனவே இருக்கும் வரை மகிழ்ச்சியாய் இருப்போம்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு திரைப்படம் இயக்கும் பிரபல இயக்குனர்! ஆர்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

0

எட்டு வருடங்களுக்குப் பிறகு திரைப்படம் இயக்கும் பிரபல இயக்குனர்! ஆர்யாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறியப்படுபவர் கரு.பழனியப்பன்.இவர் ஆரம்பக்காலத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.1994ம் தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார்.இவர் இயக்குனர் பார்த்திபனுடன் அவர் புள்ளக்குட்டிக்காரன் மற்றும் ஹவுஸ்புல் ஆகிய படங்களில் பணியாற்றினார்.இயக்குனர் எழிலிடம் இவர் துள்ளாத மனமும் துள்ளும்,பண்ணின் மனதைத் தொட்டு,பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்களில் பணியாற்றினார்.

மேலும் இரண்டு இயக்குனர்களிடமும் இவர் பணியாற்றினார்.இதனையடுத்து 2003ம் ஆண்டு பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனார்.இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.மேலும் முதல் படத்திலேயே இவர் தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றார்.அதன்பின்னர் இவர் ஆம்,பிரிவோம் சிந்திப்போம்,மந்திரப்புன்னகை,சதுரங்கம்,ஜன்னல் ஓரம் ஆகிய படங்களை இயக்கியிருப்பார்.

இந்தப் படங்கள் அனைத்தும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.எனினும் சில ரசிகர்களுக்கு இந்த படங்கள் பிடித்து இருந்தன.மந்திரப்புன்னகை திரைப்படத்தில் கதாநாயகனாகவும் இவர் நடித்திருப்பார்.சதுரங்கம் திரைப்படத்திற்கு சிறந்த கதாசிரியருக்கான தமிழ்நாடு அரசு விருது இவருக்குக் கிடைத்தது.ஜன்னல் ஓரம் திரைப்படத்திற்கு பிறகு இவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.

இதனிடையே அவர் நட்பே துணை திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் நன்றாகவே அமைந்திருந்தது.திரைப்படமும் பெருமளவில் வெற்றி பெற்றது.தற்போது இவர் மீண்டும் திரைப்படம் இயக்கும் திட்டத்தில் இருக்கிறார்.கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் படம் இயக்கப் போகிறார்.முதலில் இவர் நடிகர் மாதவனிடம் கதை கூறியதாகவும் அவர் இவரின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

ஆனால் இப்போது நடிகர் ஆர்யாவை வைத்து திரைப்படம் இயக்கப் போவதாக இயக்குனர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.முதல்முறையாக இவர்கள் இருவரும் இணையப்போவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளன.

அதிமுக முன்னாள் அமைச்சர் செய்த மோசடி! மீண்டும் சிக்கிய ஒரு முக்கியப் புள்ளி!

0

அதிமுக முன்னாள் அமைச்சர் செய்த மோசடி! மீண்டும் சிக்கிய ஒரு முக்கியப் புள்ளி!

முன்னாள் அமைச்சர் சரோஜா சுமார் 77 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சத்துணவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் அமைச்சர் சரோஜா சுமார் 77 லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்திருப்பதாக அவரது உறவினர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சமீபகாலமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக புகாரில் சிக்கி வருகின்றனர்.அந்த வரிசையில் சத்துணவுத்துறை முன்னாள் அமைச்சர் சரோஜா மோசடி புகாரில் தற்போது சிக்கியியுள்ளார்.76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக அவரது உறவினர் புகார் அளித்துள்ளார்.15 பேரிடம் இவர் இந்த மோசடியை செய்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் 64 வயதான குணசீலன்.இவர் கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தற்போது பத்திர எழுத்தராகப் பணியாற்றி வருகிறார்.இவர் முன்னாள் அமைச்சர் சரோஜாவின் அண்ணன் மருமகன் ஆவார்.ஆகஸ்ட் 28ம் தேதி ராசிபுரம் காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது பரபரப்பான புகார் ஒன்றை இவர் கொடுத்திருக்கிறார்.அதில் 2016ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சராக சரோஜா பொறுப்பேற்ற பின்னர் தன்னையும் தனது மனைவியையும் அழைத்ததாக புகாரி்ல் குறிப்பிட்டுள்ளார்.

சத்துணவுத் துறையில் அமைப்பாளர்,உதவியாளர்,சமையலர் ஆகிய பிரிவுகளில் பணியாளர்கள் நியமிக்க உள்ளதாகவும் விருப்பம் உள்ளவர்களிடம் பணம் வாங்கித் தந்தால் வேலையில் சேர்த்து விடுவதாக சரோஜா கூறியதாகவும் புகாரில் கூறியுள்ளார்.அதன்படி ராசிபுரம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 15 பேரிடம் குறைந்த பட்சம் மூன்றரை லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 76 லட்சத்து 50 ஆயிரம் வசூலித்ததாகவும் தனது புகாரில் குணசீலன் குறிப்பிட்டுள்ளார்.

