Sunday, July 27, 2025
Home Blog Page 4546

ஆபாச வீடியோ வழக்கில் 2 பேருக்கு முன்ஜாமீன்! கோர்ட் உத்தரவு!

ஆபாச வீடியோ வழக்கில் 2 பேருக்கு முன்ஜாமீன்! கோர்ட் உத்தரவு!

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மார்ச் மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளில் கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயற்சி நடப்பதாக கூறி, ரமேஷ் ஜார்கிகோளி சார்பில் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த 2 வழக்குகள் குறித்தும் தற்போது சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் ரமேஷ் ஜார்கிகோளியிடம் இளம்பெண்ணுக்கு ஆதரவாக இருந்து நரேஷ் கவுடா மற்றும் ஸ்ரவன் ஆகிய 2 பேரும் தான் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தார்கள். ஆனால் அவர்கள் போலீசாரிடம் சிக்காமல் கடந்த 3 மாதமாக தலைமறைவாக இருந்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் ஆபாச வீடியோ விவகாரத்தில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நரேஷ்கவுடா மற்றும் ஸ்வரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அந்த மனு மீதான விசாரணை நீதிபதி லட்சுமி நாராயண் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நேற்றும் அந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறப்பு விசாரணை குழு சார்பில் ஆஜரான வக்கீல் கிரண் ஜவலி, 2 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

அந்த விவகாரத்திற்கும் இந்த 2 பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்கள்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லட்சுமி நாராயண், நரேஷ் கவுடா மற்றும் ஸ்வரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக இருக்கும் 2 பேரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

ரசிகர்களை கவர்ந்து இழுத்த பாடல்! 25 கோடி முறை பார்க்கப்பட்ட பாடல்!

0

ரசிகர்களை கவர்ந்து இழுத்த பாடல்! 25 கோடி முறை பார்க்கப்பட்ட பாடல்!

ரவுடி பேபி பாடலின் மூலம் புகழை அடைந்தவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகளான தீ உசுரு நரம்புல இறுதிச்சுற்று,  கண்ணம்மா (காலா),  ரவுடி பேபி (மாரி 2),  காட்டுப்பயலே (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அதே போல், காலா படத்தில் உரிமை மீட்போம், வட சென்னை படத்தில் மத்திய சிறையிலே, மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு  உள்ளிட்ட பல பாடல்களைப் பாடியவர் ரேப் பாடகர் அறிவு. தற்போது இவர்கள் இருவரும் இணைந்துப் பாடியிருக்கும் எஞ்ஜாய் எஞ்சாமி  ஆல்பம் பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த எஞ்ஜாய் எஞ்சாமி என்கிற பாடலின் வீடியோ மார்ச் 7 அன்று யூடியூபில் வெளியானது. இந்த பாடலை அறிவு எழுதியுள்ளார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ள மாஜா தளம் இப்பாடலைத் தயாரித்துள்ளது. அமித் கிருஷ்ணன் பாடலைப் படமாக்கியுள்ளார்.

யூடியூப் தளங்களில் வழக்கமாக திரைப்படப் பாடல்களுக்குக் கிடைக்கும் அமோக வரவேற்பை  எஞ்ஜாய் எஞ்சாமி பெற்றுள்ளது. இயற்கை வளத்தையும் கலாசார வேர்களையும், போற்றும் இப்பாடலின் படமாக்கம், ஆங்கிலப் பாடல்களுக்கு இணையாக உள்ளதால், இதற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி வருகிறது.

தற்போது இப்பாடலை 25 கோடி முறை பார்த்து உள்ளனர்.  ஒரு சுயாதீனப் பாடல், திரைப்பாடலுக்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமான வரவேற்பைப் பெற்றிருப்பது தமிழ்த் திரையிசை வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுயாதீனப் பாடல்களில் எஞ்ஜாய் எஞ்சாமி ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளதாகவே சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கத்தி குத்துடன் 500 கி.மீ நடந்தே காவல் நிலையம் வந்த வாலிபன்! அதிர்ந்த போலீசார்!

