Tuesday, July 15, 2025
Home Blog Page 4231

ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீசார் மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி!

0

ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீசார் மீது கடும் நடவடிக்கை! உயர்நீதிமன்றம் அதிரடி!

சென்னை உயர்நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையாளர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆகியோரை துன்புறுத்தும் போலிசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் கொண்டுவர தமிழக அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில் பின்னர் அவர்கள் காதலிக்கத் தொடங்கினர்.இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர்.இதற்கு இவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் இருவரும் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.ஒரு தொண்டு நிறுவனக் காப்பகத்தில் தங்கி வேலை தேடி வந்துள்ளனர்.இதனால் அந்த பெண்களின் பெற்றோர்கள் அவர்களை காணவில்லை என்று போலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் மீது பதிவு செய்த வழக்கில் அந்த இரண்டு பெண்களும் தங்களைத் துன்புறுத்தக் கூடாதென்றும் தங்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஓரினச்சேர்க்கையாளர்கள் நலன்களை அங்கீகரிப்பது தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி நீதிமன்றம் அதை அமல்படுத்த எடுத்த முன்னெடுப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஓரினச்சேர்க்கையாளர்களும் மூன்றாம் பாலினத்தவர்களும் காவல்துறையால் துன்பங்கள் அனுபவிக்கக் கூடாதெனவும் அவர்களை எப்படி கையாள வேண்டும் எனவும் இது குறித்து காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சமூகத்தினரை காவல்துறை துன்புறுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய அவர் காவல்துறை நடத்தை விதிகளில் புதிய விதிகள் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.மேலும் ஒடுக்கப்பட்டோர் நலன்களுக்கு பல சீர்திருத்தங்களை செய்த மாநில அரசு இவர்கள் முன்னேற சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

டெல்லியில் பலத்த மழை : போக்குவரத்து ஸ்தம்பித்தது

0

டெல்லியில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் இந்த சூழ்நிலையில் இந்திய வானிலை மையம் தலைநகருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கன மழையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முட்டிவரை தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது குறிப்பாக ஆசாத் மார்க்கெட், பிரதாப் நகர் ஆகிய இடங்களில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்துள்ள நிலையில் ஆக்ரா_டெல்லி இடையிலான இருப்புப் பாதைகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பதினைந்துக்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக சென்றன.
ஆகஸ்ட் மாதம் டெல்லியில் 144.7மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் செப்டம்பர் 4ஆம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பிசாசு2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது! மிஷ்கின் அடுத்த ஹிட் கொடுப்பதற்கு தயாராகிறாரா?

0

பிசாசு2 படப்பிடிப்பு முடிந்துவிட்டது! மிஷ்கின் அடுத்த ஹிட் கொடுப்பதற்கு தயாராகிறாரா?

2014ஆம் ஆண்டு பிசாசு திரைப்படம் தமிழில் வெளியானது.இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தை இயக்கினார்.இயக்குனர் பாலா இந்த படத்தைத் தயாரித்தார்.அறிமுக நடிகரான நாகா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இந்த படத்திற்கு அர்ரோல் கொரெல்லி இசையமைத்தார்.படத்திற்கு பின்னணி இசையை இளையராஜா அமைத்தார்.

இந்தத் திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது.மேலும் அந்த வருடத்தின் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும்.இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக இயக்குனர் மிஷ்கின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.சமீபகாலமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார்.நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அஜ்மல் ஆகியோர் இந்த படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனர்.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது.தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.இந்த படத்தின் பேட்ச் வொர்க் எனப்படும் படப்பிடிப்பு மூன்று நாட்களாக சமீபத்தில் நடந்தது.இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததால் பிசாசு2 படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.திரைப்படம் கூடிய விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

படக்குழு டிசம்பர் மாதம் பிசாசு2 திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.முதல் பாகமான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றதால் இந்த படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேலும் இதுவும் திகில் திரைப்படம் என்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது.மிஷ்கின் இயக்கும் இந்த படத்தை அவரது ரசிகர்களும் தமிழ் திரையுலகமும் எதிபார்த்துக் காத்திருக்கின்றனர்.மிஷ்கின் இதற்கு முன் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளது.அதேபோல் இந்த படமும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

திருமணத்திற்கு பெண் தேடி டீ கடையில் விளம்பரம்! வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள்!

0

திருமணத்திற்கு பெண் தேடி டீ கடையில் விளம்பரம்! வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகள்!

