Monday, July 21, 2025
Home Blog Page 45

அப்பா வை விரட்ட மகன் போட்ட பலே திட்டம்!! கட்சியே இனி அன்புமணி க்கு தான்!!

PMK : பாமக கட்சியானது இரண்டாக பிளவுபட போகிறது என்று நேற்று ராமதாஸ் வைத்த செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் நன்றாக அறிய முடிந்தது. அதுமட்டுமின்றி முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அன்புமணியின் அனைத்து பொறுப்புகளையும் மகள் வழி பேரனான முகுந்தனுக்கு தர ஏற்பாடு செய்யப்படுகிறதாம். அதேபோல நேற்று நடந்த பிரஸ் மீட்டில் முன்னதாக நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏன் யாரும் வரவில்லை என்பது குறித்து விவரித்து பேசியிருந்தார்.

இவரது இந்த பேட்டியானது அரசியல் களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியதோடு இவர்களின் மோதல் போக்கு தீவிரம் அடைந்ததையும் காட்டியுள்ளது. நேற்று இவர் பேட்டி அளித்ததை வைத்து பார்க்கையில், ராமதாஸ் அழைப்பிற்கு கூட்டத்திற்கு வராத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிகிறது. புதிய நிர்வாகிகளை அமைத்து அரசியல் கட்சியை மேற்கொண்டு வலுப்படுத்த ராமதாஸ் முயற்சிப்பதாக கூறுகின்றனர். ஆனால் அன்புமணியும் ராமதாஸ் அவர்களின் செயலை பொறுக்க முடியாமல் மாற்று ஆலோசனை செய்து வருகிறார்.

என்னதான் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினாலும் அதனை தற்போது வரை பொதுக்குழு அங்கீகரிக்கப்படவில்லை. மேற்கொண்டு தேர்தல் ஆணையமும் அன்புமணியை தான் தலைவர் என்ற முடிவில் உள்ளது. ஆகையால் இதனை பலமாக்கி அவசர பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார். இதனை வைத்து கட்சி அதிகாரத்தை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் அன்புமணி இருப்பதாக கூறுகின்றனர். இறுதி கட்டத்தில் தான் மாம்பழம் யார் கைக்கு போகும் என்பதை பார்க்க முடியும்.

“நீங்கள் அனைத்துப் பெண்களுக்கும் கணவர் அல்ல” – பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி!

“நீங்கள் அனைத்துப் பெண்களுக்கும் கணவர் அல்ல” – பிரதமர் மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க மாநிலம் அலிப்பூர்துவார் பகுதியில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மம்தா பானர்ஜி அரசை கடுமையாக விமர்சித்தார்.

“மேற்கு வங்கம் இன்று ஊழல், வன்முறை, மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவால் சிக்கிய மாநிலமாக மாறியுள்ளது. இதற்கு மாநில அரசே காரணமாக உள்ளது. முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் நடந்த நிகழ்வுகள், இந்த அரசாங்கத்தின் இரக்கமற்ற முகத்தை காட்டுகின்றன.

சமாதானம் என்ற பெயரில் குற்றவாளிகள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். காவல்துறையினர் முற்றிலும் செயலற்று நிற்கிறார்கள். இளம் தலைமுறையும், ஏழை மக்களும், குறிப்பாக பெண்களும் மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் தவிக்கிறார்கள்.

மம்தா பானர்ஜியின் கட்சி 24 மணி நேரமும் அரசியலில் மட்டுமே ஈடுபடுகிறது; மாநில வளர்ச்சி குறித்து சிறிதும் அக்கறை இல்லை. அதனால் தான் மத்திய அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மாதிரியாக, விரைவில் ‘ஆபரேஷன் பெங்கால்’ என்ற திட்டத்துடன் மேற்கு வங்கத்தை மீட்டெடுக்க விரும்புகிறது”
என மோடி தெரிவித்தார்.

இந்தக் கருத்துகள், குறிப்பாக “ஆபரேஷன் பெங்கால்” மற்றும் பெண்கள் நலன் குறித்து மோடி பேசிய விதம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, பிரதமரின் பேச்சு குறித்து கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது “பிரதமர் மோடி, பெண்களின் மரியாதையை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்பது பெண்களின் வாழ்க்கையை அரசியல் கருவியாக்கும் முயற்சி. சிந்தூர் என்பது ஒரு பெண்ணின் கணவரால் தரப்படும் மரியாதையின் அடையாளம்.

