Tuesday, July 29, 2025
Home Blog Page 4535

இன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக்! படுகுஷியில் குடிமகன்கள்

0

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் 21ஆம் தேதி தொடங்கி தரவுகளுடன் கூடிய ஓர் அணங்கு நீட்டிக்கப்பட்ட இருக்கிறது அதன்படி இந்த முதல் முடி திருத்தும் கடைகள் அழகு நிலையங்கள், தேநீர் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடுமையான கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில் அமல்படுத்த பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவாமல் படிப்படியாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இதற்கு முன்னரே அமலில் இருந்துவரும் ஊரடங்கு இன்றைய தினம் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு இந்த ஊரடங்கு நீட்டிப்பு குரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதோடு பல தளர்வுகளையும் அறிவித்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதன்படி நோய்த் தொற்று அதிகம் இருக்கின்ற 11 மாவட்டங்களை தவிர்த்து விட்டு மற்ற 27 மாவட்டங்களில் இன்னும் பல தளர்வுகளை அறிவித்து ஊரடங்கு அமல் படுத்தி இருக்கிறது தமிழக அரசு.

அதன்படி இன்று முதல் தமிழ்நாட்டில் இருக்கின்ற முடி திருத்தும் கடைகள், தேநீர் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் இனிப்பு பலகாரம் போன்ற கடைகளில் இ சேவை மையங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. நோய்த்தொற்று அதிகம் இருக்கின்ற கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம் திருப்பூர் நாமக்கல் கரூர் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை போன்ற 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் சலூன் கடைகள் மற்றும் டாஸ்மாக் கடை உள்ளிட்டவைகளை திறக்க அனுமதி கிடையாது என்று அறிவித்து இருக்கிறது தமிழக அரசு.

இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மதுக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.A

பாமக மீது வீண்பழி சுமத்தும் அதிமுக முக்கிய நிர்வாகி! நடவடிக்கை எடுக்குமா அதிமுக தலைமை!

0

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது அப்படி அது தோல்வியை சந்தித்து இருந்தாலும் கூட பலமான எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பினைப் பெற்றது.அப்படி எதிர்க்கட்சியாக அதிமுக அமர்வதற்கு முக்கிய காரணமாக, கருதப்படுவது பாட்டாளி மக்கள் கட்சிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் சுமார் 6 சதவீத ஓட்டுகளை தன்வசம் வைத்திருக்கிறது என்பது பலரும் அறிந்ததே.

ஆகவேதான் அந்த கட்சியின் பலத்தை தெரிந்து கொண்டதால் எந்தக் கட்சியுமே அந்த கட்சியை விரோதித்து கொள்ள விரும்பவில்லை.அப்படி இருக்கையில் தேர்தலுக்கு முன்புவரை அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக தலைமை மிகத் தீவிரமாக முயற்சி செய்தது. அதன் காரணமாகவே பாட்டாளி மக்கள் கட்சி கேட்ட ஒரு சில முக்கிய விஷயங்களை செய்து தர சம்மதித்து.அதன்படி சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சுமார் ஐந்து தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் மூலம் வன்னியர்களின் வாக்குகளை அதிமுகவும் பெற்றது.

அப்படி இருக்கும்போது தற்போது அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தொடர்பாக உரையாற்றிய அவர் சட்டசபைத் தேர்தலில் போளூர், கிருஷ்ணகிரி, போன்ற 6 தொகுதிகளில் மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அங்கு தான் அவர்களுக்கு செல்வாக்கும் அதிகாரமும் இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார். அவ்வாறு இருக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை என்றால் அதிமுக 20 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது என்று அவர் தெரிவித்திருப்பது முறையல்ல என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தில் அமர்ந்து இருக்குமா என்பது சந்தேகம்தான்.பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் அறிந்தும் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது அதிமுகவினர் இடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்த கூட்டணி சார்ந்த முக்கிய காட்சிகள் தோல்வியில் இருந்து தப்பித்து விடும். அப்படி ஒவ்வொரு முறையும் பாட்டாளி மக்கள் கட்சியை வைத்து வெற்றி பெற்று விட்டு கடைசியில் அந்த காட்சியை குறை சொல்வதே தமிழக அரசியல் கட்சிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அதற்கு அதிமுகவும் விதிவிலக்கு அல்ல என்று தற்போது தெரியவந்திருக்கிறது.

லாக்டவுனில் சிவகார்த்திகேயன் செய்த செயல்! வைரல் வீடியோ!

0

லாக்டவுனில் சிவகார்த்திகேயன் செய்த செயல்! வைரல் வீடியோ!