0

கத்தி குத்துடன் 500 கி.மீ நடந்தே காவல் நிலையம் வந்த வாலிபன்! அதிர்ந்த போலீசார்!

20 வயது பையனுக்கு என்ன முன் விரோதம் இருக்க போகிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் வட மாநிலத்தில் ஒரு முன் விரோதத்தின் காரணமாக ஒரு நபரை அந்த கும்பல் தாக்கி உள்ளது.

நாக்பூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் வந்தார். வயிற்றில் கத்தி குத்தி இருந்ததை கண்ட போலீசார் உடனடியாக வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 20 வயதான அந்த வாலிபரை பிடித்து கும்பல் தாக்கியுள்ளது.

அங்கிருந்து அவர் தப்பிச்சென்ற போது கும்பலை சேர்ந்த ஒருவர் வாலிபரின் வயிற்றில் கத்தியால் குத்தினார். இருப்பினும் அந்த வாலிபர் குத்தப்பட்ட கத்தியுடன் அங்கிருந்து தப்பி 500 மீட்டர் தொலைவில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு நடந்தே தப்பி வந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது தெரியவந்தது. இது சினிமா பட காட்சியை மிஞ்சும் வகையில் இருந்ததாகவும், மேலும் இது சாலையில் சென்றவர்களை பெருத்த அதிர்ச்சி அடைய செய்தது எனவும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை கொல்ல முயன்ற 9 பேரை பிடித்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மூங்கில் காட்டில் திருமண ஏற்பாடு! அடிமையாகிய மாணவ – மாணவிகள்! பெற்றோர் செய்த செயல்!

மூங்கில் காட்டில் திருமண ஏற்பாடு! அடிமையாகிய மாணவ – மாணவிகள்! பெற்றோர் செய்த செயல்!

இப்பொழுதெல்லாம் இணையதளம் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டாலும், அதன் மூலம் நிறைய கூடா நட்புக்கள் மலர்வதையும் நாம் கடந்த நாட்களில் பார்த்து வருகிறோம்.

காதலிப்பது தவறு கிடையாது ஆனால் சரியான வயதில் வந்தால் பரவாயில்லை. மிக சிறிய வயதில் வெளி உலகமே தெரியாத பருவத்தில் காதல் மலர்ந்து பின் திருமணம் முடிந்தவுடனே ஏதோ ஒரு காரணத்தை கூறி பிரிய வேண்டியதாக உள்ளது.

கோவை அருகே உள்ள கண்ணப்பநகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவருடைய மகன் கோகுல் (வயது 22). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் காதல் மலர்ந்தது. இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த மே மாதம் 27-ந்தேதி வீட்டை விட்டு காதல்ஜோடியினர் வெளியேறினர்.

பின்னர் அவர்கள், கோவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு தப்பி வந்தனர். இவர்களுக்கு உதவியாக 16 வயது சிறுவன், 17 வயது சிறுமி ஆகியோர் மற்றொரு மோட்டார்சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தனர்.

சிறுமி மாயமானது குறித்து, துடியலூர் போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

கோகுலின் செல்போன் எண்ணை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அவருடைய செல்போன் சிக்னல்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் குறித்த விசாரணையில் போலீசார் களம் இறங்கினர்.

இதில், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவரிடம் தொடர்ந்து கோகுல் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து துடியலூர் போலீசார் மற்றும் சிறுமியின் பெற்றோர் நேற்று திண்டுக்கல் விரைந்தனர்.

கோகுலின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்ததில், திண்டுக்கல் அருகே மொட்டணம்பட்டி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள மூங்கில் தோப்பில் அவர் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்றனர்.

போலீசாரை கண்டதும் கோகுல், அந்த சிறுமியுடன் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டார். கோகுலுக்கு உதவுவதற்காக கோவையில் இருந்து வந்த 16 வயது சிறுவன், 17 வயது சிறுமி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த 3 பேரையும் போலீசார் அங்கிருந்து மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களை, திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா (26), ராமையன்பட்டியை சேர்ந்த நிக்சன் ஜெரால்டு (22), 17 வயது சிறுவன் என்று தெரியவந்தது.