பிரதமர் மோடி, நீங்கள் எல்லா பெண்களுக்கும் கணவர் அல்ல. உங்கள் சொந்த மனைவிக்கு கூட சிந்தூர் கொடுக்க தயங்கிய நீங்கள், இப்போது நாங்கள் அனைவருக்கும் உரிமை கொண்டது போல் பேசுகிறீர்கள்!

‘ஆபரேஷன் பெங்கால்’ என்றால் என்ன? எங்களை மீட்பதா, அழிப்பதா? இது வங்காள மக்களுக்கு எதிரான அவமதிப்பு. உங்கள் கட்சியில் பெண்களுக்கு அடிப்படை மரியாதையும் இல்லை.

நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். ஆனால் எங்கள் சுயமரியாதையை இழக்க மாட்டோம். நாட்டில் நடைபெறும் உங்கள் கட்சியினர் சார்ந்த ஆபாச சம்பவங்களைப் பற்றி நீங்கள் பேசமாட்டீர்கள், ஆனால் எங்களை குற்றம் சொல்ல வருகிறீர்கள் என்று விமர்சித்துள்ளார்.”

மம்தாவின் இந்தக் கடுமையான விமர்சனத்தின் பின்னணியில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றை ஆதாரமாக குறிப்பிட்டு பேசியுள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் மனோகர் லால் தாக்கத், ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருந்ததாகக் கூறப்பட்ட அந்த வீடியோ விவகாரம் இதனால் மீண்டும் அதிக கவனத்தை பெற்றது. இதைத் தன் பதிலில் மம்தா குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனை மிரட்டும் கன்னட அமைப்புகள்! முதல்வர் அமைதி காப்பாதா? சீமான் கேள்வி

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தக் லைஃப் பட ப்ரமோஷன் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழிலிருந்து தான் கன்னடம் வந்தது என கூறி இருந்தார். இந்நிலையில் அவருடைய இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில், கர்நாடகாவில் கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரத்தில் கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, நடிகர் கமல்ஹாசன் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட விட மாட்டோம் என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், ‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று உண்மையை கூறியதற்காக கமல்ஹாசன் அவர்களை கன்னட அமைப்புகள் மிரட்டுவதா? அதனைப் பார்த்துக்கொண்டு முதல்வர் அமைதி காப்பதா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,” தக் லைஃப் (Thug life) படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், உலகநாயகன் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்ற வரலாற்று உண்மையை கூறியதற்காக அவரது படங்களை கர்நாடாகவில் திரையிட விடமாட்டோம், அவரை கர்நாடகாவில் நுழைய விடமாட்டோம் என்றெல்லாம் ஒருசில கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுப்பதும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடிபணியவைக்க நினைப்பதும், தக் லைஃப் திரைப்படத்தின் பதாகைகளைக் கிழித்து அவமதிப்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகளுக்கு மட்டுமல்ல உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி தான் என்பது உலக மொழியியல் அறிஞர்கள் ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட வரலாற்றுப் பேருண்மையாகும். அந்த வரையறைக்குள் கன்னட மொழியும் அடங்கும் எனும்போது அதை ஏற்பதில் கன்னட அமைப்புகளுக்கு என்ன சிக்கல்? அதிலும் அண்ணன் கமல்ஹாசன் அவர்கள் நாமெல்லாம் சகோதர மக்கள் எனும் பொருள்படும்படியாகவே அக்கருத்தினை அந்த இடத்தில் தெரிவித்திருந்ததை, அவரது பேச்சை முழுமையாக உள்வாங்கும் அனைவராலும் எளிதாக உணர முடியும்.

ஆனால், தமிழ்மொழி தோன்றி வளர்ந்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, அதிலிருந்து கிளைத்த மொழி கன்னடம் என்ற வரலாற்று உண்மையை ஏற்க மனமில்லாத கன்னட வெறியர்களே, இத்தனை வன்முறை பேச்சுக்களையும் மிரட்டல்களையும் விடுக்கின்றனர். அதனை கர்நாடகத்தை ஆளும் காங்கிரசு அரசும் கண்டித்து தடுக்காது ஊக்குவிக்கின்றது என்பதுதான் பெருங்கொடுமையாகும்.