கடந்த ஒரு வருட காலமாகவே உலகமே வீட்டில் முடங்கி விட்டது இந்த கொரோனா தொற்றின் காரணமாக, எனவே பலரும் தங்கள் வீட்டில் இருந்தே செய்யும் வேலைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

திரைபிரபலங்கள் கூட வீட்டில் இருந்து தங்களுக்கு பிடித்த மாதிரி வீட்டினை மாற்றுவது, தோட்டம் அமைப்பது போன்ற பல்வேறு வேளைகளில் தங்களை உட்படுத்திக் கொண்டிருள்ளனர். தோட்டத்தை பெரிய அளவில் தயார் செய்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை அந்த தோட்டத்தில் இருந்தே பறித்து பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்து உள்ளார். அந்த தோட்டத்தை வீடியோவில் படம்பிடித்து இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசும்போது, இதுதான் எனது காய்கறி தோட்டம். ஊரடங்குக்கு கொஞ்சம் முன்புதான் இந்த தோட்டத்தை தயார் செய்தேன். இப்போது இங்கிருந்துதான் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை பறித்து பயன்படுத்துகிறேன் இதை உங்களுக்கு காட்ட வேண்டும் என்றுதான் இந்த வீடியோ.

இந்த தோட்டத்தை இன்னும் முழுமையாக தயார் செய்ய வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும். அதெல்லாம் தயாரானதும் திரும்பவும் உங்களுக்கு காட்டுகிறேன். எல்லோரும் பத்திரமாக இருங்கள். சீக்கிரம் நமது வாழ்க்கையும் இந்த காய்கறி தோட்டம் போன்று செழிப்பாகி விடும் என்று மக்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் நம்பிக்கை ஊட்டும் விதமாக கூறியுள்ளார்.

இதை நாமும் முயற்சி செய்யலாமே? மனஅழுத்தத்தில் இருந்து வெளி வரலாம். மேலும் உற்சாகமாகவும் இருக்கும், முயற்சி செய்து பாருங்கள்.

அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட இருக்கும் முக்கிய பதவி! பெரும் மகிழ்ச்சியில் முக்கிய புள்ளிகள்!

0

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூட்டாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்றைய தினம் 12:00 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இருக்கின்ற தலைமைக் கழகத்தில் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு ஓபிஎஸ் அதோடு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கூட்டத்தில் கழக சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முற்பட்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து பல தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டசபை உறுப்பினர்களின் அடையாள அட்டையுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆற்றிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி மற்றும் சட்டமன்ற சொல்லடா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு வைத்திலிங்கம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் யாரேனும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. சட்டமன்ற கொறடா பதவிக்கு கேபி முனுசாமி அல்லது கே பி .அன்பழகன் உள்ளிட்டோரின் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

நான் உனக்கு தந்தையாக இருக்கிறேன்! பாசம் காட்டி மோசம் செய்த நபர்!

நான் உனக்கு தந்தையாக இருக்கிறேன்! பாசம் காட்டி மோசம் செய்த நபர்!

ஒருவர் பாசத்திற்காக ஏங்குகிறார் என தெரிந்தால் பலபேர் அதாவது சில ஏமாற்று பேர்வழிகள் நான் இருக்கிறேன் என்று பாசமழை பொலிந்து அவர்களை எப்படி தன் வசம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தான் பார்க்கிறார்கள். இது போல் மதுரை அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது.

22 வயதான சிக்கந்தர் ராஜா என்ற நபர், மதுரை கூடல் நகர் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் வாழ்ந்து வந்த அதே பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தாய் தந்தையை இழந்து தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாய் தந்தை இல்லாமல் பாசத்திற்கு ஏங்கி தவித்த மாணவிக்கு சிக்கந்தர் ராஜா, அந்த சிறுமிக்கு பெரும் ஆறுதலாக இருந்ததுடன், அவருடன் நெருங்கி பழகியும் வந்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி சிறுமியை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமியை நம்பவைத்து தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பாட்டி தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிக்கந்தர் ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த உண்மை தெரிந்தால் நிச்சயம் இதனை சாப்பிடமாட்டீர்கள்!

உலகிலேயே மிக விலை உயர்ந்த காபியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதை ருசித்துப் பார்த்துள்ளீர்களா?

 

உலகத்தின் விலையுர்ந்த இந்த காபியை லுவாக் காபி அல்லது சிவெட் காபி என்று கூறுவார்கள்.

 

இதை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?