இவர்கள் மற்றும் கோவையில் இருந்து வந்த சிறுவர், சிறுமி உள்பட 5 பேரும் காதல் ஜோடிக்கு மூங்கில் காட்டில் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. பிடிபட்ட 5 பேரிடமும் காதல்ஜோடி குறித்து கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது அதன் விவரங்கள்:-

 கோகுல் தனது நண்பர்களுடன் கஞ்சா மற்றும் மதுபழக்கத்திற்கு அடிமையாகி அதனை டிக்டாக் வீடியோவில் பதிவிட்டு வந்துள்ளார். அதன்மூலம் அந்த சிறுமியும் நட்புடன் பழகி பல இடங்களுக்கு பைக்கில் சுற்றி வந்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக வெளியூர் செல்ல திட்டமிட்டு தனது காதலியுடன்  கோகுல்ராஜ் பைக்கில் வந்துள்ளார். இவர்களுடன் மேலும் ஒரு சிறுமி மற்றும் சிறுவன் பைக்கில் வந்துள்ளனர். பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு திண்டுக்கல்லில் உள்ள நண்பர்களை பார்க்க வந்தனர்.

பிடிபட்ட அனைவரும் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் படித்து வருபவர்கள். கொரோனா ஊரடங்கு என்பதால் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களை தேடி அவர்களுடன் வெளியிடங்களுக்கு சுற்றி வந்துள்ளனர். இதில் அந்த சிறுமிகளுக்கும் போதை பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பெற்றோரிடம் இருந்து மறைக்கும் வகையில் ஆன்லைன் வகுப்பு செல்வதாகவும், தனது தோழியை பார்க்க செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால் தங்கள் குழந்தைகள் போதைக்கு அடிமையான விசயத்தை பெற்றோர்கள் கவனிக்காதது எப்படி என்று போலீசார் வியப்படைந்துள்ளனர்.

பிடிபட்ட அனைவரையும் கோவையில் விசாரணை நடத்த அவர்கள் அழைத்துச்சென்றுள்ளனர்.டிக்டாக் மோகம் மற்றும் செல்போனில் அதிகநேரம் செலவிடுவதால் மாணவர்களின் எதிர்காலம் வழிதவறி போதைக்கு அடிமையாகும் சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்கள் வைத்திருந்த செல்போனில் புகைபிடிப்பது, மது அருந்துவது, தோழிகளுடன் நெருக்கமாக இருந்தது போன்ற புகைப்படங்களால் போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீட்டில் அளவுக்கதிமான செல்லமும் சுதந்திரமும் கொடுத்து இளவரசி  போல வளர்க்கப்படும் சிறுமிகள் தாங்கள் செய்வது தவறு என்பதை உணராமல் இது போன்று முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக கூடா நட்பில் விழுந்து தடம் மாறிச்செல்வது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

பூட்டிய அறைக்குள், செல்போனில், சமூக வலைதளத்தில் என்ன செய்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள், எங்கு சென்று வருகிறார்கள் என்பதை கூட கவனிக்காமல் அவரது பெற்றோர் இத்தனை நாட்கள் பொறுப்பற்று இருந்துள்ளதாகவும் போலீசார் வேதனை தெரிவிக்கின்றனர்.

இவர்களுடன் தொடர்பில் உள்ள மற்ற நபர்களையும் கண்டறிந்து அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர் மூலம் கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாபநாசம் படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது? திக்குமுக்காடும் போட்டோ ஷூட்!

0

மலையாளத்தில் வெளிவந்த மோகன்லால் மீனா மற்றும் பலர் நடித்த திரிஷ்யம் பல மொழிகளில் எடுக்கப்பட்டது. தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் எடுக்கப்பட்டது.

தமிழில் வெளியான பாபநாசம் படத்தில் குட்டிப் பாப்பாவாக நடித்திருந்த எஸ்தர் அனில் என் போட்டோவை பார்த்து தான் நெட்டிசன்கள் திக்குமுக்காடி உள்ளனர்.

எஸ்தர் அனில் 2010 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வந்த நல்லவன் என்ற படத்தின் மூலம் தான் குழந்தையாக அறிமுகமானார்.

சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 என்ற படத்திலும் அவரது அழகான கதாபாத்திரத்தை தன் நடிப்பின் மூலம் வெளிக்காட்டி உள்ளார்.

தமிழில் பாபநாசம் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு, இது லீடிங் ரோல் இன் அடுத்த ஹீரோ ஹீரோயின்கள் மட்டுமே மாறினார்கள் தவிர குழந்தை நட்சத்திரமான எஸ்தர் மூன்று மொழிகளிலும் தனது கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக வெளிக்காட்டி உள்ளார்.

அவரது நடிப்புக்காக பல அவார்டு அவருக்கு கிடைத்தது. மற்றும் பல மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் மலையாளத்தில் வரும் டாப் சிங்கர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் எஸ்தர்.
குட்டி பெண்ணாக இருந்தாலும் சரி இப்போது வளர்ந்து வரும் கன்னியாக மாறி உள்ளார்.
அவர் எடுத்துள்ள போட்டோஸ்ட்டுகள் இணையதளத்தை சூடாக்கி வருகிறது இதோ உங்களுக்காக.

குழந்தை நட்சத்திரம்

விருதுகள்

 

 

குமரியான குட்டி பாப்பா

குமரி பெண்ணான எஸ்தர்

ஹீரோயினுக்காக போட்டோ ஷூட்

பிளாக் பியூட்டி

இந்த நிலையில் இந்த போட்டோக்களை பார்த்து சின்ன வயசுல பார்த்த பாப்பா எவ்வளவு பெருசா வளந்துருச்சு என்று வளர்ந்து வரும் பாப்பாவை கண்டு விடுகின்றனர்

எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லை! சுகாதாரத்துறை செயலாளர் பளிச் பேட்டி!

0

போருக்குப் பின்னர் 25 மாவட்டங்களில் நேற்று வரை குறைந்துவிடுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். நோய் தொற்று பாதிப்பு நிலவரங்களை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் டிஎம்எஸ் வளாகத்தில் காணொலிக் காட்சி மூலமாக நடந்தது .இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசு அலுவலர்கள் இல்லாத நான்கு மருத்துவர்களும் மருத்துவ கல்வி இயக்குனர் உட்பட 9 பேரும் பங்கு கொண்டார்கள்.

இந்த கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிகமாக இருக்கின்ற மாதங்களில் என்னென்ன வழிமுறைகளைக் கையாண்டு நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்த மாவட்டங்களில் micro-blogging செயல்படுத்துவது அடுத்து வரும் நோய் தொற்றுகளையும் தடுக்கும் தடுப்பு ஊசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார். அதோடு ஊரடங்குக்கு பின்னர் 25 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் 9 மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலாகி நிலையில் இருக்கிறது. நான்கு மாவட்டங்களில் மிகத் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் 34 மாவட்டங்களில் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் 13-ஆம் தேதி வரையில் 6.5 லட்சம் தடுப்பூசிகள் வர இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் விவரங்களை மறைக்காமல் வெளியிட்டு வருகின்றோம். நோய் தொற்று பாதிப்பு காரணமாக, உயிரிழந்தவர்கள் தொடர்பாக ஒரு மாதத்திற்கு பின்னர் தகவல் வந்தாலும் அதனை சேர்த்து தினசரி நோய்த்தொற்று உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணக்கில் காட்டப்படுகின்றது என்று தெரிவித்திருக்கிறார். ஒரு சில மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கையை வழங்குவதற்கு தாமதம் உண்டாகிறது மற்றபடி எந்தவிதமான ஒளிவு மறைவும் கிடையாது. இது தொடர்பாக அவதூறுகளை மக்கள் நம்ப வேண்டாம். தமிழ்நாட்டில் 1107 பேர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் .கருப்பு பூஜைக்கு வேறு சில மருந்துகளையும் மத்திய அரசு பரிந்துரை செய்திருக்கிறது. மருந்து இல்லை என்ற நிலையில் இதுவரையில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

அதிமுகவிற்குள் சித்து விளையாட்டை தொடங்கிய சசிகலா!