தமிழிலிருந்து கன்னடம் உருவானது என்பது கன்னட மொழிக்கு பெருமைதானே தவிர சிறுமை அல்ல; ஒருவேளை அந்த கருத்தில் கன்னட அமைப்புகளுக்கு மாற்றுக்கருத்து ஏதேனும் இருந்தால், தமிழைவிட கன்னடம்தான் மூத்த மொழி என்பற்கான வரலாற்று ஆதாரங்களை, இலக்கியச் சான்றுகளை, மொழியறிஞர்களின் ஆய்வு முடிபுகளைத் தந்து அறவழியில் மறுக்க வேண்டும்; ஆக்கப்பூர்வமான வாதங்களை முன்வைக்க வேண்டும்! அதையெல்லாம் விடுத்து, அண்ணன் கமல்ஹாசனை கர்நாடகாவில் நுழையவிடமாட்டோம், அவரது படங்களைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?

தமிழ் படங்கள்தான் கர்நாடாகவில் திரையிடப்படுகிறதா? கன்னட படங்கள் தமிழ்நாட்டில் திரையிடப்படவே இல்லையா? அண்ணன் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை அங்கே திரையிட அனுமதிக்காவிட்டால், ஒரு கன்னட திரைப்படத்தைக்கூட தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று பதிலுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தை முன்னெடுத்தால் அது ஆக்கப்பூர்வமானச் செயலாக இருக்குமா? காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்று சொன்ன கன்னட திரைக்கலைஞர்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் திரையிட தமிழர்கள் நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே? இன்னமும் அந்த நடிகர்களின் திரைப்படங்கள் தமிழ் நாட்டில் திரையிடப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன? தமிழர்கள் அதனை அனுமதித்துக் கொண்டுதானே இருக்கின்றோம்? கலையை கலையாகப் பார்க்கக்கூடிய அத்தகைய அறச்சிந்தனை கன்னட அமைப்புகளுக்கு ஏன் இல்லை?

ஒருவேளை தமிழர்கள் அறச்சீற்றம் கொண்டு அப்படங்களை எல்லாம் தடுக்க முனைந்தால் தமிழ்நாட்டில் ஒரு கன்னடப் படத்தைக்கூட திரையிட முடியாதச் சூழலை ஏற்படுத்த முடியும். அவற்றைத்தான் கன்னடவெறி அமைப்புகள் விரும்புகின்றனவா? அப்படி ஒரு எதிர் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைக்கு தமிழர்களை கன்னட அமைப்புகள் தள்ளமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன்.

ஏற்கனவே, காவிரி நதிநீர் போராட்டத்தின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், இறுதி மரியாதை செய்தும் கன்னடவெறி அமைப்புகள் அவமதித்தபோது எவ்வித எதிர்வினையும் ஆற்றாது தமிழ்நாடு அரசு அமைதியாக கடந்துபோனதைப்போல, தற்போதும் கடந்துபோகக்கூடாது. உண்மையறியாது போராடும் கன்னட இனவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்த்திரையின் பெருமைமிக்க கலை அடையாளம் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை என்று அவமதிக்கின்றார்.

ஆனால், அதற்கு பதிலடி தரவேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இதுவரை வாய்திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? கள்ள அமைதியை கடைபிடிப்பதன் மூலம் அண்ணன் கமல்ஹாசன் அவர்களை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதிக்கின்றீர்கள். எனவே, கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரசு அரசிடம் பேசி, போராடும் கன்னட அமைப்புகளைக் கட்டுப்படுத்தி தேவையற்ற பதற்றத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் தோன்றியது என்பதை கன்னட மொழியியல் அறிஞர்கள் மிக நன்றாக அறிவார்கள்; அவர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதன் மூலம், இரு மாநில மக்களின் ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைக்கும் செயல்களில் இனியும் கன்னட அமைப்புகள் ஈடுபட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, கர்நாடக மாநில அரசு, கன்னட அமைப்புகளின் வீணான வெறிச்செயலுக்கு தூபம் போடுவதை விடுத்து, இரு மாநில மக்களின் நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் அண்ணன் கமல்ஹாசன் அவர்களையும், தக் லைஃப் திரைப்பட குழுவையும் மிரட்டும் அடவாடிச் செயல்களில் ஈடுபடும் கன்னடவெறி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தக் லைஃப் திரைப்படத்தைத் தக்க நேரத்தில் திரையிட உரிய பாதுகாப்பை அளித்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.” என கூறியுள்ளார்.