தற்போது திருமணம் செய்வது என்றாலே பெரிய குதிரை கொம்பான விஷயமாக இருக்கிறது. அதுவும் முக்கியமாக ஆண்களுக்குதான் அதிகம். பெண்கள் வீட்டில் இவ்வளவுதான் கட்டளைகள் என்று இல்லை. பெண்ணின் வீட்டில் சொல்லும் அனைத்திற்கும் சரி என்றால் மட்டுமே திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்கள். அதுவும் மிகவும் பாவம் 90 களின் பசங்க தான். அவர்களது நிலைமை முதலில் ஜாதகம் ஒத்துப்போக வேண்டும். அதன் பிறகு ஒருவருக்கொருவர் பிடிக்க வேண்டும். அதன் பின்பு நாம் பேசி பழகும் விஷயங்கள், இரு வீட்டினரின் அனுமதி, சீர், செனத்தி என அனைத்தையும் கணக்கிட்டு தான் ஒரு திருமணம் அமைகிறது.

தற்போது எந்த வரதட்சணையும் இன்றி திருமணம் கட்டிக்கொள்கிறேன் என்றாலும் பெண்கள் வீட்டில் நிறைய கட்டளைகளை சொல்ல்கிறார்கள். சிலர் வாழ்க்கையில் பெண்ணை திருமணத்திற்காக தேடிக் கொண்டே இருக்கின்றனர். அப்போதும் அவர்களுக்கு அமைய மாட்டேன் என்கின்றது. இப்போதுள்ள பெண்கள் எல்லாம் நிறைய ஸ்டேட்டஸ் பார்த்து தான் சரி என்று சொல்கிறார்கள். அப்படி ஒரு நிலையில் தற்போது கேரளாவில் திருச்சூரில், டீக்கடையில் ஒரு விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் திருமணத்திற்கு பெண் தேவை என அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.

அவர் திருமணத்திற்காக ஜாதி, மதம் பார்க்கவில்லை என குறிப்பிட்டு, அவரது கைப்பேசி எண்ணையும் தெரிவித்து இருந்தார். அவர் எந்த பதிவு நிலையங்களுக்கும் செல்லவில்லை,  தரகரையும் நாடாமல் அவரது டீக்கடையில் ஒரு பலகையை மாட்டியுள்ளார். ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் , பெண் தேவை என்று மட்டும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதை அவரது நண்பர்கள் சிலர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அதன்காரணமாக தற்போது ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர் போன்ற நகரங்களிலிருந்து எல்லாம் அழைப்புகள் வருகிறதாம்.

இது பற்றி 33 வயதான உன்னிகிருஷ்ணன் நம்மிடம் கூறும்போது எனக்கு தலையில் கட்டி இருந்தது. தற்போது அந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டேன். அதன் பின் வாழ்கையை துவங்கலாம் என ஒரு லாட்டரி கடை ஆரம்பித்தேன். பின் அதையே ஒரு டீக்கடை ஆக மாற்றி விட்டேன். தற்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். நான் ஒரு தினக்கூலி. எனவே எனக்கு திருமணம் செய்ய பெண் தேவை என விளம்பரப்படுத்தினேன். இதை பதிவிட்ட எனது நண்பர்களின் காரணமாக எனக்கு பல்வேறு அழைப்புகள் வருகின்றன.

இந்த தகவலை பார்த்து சிலர் வாழ்த்துக்களும் தெரிவிக்கின்றனர். திருமணம் சீக்கிரம் நடக்கும் என்றும், ஒரு சிலர் இணையத்தில் பதிவிட்ட தற்காக திட்டியும் கருத்துகளை பதிவு செய்கின்றனர். குறிப்பாக ஜாதி, மதம் தேவையில்லை என்பதன் காரணமாக பலர் என்னைப் பாராட்டி வருகின்றனர். தற்போது வரும் அந்த அழைப்புகளை எடுத்து பேச கூட நேரமில்லாத அளவுக்கு, அவ்வளவு அழைப்புகள் வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு வந்த சிக்கல்! தமிழக அரசு என்ன சொல்கிறது?

0

தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு வந்த சிக்கல்! தமிழக அரசு என்ன சொல்கிறது?

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.