 

இது இப்போது நம் இந்தியாவில் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். பதப்படுத்தப்பட்ட இந்த காபியின் விலை 1 கிலோவுக்கு ரூபாய் 20 ,000 முதல் 25 ,000 வரை நிர்ணயித்து சர்வதேச சந்தையில் விற்கப்படுகிறது. ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு பெரிய அளவில் இதனை ஏற்றுமதி செய்கிறார்கள்.

 

இந்த காபியை வாழ்நாளில் ஒரு முறையாவது கண்டிப்பாக வாங்கி சுவைத்து பாருங்கள்.ஏனென்றால் இது எந்த இடத்தில் இருந்து உருவாகிறது என்று கேட்டால் மிகவும் பூரித்து போவீர்கள்.

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க்கில் உள்ள காபி தோட்டங்களில் சிவெட் என்ற வகை பூனைகள் வாழ்கின்றது.இந்த பூனைகள் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமான உருவமைப்பு கொண்டதாக இருக்கும்.

 

இந்த காபியை தயாரிக்கும் முறையின் முதல் படியாக காபி தோட்டத்திலிருந்து பழுத்த சிறந்த காபி பெர்ரிகளை இந்த பூனைக்கு உணவாக கொடுக்கிறார்கள்.இதை சாப்பிட்ட பூனைகள் சில மணி நேரங்களில் செரிமானம் ஆகி வயிற்றிலிருந்து பீன்ஸ் போன்ற வடிவத்தில் அதன் கழிவை வெளியேற்றுகிறது.இந்த கழிவை பத்திரமாக எடுத்து பாதுகாத்து பின் பதப்படுத்தி காபியாக மாற்றுகிறார்கள்.”

இந்த பூனைகளின் வயிற்றில் உள்ள இயற்கை என்சைம்கள் கழிவாக வரும் பீன்னின் சுவையை மேம்படுத்துகின்றன, அதனால்தான் இந்த காபி தனித்துவமாகவும் சுவையானதாகவும் விளங்குகிறது.

 

காபி பிரியர்கள் யாராவது இந்த காபியை குடித்திருந்தால் இதன் ருசி எப்படி இருக்கும் என்று உங்களின் கருத்துக்களை பகிருங்கள்.

 

கேட்கவே சகிக்கவில்லை எப்படி இதை கொடுக்கிறார்களோ என்றுதான் கவலையாக உள்ளது.

 

தலைகீழாக விழும் கோபுர நிழல்! எந்த கோயில் தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் ராஜகோபுரம் அதன் நிழலை தலைகீழாக பிரதிபலிக்கும் நுட்பத்தின் அதிசயம் என்ன என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

 

ஒரு பொருளோ, கட்டிடமோ, நபரோ , அதன் அதன் நிழலை அப்படியே பிரதிபலிக்கும். அதற்கு பெயர் தான் நாம் நிழல் என்று சொல்லுவோம். ஆனால் இங்கு கதையே வேறு. கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவன் கோயிலின் கோபுர நிழல் தலைகீழாக விழுகிறது.

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி என்ற பகுதியில் உள்ள துங்கபத்ரா நதிக்கரையில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலை சாளுக்யா, கொய்சலா வம்சத்தினர் கட்டியதாக கூறப்படுகிறது. கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்த ஆலயத்தில் ஏராளமான திருப்பணிகள் நடந்து இருக்கிறது என குறிப்புகள் சொல்கின்றன.

 

கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுகிறது. இது எப்படி என்பதுதான் விஞ்ஞானர்களே புரியாத புதிராக இருக்கிறது. ஒரு பொருளின் நிழல் தலைகீழாக தெரிய வேண்டும் என்றால் நிஜத்துக்கும், நிழலுக்கும் இடையே கண்ணாடி போல் ஏதோ இருக்க வேண்டும். இங்கே அப்படி எதுவுமே இல்லாத நிலையில் இது எப்படி நடக்கிறது என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

அந்த காலத்தில் தொழில் நுட்பத்தின் எல்லை என்னவென்று இதன் மூலம் நமக்கு தெரிந்திருக்கும். இது எப்படி தன் நிழலை தலைகீழாக பிரதிபலிக்கிறது என்று இதுவரை எந்த விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை.

 

இந்த கோயிலில் இன்னும் பல ஆச்சர்யங்கள் உடன் இந்தக்கோயில் அமைந்துள்ளது. கோயில் மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளது. இங்குள்ள மற்றொரு மண்டபத்தின் நடுவே வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் துங்கபத்ரா ஆறின் நீர் மடப்பள்ளியை அடைத்து பின்னர் வெளிப்பிரகாரம் வழியே வெளியேறுகிறது.