உடலில் வாயு பிடிப்பு பிரச்சனையா? இந்த விதை நீர் குடித்தால்.. வாழ்நாள் தீர்வு கிடைக்கும்!!

0

நமது உடலில் ஆறு வழியாக வாயுக்கள் பிரிகிறது.ஆசனவாய்,தும்மல்,கொட்டாவி,இருமல்,ஏப்பம்,பெருமூச்சு போன்றவற்றின் மூலம் உடலில் இருக்கின்ற வாயுக்களை வெளியேற்றி வருகின்றோம்.இப்படி வரும் வாயுக்களை வலுக்கட்டாயமாக அடக்கினால் அவை உடலில் தசைகளுக்குள் பரவி வலியை ஏற்படுத்தும்.

முதுகு குத்தல்,நெஞ்சு பகுதியில் வலி ஏற்படுதல்,மூச்சு விடுவதில் சிரமம்,இடுப்பு பகுதியில் வலி போன்றவை வாயுக்கள் குவிந்தலால் ஏற்படுகிறது.இந்த வாயுக்களை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.

வாயுத் தொல்லை மூச்சு குத்தலை சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்:

1)காலை நேரத்தில் ஒரு கிளாஸ் பெருஞ்சீரகத் தேநீர் பருகினால் வாயுத் தொல்லை,மூத்து குத்தல் பிரச்சனை சரியாகும்.

2)தினமும் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடிக்கலாம்.

3)ஒரு கிளாஸ் வெந்தய பானம் பருகி வந்தால் வாயுத் தொல்லை மூச்சு குத்தல் பாதிப்பு குணமாகும்.

4)சீரக பானம் பருகி வந்தால் வாயுத் தொல்லை மூச்சு குத்தல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

5)இஞ்சி மற்றும் புதினா இலைகளை கொண்டு தேநீர் செய்து பருகினால் வாயுத் தொல்லை மூச்சு குத்தல் பாதிப்பில் இருந்த்து நிவாரணம் கிடைக்கும்.

6)ஒரு கிளை சொட்டுநீரில் சில துளிகள் கிராம்பு எண்ணெய் கலந்து குடித்தால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

7)ஓம விதை நீரை பருகி வந்தால் வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,மூச்சு குத்தல் பாதிப்பு குணமாகும்.

8)ஒரு கிளாஸ் மோரில் புதினா இலை மற்றும் இஞ்சி துண்டுகளை போட்டு பருகினால் வாயுத் தொல்லை,மூச்சு குத்தல் பாதிப்பு குணமாகும்.

சாகும் வரை சர்க்கரை நோயே வராது.. இந்த ஒரு காயில் ஜூஸ் செய்து குடித்தால்!!

0

முதுமை காலத்தில் ஏற்படும் நோய்களில் ஒன்று சர்க்கரை நோய்.இந்த நோய் தற்பொழுது இளமை பருவத்தினருக்கு அதிகமாக ஏற்படுகிறது.இந்த நோய் சாகும் வரை முழுமையாக குணமாகாது என்பதால் இதனை கட்டுப்பாட்டிற்கு வைத்துக் கொள்ள மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.அதேபோல் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டால் நமக்கு பிடித்த உணவுகளை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது.குறிப்பாக இனிப்பு உணவுகளை சாப்பிடுவதில் கடும் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.