தாலிக்குத் தங்கம் திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களினால் தொடங்கப்பட்டது.அதற்கு முன்பான தி.மு.க ஆட்சியில் திருமண உதவித் திட்டம் இருந்து வந்தது.தாலிக்குத் தங்கம் திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பை தமிழக அரசானது சுற்றறிக்கையாக தற்போது வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் தாலிக்குத் தங்கம் திட்டமானது மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு மட்டும்தான் எனவும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அவர்கள் வீட்டில் அரசு வேலையில் யாரும் இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.மாடிவீடு உள்ளவர்களும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.இதனிடையே தற்போது திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணத்திற்கு இந்த திட்டம் செல்லுபடியாகாது.அதனால் திருமண மண்டபங்களில் திருமணம் செய்வோர் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

இதனால் தாலிக்குத் தங்கம் திட்டத்தின் மூலம் பயனடைவோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது.மேலும் திருமண மண்டபத்தில் திருமணம் செய்தவர்களும் இதற்கு முன்பு பயனடைந்து வந்தனர்.இந்த தகவலால் பெற்றோர்கள் மற்றும் திருமணம் ஆகவிருக்கும் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து சாதனை படைத்த ஒரே நபர்! – மேட்டுர் பத்மராஜன்!

0

அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து சாதனை படைத்த ஒரே நபர்! – மேட்டுர் பத்மராஜன்!

சேலத்தைச் சேர்ந்த பத்மராஜன் என்ற நபர் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு தோற்றார். அதற்காக சான்றிதழ் வாங்கி அதற்கான பெருமையை படைத்துள்ளார். இவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள குஞ்சாண்டியூரில் இருக்கிறார். இவர் அனைத்து தேர்தல்களிலும் கலந்துகொண்டு ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாமல் தோல்விகளையே சந்தித்து உள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் இவர் உள்ளாட்சித் தேர்தல் முதல் மாநிலங்களவை தேர்தல்கள் வரை அனைத்திலும் பங்கு கொண்டுள்ளார். மேலும் பல வி.ஐ.பி க்களை எதிர்த்து மனு தாக்கல் செய்தும் வந்துள்ளார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற்றதில்லை இருந்தாலும் ஜனநாயகம் என்பது அனைவருக்கும் சமம் என்ற காரணத்திற்காக எல்லா தேர்தல்களிலும் அவர் போட்டியிடுகிறார்.

இதனை ஊக்குவிக்கும் வகையில் லிம்கா சாதனை புத்தகம் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் போன்ற அமைப்புகள் சாதனை படைத்தவர் இன் எண்ணிக்கையில் இவரையும் சேர்த்துள்ளனர். அந்த வகையில் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வியுற்ற ஒரே நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். டெல்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து தேர்தல் மன்னன் பத்மராஜன் கூறுகையில் விஐபிக்களை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.

தேர்தலில் நின்றால் சாமானிய மக்களுக்கு வரும் உருட்டல், மிரட்டல், கேலி என அனைத்தையும் தாங்கிக் கொண்டுதான் நானும் இதை செய்து வருகிறேன். 50 லட்சம் வரை  டெபாசிட் தொகையாக கட்டிய பணம் மட்டுமே செலவாகியுள்ளது. வெற்றி பெற்றவர்களை மட்டுமே இந்த உலகம் பார்த்து, பாராட்டி வருகிறது. ஆனால் தோல்வி அடைந்தவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை ஊக்கப்படுத்த இந்த புத்தகங்களில் எனது பெயர் இடம் பெற்றுள்ளது. இதுபோல இன்றைய இளைஞர்கள் தோல்வியைக் கண்டு மனம் தளராமல் வெற்றிபெற உறுதியோடு போராட வேண்டும். வெற்றிக்கு தோல்வியே முதல் படி என்பதை யாரும் மறக்கக்கூடாது என்றும் கூறினார்.

புகையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்! பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை!

0

புகையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்! பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் புகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.ராமதாஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தடை இருந்தபோதிலும் மாநிலத்தில் குட்கா விற்பனை தடையின்றி தொடர்கிறது.

கஞ்சா,அபின்,ஹெராயின்,கோகோயின் மற்றும் எல்எஸ்டி போன்ற அனைத்து வகையான மருந்துகளும் மாநிலத்தில் கிடைக்கின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.இது இளைஞர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அவர் மாநிலத்தில் மாணவர்களின் தற்கொலையை புகையிலை பொருட்களின் நுகர்வுடன் தொடர்புபடுத்தினார்.புகையிலை பொருட்களின் விற்பனையை சரிபார்க்க தற்போதைய சட்டம் திருத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில சட்டசபைக்கு அறிவித்த பிறகு இது வருகிறது.