2017ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி சரோஜாவிடம் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயைத் தான் வழங்கியதாகவும் அப்போது அவருடன் அவரது கணவர் லோகரஞ்சன் இருந்தார் எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.பின்னர் பாக்கி இருந்த 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை லோகரஞ்சனிடம் கொடுத்ததாகவும் அப்போது முன்னாள் அமைச்சர் சரோஜா உடனிருந்ததாகவும் குணசீலன் கூறியுள்ளார்.தான் கொடுத்த பணத்தில்தான் தற்போது அவர்கள் ராசிபுரத்தில் வசிக்கும் புதிய வீட்டை வாங்கியதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் உச்சம் தொட்ட டெலிகிராம்! எவ்வளவு பயனாளர்கள் தெரியுமா?

0

இந்தியாவில் உச்சம் தொட்ட டெலிகிராம்! எவ்வளவு பயனாளர்கள் தெரியுமா?

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப்பிற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்த டெலிகிராம் வெள்ளிக்கிழமை ஒரு பில்லியன் உலகளாவிய பதிவிறக்கங்களை அடைந்த பிறகு ஒரு அற்புதமான சாதனையை அடைந்தது.இந்த சாதனையின் மூலம் உடனடி செய்தியிடல் பயன்பாடு இந்தியாவில் பின்வருவனவற்றைக் கண்டறிந்துள்ளது.

உலகில் உள்ள அனைத்து பயன்பாட்டு பதிவிறக்கங்களிலும் 22 சதவிகிதம் கொண்டுள்ளது.சென்சார் டவர் படி இது இந்தியாவின் டெலிகிராமின் மிகப்பெரிய சந்தையாக உள்ளது.புதிய சர்ச்சைக்குரிய தனியுரிமைக் கொள்கை செயல்பாட்டில் இருந்த பிறகு கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப்பில் இந்திய நுகர்வோரின் நம்பிக்கை குலுங்கியது.

வணிகக் கணக்குகளுடன் பயனர் தகவல் பரிமாற்றத்தை இந்தக் கொள்கை பாதிக்கிறது.அடிப்படையில் புதிய அப்டேட்டான வாட்ஸ்அப்பில் வணிக உரையாடல்களை விளம்பர நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதித்திருக்கும்.இவை முறையான கவலைகள் என்றாலும் பயனர் தரவைப் பற்றிய பல தவறான கருத்துக்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற நாட்டின் பிற பயன்பாடுகளின் வளர்ச்சியைத் தூண்டியது.

அவர்கள் பயனர்களுக்கு பாதுகாப்பான மாற்றீட்டை உறுதியளித்தனர்.மிக முக்கியமாக மார்க் ஜுக்கர்பெர்க்கின் பேஸ்புக் இன்க் குறித்து நுகர்வோர் எச்சரிக்கையுடன் வளர்ந்து வருகின்றனர்.இது முறைகேடுகளில் குற்றம் சாட்டப்பட்டு தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நம்பிக்கையற்ற குழுக்களின் ரேடாரின் கீழ் உள்ளது.டெலிகிராம் 2013இல் தொடங்கப்பட்டது மற்றும் பயனர் தனியுரிமை மற்றும் பாதுகாவலராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

டெலிகிராம் போலவே வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தையும் இந்தியா தான்.இந்தியாவிற்குப் பிறகு டெலிகிராம் ரஷ்யாவில் அதிக எண்ணிக்கையிலான பயன்பாட்டு பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது.அனைத்து பயன்பாட்டு பதிவிறக்கங்களிலும் 10 சதவீதத்தைக் குறிக்கிறது.2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் டெலிகிராம் 214.7 மில்லியனுக்கும் அதிகமான பயன்பாட்டு நிறுவல்களுடன் ஆண்டுக்கு ஆண்டு 61 சதவீத வளர்ச்சியைக் கண்டது.சென்சார் டவரின் கூற்றுப்படி டெலிகிராம் 1 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை அடைந்த பதினைந்தாவது பயன்பாடாக மாறியுள்ளது.பேஸ்புக்,இன்ஸ்டாகிராம்,ஸ்னாப்சாட்,ஸ்பாட்டிஃபை,நெட்ஃபிக்ஸ்,வாட்ஸ்அப் ஆகியவை இந்த சாதனையை அடைந்த பிற பயன்பாடுகளாகும்.