 

1565ல் நடந்த போரில் இந்த நகரே அழிந்துவிட்டது. ஆனால் இந்த கோயில் மட்டும் இன்னும்கூட கம்பீரத்தோடும், ஏராளமான ஆச்சர்யங்களோடும் காட்சியளிக்கிறது.

 

 

 

இந்த ராசிக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும்! இன்றைய ராசி பலன் 14-06-2021 Today Rasi Palan 14-06-2021

0

 

இன்றைய ராசி பலன்- 14-06-2021,

நாள் : 14-06-2021,

தமிழ் மாதம்: 

 வைகாசி 31, திங்கட்கிழமை, 

 சுப ஹோரைகள் 

மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

இராகு காலம்:

காலை 07.30 -09.00, 

எம கண்டம்: 

10.30 – 12.00,  

குளிகன்: 

 மதியம் 01.30-03.00, 

திதி:

 சதுர்த்தி திதி இரவு 10.34 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி.

நட்சத்திரம்: 

பூசம் நட்சத்திரம் இரவு 08.36 வரை பின்பு ஆயில்யம்.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி கூடும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை எதிர்பாராத வகையில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும்.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் சோர்வு ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபார ரீதியாக பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளால் அனுகூலப்பலன் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவியால் நற்பலன் ஏற்படும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும்.

 

மீனம்

 

மீனம் ராசிக்கு எடுக்கும் காரியங்களை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்கு பின் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தலையில் சாக்கடையை வாரி கொட்டிய MLA. என்னதான் காரணமாக இருந்தாலும் இப்படியா?

0

மகாராஷ்டிராவில் சாக்கடை சரி செய்யும் பணியை ஒப்பந்தகாரர் செய்யாததால் ஒப்பந்தகாரர் தலையிலேயே சாக்கடையை வாரிக் கொட்டிய எம்எல்ஏவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்டிராவின் அண்மையில் அங்கு பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் , சில சாலைகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாலைகளில் தேங்கி மக்களுக்கு இடையூறாக இருந்தது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

 

இந்நிலையில் மும்பையில் உள்ள சண்டிவல்லி என்ற பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கியுள்ளது. இதை அப்புறப்படுத்த வேண்டிய ஒப்பந்தகாரர் இதனைப் பற்றி கண்டுகொள்ளவில்லை.

 

பின்னர், இது தொடர்பாக சிவசேனா எம்எல்ஏ திலிப் லந்தேவின் காதுக்கு சென்றுள்ளது.

 

இதைக்கேட்டு கொதித்தெழுந்த எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் சண்டிவலி பகுதிக்குச் சென்றார். அங்கு சென்ற எம்எல்ஏ சாக்கடை போகும் வழியை சுத்தப்படுத்தி தங்குதடையின்றி தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

 

இது ஒப்பந்ததாரர் காதுக்கு செல்ல பயந்து போய் உடனடியாக விரைந்து அந்தப் பகுதிக்குச் சென்று உள்ளார். சரியாக தனது வேலையை செய்யாமல் தான் வந்த உடன் வந்த ஒப்பந்ததாரர் பார்த்து ஆத்திரமடைந்த எம்எல்ஏ திலீப், ஒப்பந்தாரரை மிரட்டி சாக்கடையில் தள்ளியதுடன், அவர் மீது சாக்கடை கழிவுகளை வாரி இறைத்து தண்டனை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

இது தொடர்பாக எம்எல்ஏ திலீப் லந்தே பேசுகையில், சாக்கடையை நீக்கி தண்ணீர் சுத்தமாக செல்ல பணியை மேற்கொள்ள வேண்டிய கடமை ஒப்பந்ததாரருக்கு உள்ளது. அதை அவர் சரியாக செய்யாததால் உள்ளூர் மக்களுக்கு மிகவும் அவதி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் அவருக்கு புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

சாக்கடையை சுத்தம் படுத்தவில்லை எனில் இவர்கள் எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை காட்டவே இவ்வாறு செய்தேன் என்று கூறினார்.

 

டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலைவாய்ப்பு!

இந்திய நறுமண வாரியத்தில் வேலைவாய்ப்பு மற்றும் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம 12 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

நிறுவனம்: இந்திய நறுமண வாரியம்( Indian Spices)

 

கல்வித் தகுதி: Any Degree, Any Post Graduate

 

வயது: 25 வயது முதல் – 35 வயது வரை

 

ஊதியம்: மாதம் ரூ.17,000 – ரூ.30,000

 

தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview

 

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.indianspices.com/general-information/spice-news.html

https://indianspices.com/opportunities/details.html?id=316