இது மருந்து விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிக்கும்.ஆகஸ்ட் 18 அன்று பாமக சட்டமன்ற கட்சித் தலைவர் மாநிலத்தில் புகையிலைப் பொருட்களை முற்றிலுமாக தடை செய்ய சட்டம் கோரியிருந்தார்.சட்டசபையில் அவர் இந்த நடவடிக்கை தமிழகத்தில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் என்று கூறினார்.முதல்வர் ஸ்டாலின் அளித்த உத்தரவாதத்தை டாக்டர் ராமதாஸ் வரவேற்றார்.எனினும் அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசாங்கத்தை குறிவைத்தார்.

குட்கா மற்றும் பிற புகையிலை பொருட்கள் தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே திறன்களை அழிப்பதற்குப் பின்னால் உள்ளன.குட்கா மையத்தால் செய்யப்பட்ட சட்டத்தைத் தொடர்ந்து நாட்டில் 24 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மே 8,2013 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்டது.இருப்பினும் புகையிலை பொருட்களின் விற்பனை மாநிலத்தில் தடையின்றி உள்ளது என்று அவர் அந்த அறிக்கையில் கூறினார்.அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் மருந்துகள் தடையின்றி விற்கப்படுவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

போதை காரணமாக கல்வியை இழந்த பல மாணவர்கள் உள்ளனர்.கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலைக்கு இதுவே காரணம் என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன்

0

மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். இந்த போட்டிகள் தொடங்கிய போது தான் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எனக்கு ஒன்றும் பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் 180 மீட்டர் உயரம் தாண்டிய பிறகு மழை அதிகமானது. அதன் காரணமாக எனது ஊனமான காலில் அணிந்திருந்த சாக்ஸ் ஈரமாகி விட்டது. அப்போது ஓடிச்சென்று அதிக உயரம் தாண்டும் போது கால் வழுக்கியதன் காரணமாக என்னால் தங்கம் வாங்கும் அளவிற்கு உயரம் தாண்ட முடியவில்லை.

இந்த மழை வராமல் சீதோஷ்ண நிலை சரியாக இருந்திருந்தால் நான் நிச்சயம் 1.90 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றிருப்பேன். எனது லட்சியம் மழையினால் வீணாகி விட்டது. நான் சிறப்பாக விளையாடி இருந்தால் 1.90 மீட்டர் உயரம் தாண்டி இருப்பேன். மேலும் தங்கப் பதக்கத்தையும் வென்று இருப்பேன், என்றும் உலக சாதனையோடு தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எனது இலட்சியம் இந்த ஒலிம்பிக்கில் நிறைவேறவில்லை.

அடுத்த முறை கண்டிப்பாக வரலாறு படைக்க முயற்சிப்பேன். கொரோனா நபர்களுடன் நெருங்கி இருந்ததால் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை நான் இழந்தேன். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்தேன். அது மட்டுமின்றி பயிற்சியிலும் தனியாகவே ஈடுபட வேண்டியதாகிவிட்டது. ஆனாலும் நான் தேசத்துக்காக பதக்கம் வெல்வதில் உறுதியாக இருந்தேன். அதை செய்து காட்டியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாரியப்பன் கூறினார்.

ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்! அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி!

0

ஓபிஎஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்! அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி சற்றுமுன் மாரடைப்பால் காலமானார்.அவரது மனைவி விஜயலட்சுமி சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார்.கடந்த சில நாட்களாகவே அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அவரின் உடல்நிலையில் கவனம் செலுத்தி வந்தார்.

மறைந்த விஜயலட்சுமி அவர்களுக்கு வயது 66.இவரின் மறைவுக்கு பல கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது இரங்கலை ஒபிஎஸ் அவர்களுக்கு தெரிவித்தார்.அடுத்து அதிமுக தலைவரும் சட்ட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்தார்.மேலும் தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு,துரைமுருகன்,தங்கம் தென்னரசு,மா.சுப்பிரமணியம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் நேரில் சென்று தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.

முன்னாள் முதல் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அரசியல் பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவரது மனைவி விஜயலட்சுமி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.கடந்த 22ம் தேதி விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.குடல் இறக்கம் பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்த இறப்பானது தமிழக மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது மற்றும் மருத்துவர்களிடம் அவரின் மனைவியின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தது குறிப்பிடத்தக்கது.இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்! வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

0

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளைய தினம் சேலம், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் ஓரிரு உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வரும் 4ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.