0

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நாளிலிருந்து தற்சமயம் வரையில் அதிமுகவில் பல பிரச்சனைகள் உண்டாகி வந்தாலும் கூட கட்சி உடைந்து டிடிவி தினகரன் சசிகலா உள்ளிட்டோர் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாகியிருந்தாலும் அதிமுக இன்று வரையில் பல சவால்களை சந்தித்து நிலைத்து நின்று வருகிறது. தற்சமயம் சசிகலா அரசியலில் இல்லை என அறிவித்து இருந்தாலும் அவர் அதிமுகவை அபகரிக்க நினைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற மானூர் அதிமுக நிர்வாகிகளின் பெயரில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சுவரொட்டியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வத்தை கேட்காமல் ஏதேனும் முக்கிய முடிவை எடுத்தால் கட்சியின் தலைமை அலுவலகத்தை நாங்கள் முற்றுகையிடுவோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்த சுவரொட்டிகள் இணையதளத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. அதோடு அந்த பகுதியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சுவரொட்டியை வேண்டுமென்றே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தயாரித்து பதிவு செய்தார்களா என்பது தொடர்பாகவும் கேள்விகள் எழுந்து இருப்பதாக தெரிகிறது.

இதற்கு மத்திய அரசுதான் காரணம்! பாஜக மீது காங்கிரஸ் கடும் தாக்கு!

0

நோய்த்தொற்று பரவலின் மூன்றாவது அறை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்து கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இருந்தாலும் தமிழ்நாட்டில் பல இடங்களில் நோய்த்தொற்று தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் தற்சமயம் தடுப்பூசி இல்லை என்பது தான் உண்மை என்று நேற்றையதினம் தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், பா சிதம்பரம் தன்னுடைய வலைதள பக்கத்தில் தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் நோய் தடுப்பூசி மருந்து இருப்பு இல்லை என்றும் தடுப்பூசி போடுவது ஜூன் மாதம் இரண்டாம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசின் தடுப்பூசி தயார் செய்யும் மற்றும் கொள்முதல் கொள்கைகள்தான் தான் இந்த சூழ்நிலைக்கு முழுமையான காரணம். அதோடு தடுப்பூசி பற்றாக்குறையை இல்லை என்று தினந்தோறும் சொல்லிக் கொண்டிருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாக காணவில்லை என்பதை யாராவது கவனித்தீர்களா என்று குறிப்பிட்டு இருக்கின்றார் பா சிதம்பரம்.

14 ஆம் தேதி கூடுகிறது அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம்! வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு!

0

சென்னையில் நிற்கின்ற டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து காவல்துறை டிஜிபி நியமனம் வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். நோய்த்தொற்று இருப்பதன் காரணமாக, அதற்கு உட்பட்டு அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு உறுதி எடுத்து அனுமதி வேண்டும் என்று கடிதம் வழங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

எங்களுடைய கட்சிக்குள் எந்த விதமான குழப்பமும் இல்லை வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தேர்வு போன்றவற்றை உறுதி செய்வது தொடர்பாக ஜூன் மாதம் 14ஆம் தேதி கூட்டம் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

கட்சியின் அனுமதி எதுவும் இல்லாமல் ஒட்டப்படும் சுவரொட்டிகளில் குறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அதிமுகவின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். அதோடு அதிமுக என்பது ராணுவக் கட்டுப்பாடு கொண்ட ஒரு கட்சி என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சசிகலாவுக்கும் அதிமுகவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு அதிமுகவில் இணைய ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, கேபி முனுசாமி, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், போன்றோர் முதல் அதிமுகவினர் எல்லோருமே சசிகலாவுக்கு அதிமுகவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள். முன்னால் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சட்ட ரீதியாக போராடி அதிமுகவில் நேற்று இருக்கின்றனர் என்று ஜெயக்குமார் செய்து தருகிறார்.

நாளை(ஜூன் 10) வரும் சூரிய கிரகணம்! இதையெல்லாம் செய்யக்கூடாது!