நீரிழிவு நோய் அறிகுறிகள்:-

**அதீத உடல் சோர்வு
**கண் பார்வை மங்குதல்
**அடிக்கடி சிறுநீர் கழித்தல்
**எடை இழப்பு
**அதிக தாகம் எடுத்தல்

நீரிழிவு நோய் வர காரணங்கள்:-

**குடும்ப வரலாறு
**வயது முதுமை
**உட்கார்ந்த நிலை வாழ்க்கை முறை
**கணைய நோய்
**மோசமான உணவுப் பழக்கம்
**உடல் பருமன்

தேவையான பொருட்கள்:-

1)நெல்லிக்காய் – ஐந்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஐந்து பெரிய நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள்.இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

2.பிறகு நெல்லிகாய் விதையை மட்டும் தூக்கி போட்டுவிட்டு சதை பற்றை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.இதற்கு அடுத்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீரை அதில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

3.இந்த நெல்லிக்காயை ஜூஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த நெல்லிக்காய் ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.

4.நெல்லிக்காய் ஜூஸை தினமும் ஒரு கிளாஸ் அளவிற்கு பருகி வந்தால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா காய் – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு கொய்யாக்காய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை மிக்ஸர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

2.இந்த கொய்யாக்காய் ஜூஸை பருகி வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.இந்த கொய்யாக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.

நாய் கடித்தவர்கள் இதை செய்தால்.. ஆபத்துகளில் இருந்து மீண்டுவிடலாம்!!

0

தற்பொழுது தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.சாலைகளில் நாய்கள் அராஜகத்தால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர்.வெறி நாய்கள் மனிதர்களை கடிப்பது அதிகரித்து வருவதால் நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்களும் அச்சத்தில் இருக்கின்றனர்.

வெறி நாய்கள் கடித்தால் உடலில் ரேபீஸ் வைரஸ் தாக்கம் அதிகரித்துவிடும்.நாய் கடியை அலட்சியமாக கொண்டால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தாக அவை மாறிவிடும்.நாய்க்கடி விஷம் உடலில் நுழைந்தால் நிச்சயம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.நாய்கள் மட்டுமின்றி எலி,பூனை போன்றவை கடித்தாலும் அவை விஷமாக மாறி உயிரை பறித்துவிடும்.

உங்களை நாய் கடித்துவிட்டால் நீங்கள் சில விஷயங்களை பின்பற்றி பாதிப்பில் இருந்து உங்களை மீட்டுவிடலாம்.

நாய் கடித்துவிட்டால் உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்கள்:

1)பாதிக்கப்பட்ட இடத்தில் சோப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.பிறகு வெது வெதுப்பான நீரை கொண்டு நாய் கடித்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

2)நாய் கடித்த இடத்தில் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

3)நாய் கடிபட்ட இடத்தில் இரத்தப் போக்கு இருந்தால் காட்டன் துணி கொண்டு அவ்விடத்தை அழுத்தி இரத்த வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

4)பிறகு மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.நாய் கடிக்கு உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவர் சொல்லும் உண்வுமுறையை பின்பற்ற வேண்டும்.

5)நாய் கடிபட்டவர்கள் அடுத்து இரண்டு வாரங்களுக்கு தங்கள் உடல் நிலை மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

சேலம் மாநகராட்சியில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் மீது திமுக கவுன்சிலர் தாக்குதல்: பரபரப்பான மன்ற கூட்டம்

சேலம் மாநகராட்சியில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் மீது திமுக கவுன்சிலர் தாக்குதல்: பரபரப்பான மன்ற கூட்டம்

சேலம் மாநகராட்சியில் மே 29, 2025 அன்று நடைபெற்ற மன்ற கூட்டத்தில், திமுக கவுன்சிலர் சு. சுகாசினி, அதிமுக எதிர்க்கட்சி தலைவர் என். யாதவமூர்த்தியை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்டத்தின் போது, யாதவமூர்த்தி கட்டிட அனுமதிகள் முறையற்ற வகையில் வழங்கப்படுகின்றன என்றும், டெண்டர்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள், அவர் மீது பேப்பர் ஒன்றை தூக்கி எறிந்தனர். பின்னர், திமுக கவுன்சிலர் சுகாசினி எழுந்து, யாதவமூர்த்தியின் அருகில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில், சுகாசினி அவரை கன்னத்தில் அறைந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் மேயர் மேஜை முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேயர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூட்ட அரங்கத்தை விட்டு வெளியேறினர். தொடர்ந்து, திமுக கவுன்சிலர் சுகாசினி சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

இந்த சம்பவம், மாநகராட்சி மன்ற கூட்டங்களில் ஏற்படும் அரசியல் மோதல்களின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

 

திடீரென கட்சி மாற்றம்! திமுகவை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த்

புதுக்கோட்டை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2024 மக்களவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவது அதிமுகவின் கடமை என வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “அரசியலில் நம்பிக்கையே முக்கியம். அதிமுகவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, நாங்கள் 5 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை இடமும் பெறுவதாக உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, அந்த நம்பிக்கையை காப்பது அதிமுகவின் கடமை” எனத் தெரிவித்தார்.

அதே நேரத்தில், திமுக தனது கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கியதைப் பாராட்டிய பிரேமலதா, “அவர்கள் தங்கள் வார்த்தையை நிறைவேற்றினர். நாங்களும் அதே நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என கூறினார்.

மாநிலங்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு உறுதியளித்த மாநிலங்களவை இடத்தை வழங்குமா என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கியமான கேள்வியாக உள்ளது.

மேலும், பிரேமலதா, “பொறுமை என்பது கடலுக்கு மேல். நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். ஆனால், நம்பிக்கையை காப்பது முக்கியம்” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அதிமுக தனது கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு மாநிலங்களவை இடத்தை வழங்குமா அல்லது புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்பது எதிர்வரும் நாட்களில் தெளிவாகும்.

“வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது!” – அன்புமணி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராமதாஸ் தனது மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் நிலவும் பிரச்சனைகளையும், அதற்கான காரணங்களையும் வெளிப்படுத்தினார்.

முக்கிய குற்றச்சாட்டுகள்:

அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக பரிந்துரைத்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணிக்கு தலைமைப் பண்பே இல்லை என்றும், மேடை நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி பொதுக்குழுவில் அன்புமணி மேடையில் மைக்கை தூக்கி டேபிளில் வீசியது போன்ற செயல்களை மேற்கொண்டதாக ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணி, தனது தாயை குடிநீர் பாட்டிலால் தாக்க முயற்சித்ததாகவும், அது சுவரில் பட்டதால் அவர் மீது படாமல் தவிர்க்கப்பட்டது என்றும் கூறினார்.

முகுந்தன் பரசுராமனை பாமக இளைஞரணித் தலைவராக நியமித்ததை அன்புமணி எதிர்த்ததாகவும், அவரது நியமன கடிதத்தை கிழித்து போட்டதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

அன்புமணி, மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என கூறி தனித்தனியாக போனில் பேசியதாகவும், அதனால் 108 மாவட்ட தலைவர்களில் 8 பேர் மட்டுமே வந்ததாக ராமதாஸ் தெரிவித்தார்.

வன்னியர் சங்க மாநாடு முடிந்த பிறகு அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் பலர் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களை ஓய்வெடுக்க வலியுறுத்தி வந்த நிலையில் ராமதாஸ் அவர்களின் இந்த பேட்டியானது விவகாரத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் அன்புமணியின் பதில்கள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து என்ன நடக்கும் என கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிய விசா கோரிய மாணவர்களுக்கு வைத்த செக்! புதிய கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா!!

அமெரிக்கா அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப அங்குள்ள இளைஞர்களின் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகின்றார். மேலும் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் விசா குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அவை தற்போது கடுமையாகப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா பல்கலைக்கழகத்தை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர். இதில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் இந்தியாவில் இருந்து செல்பவர்கள். இந்நிலையில் வெளிநாட்டு புதிய விசா மாணவர்களின் நேர்காணல்கள் நிறுத்தி வைக்கும்படி அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புதிதாக விசா கோரி உள்ள மாணவர்களின் பேஸ்புக், எக்ஸ் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை சோதனை செய்யப்படும். அதில் ஏதேனும் பயங்கரவாத ஆதரவு காணப்பட்டால் அவர்களுடைய விசா மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் புதிதாக விசாவிற்கு கோரி உள்ள மாணவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் அமெரிக்க மாணவர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கி வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் படிப்பை கவனிக்காமல் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் மாணவர்கள் மிகவும் அவதியடைவதாக கூறப்படுகின்றது.