வருகிற ஜூன் 10ஆம் தேதி அன்று இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதாக நாசா வரைபடத்தை வெளியிட்டு உள்ளது. நாசா பூமியின் மேற்பரப்பு முழுவதும் சூரிய கிரகணத்தின் பாதையை காட்டும் வரை படத்தை வெளியிட்டுள்ளது. இது ஜூன் 10ஆம் தேதி நிகழும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டும் சூரிய கிரகணம் ஜூன் 10ஆம் தேதி அன்று தெரியும். இந்த அரிய நிகழ்வை உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் என்பதால் அனைவராலும் பார்க்க முடியாது என்று கூறுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும்பொழுது வருடாந்திர சூரிய கிரகணம் தோன்றும்.

சூரியனின் முழுப் பார்வையையும் சந்திரன் தடுக்காது. இது ஒரு நெருப்பு வளையத்தை உருவாக்கும். இதனை சூரிய கிரகணம் என்கிறோம்.
இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி நாசா ஒரு வரைபடத்தை வெளியிட்டு இது பூமியின் மேற்பரப்பு முழுவதும் 2021 சூரியகிரகணத்தின் பாதையை காட்டுகிறது என்று கூறியுள்ளது. இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியும் என்று அது வெளிப்படுத்துகிறது.

ஆனால் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இருந்து மட்டுமே அதை காண முடியும். மற்றவர்கள் அதை ஆன்லைன் மூலம் பார்க்கலாம் என்று சொல்லுகிறார்கள்.

லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை மையமாகக் கொண்ட வர்கள் சூரிய கிரகணத்தை 12.25 மணிக்கு காண தொடங்குவார்கள் என்று தெரிவிக்கிறது.

ஒரு பகுதி சூரிய கிரகணத்தை மட்டுமே அவர்களால் காண முடியும். மேலும் இந்த அண்ட நிகழ்வானது அவர்களுக்குப் 12.51 வரை நீடிக்கும் என்று கூறியுள்ளது.

மேலும் இதர நாடுகளான கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, ஐரோப்பா ,ஆசியா, மற்றும் வட ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் உள்ள மக்கள் ஜூன் 10ஆம் தேதி அன்று கிரகணத்தை பார்க்க முடியும் என்று நாசா கூறுகிறது.

சூரிய உதயத்திற்கு முன்பும், சிறிது நேரத்தில் கிரகணம் ஏற்படும் என்று கூறுகிறது. இங்கு பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணம் நிகழ்வு பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கி மாலை 6.45 வரை நீடிக்கும்.

இந்த வருடாந்திர சூரிய கிரகணம் இந்தியாவில் அனைவருக்கும் தெரியாது. ஆனால் நீங்கள் இந்த வான நிகழ்வை ஆன்லைன் மூலம் பார்க்கலாம். Timeanddate.com இந்த வலைத்தளத்தில் ஏற்கனவே சூரிய கிரகணத்தின் நேரடி ஸ்ட்ரீம் இணைப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் நீங்கள் 10ஆம் தேதியன்று நடைபெறும் நிகழ்வை ஆன்லைனில் பார்க்கலாம்.

செய்பவை, செய்யக்கூடாதவை:

1. சூரியனை நேரடியாக உற்றுப் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்கள். இந்த வான நிகழ்வை நேரடியாக ஒருவர் காண வேண்டுமெனில் பாதுகாப்பு அங்கீகாரம் பெற்ற சூரிய கிரகணத்தை பார்க்கும் கண்ணாடிகளை அணியலாம்.
2. பின்ஹோல் கேமரா அல்லது பாக்ஸ் ப்ரொஜெக்டர் கொண்டு சூரிய கிரகணத்தை காணலாம்.
3. தொலைநோக்கிகள் மற்றும் கேமரா மூலம் கிரகணத்தை படம் எடுக்க வேண்டும் என்று விரும்புவர்கள் உங்கள் லென்ஸின் பாதுகாப்பு அங்கீகரிக்கப்பட்ட சூரிய கிரகணத்தை பிடிக்கும் வடிப்பானை பயன்படுத்த வேண்டும்.