Tuesday, July 22, 2025
Home Blog Page 4587

இவர்களுக்கு பங்கு வர்த்தகத்தில் லாபம் உண்டு! இன்றைய ராசி பலன்கள்

0

இவர்களுக்கு பங்கு வர்த்தகத்தில் லாபம் உண்டு! இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி:

     ஆன்மீக ஈடுபாடு நன்மை அளிக்கும்.தியானம் மேற்கொள்ளலாம்.பணியில் மூழ்கி விடுவீர்கள்.அதனால் நன்மை விளையும்.பெரியோரின் பேச்சை கேட்கவும்.பணப்புழக்கம் குறைவாக இருக்கும்.

ரிஷப ராசி:

     பிரார்த்தனைகள் பலன் தரும்.இன்று முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.பணி இடத்தில் நீங்கள் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது.கவனமாக இருக்கவும்.சில விசயங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

மிதுன ராசி:

     உங்களுக்கு வளர்ச்சி தரும் செயல்களில் பங்கு கொள்ளுங்கள்.பங்கு வர்த்தகத்தில் லாபம் பார்க்கலாம்.பணிகளை சிறப்பாக ஆற்றுவீர்கள்.இன்று உற்சாகமான நாளாக இருக்கும்.கோவில்களில் பணம் செலவு செய்யலாம்.

கடக ராசி:

     உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும்.உங்களிடம் தொழில் சார்ந்த அணுகுமுறை இருக்கும்.அதனால் மகிழ்ச்சியும், வளர்ச்சியும் ஏற்படும்.நிதிநிலை சாதகமாக இருக்கும்.

சிம்ம ராசி:

     இன்றைய நாள் பரபரப்பாக இருக்கும்.யோகா செய்யலாம்.உங்கள் அறிவு திறனை பயன்படுத்தி செயல்படவும்.பணத்தை இழக்கும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி:

     பல தடைகளை கடந்து பணியில் வெற்றி பெற வேண்டி இருக்கும்.உறவுகளில் விவாதம் ஏற்படும்.பண வரவும், செலவும் சேர்ந்து இருக்கும்.தியானம் மேற்கொள்வதால் ஆறுதல் அடையலாம்.

துலாம் ராசி:

     நம்பிக்கை இழக்காமல் இருந்தால் வெற்றி அடையலாம்.வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.பெரியோருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.கணிசமான தொகை குறையும்.

விருச்சிக ராசி:

     இன்று சிறப்பான நாள்.நீங்கள் செய்யும் முயற்சி வெற்றி தரும்.தன்னம்பிக்கை,உறுதியுடன் இருக்க வேண்டும்.உரையாற்றும் போது கவனமாக இருக்கவும்.பணவரவு இருக்கும்.

தனுசு ராசி:

     இன்று எதையும் அதிகம் யோசிக்க வேண்டாம்.பணியில் மகிழ்ச்சி இருக்காது.தடைகளை தாண்டும் ஆற்றல் உள்ளது.உறவில் குழப்பம் அடையலாம்.பணத்தை பத்திரமாக கையாளவும்.

மகர ராசி:

     உங்கள் தேவையின் முன்னுரிமை அறிந்து செயல்படுங்கள்.அதிக பொறுப்பாக நடந்து கொள்வீர்கள்.சூழ்நிலை சாதகமாக இருக்காது.பணம் செலவு இருக்கும்.

கும்ப ராசி:

     நன்மைகள் அதிகளவு காணப்படும்.முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும்.விருப்பங்கள் நிறைவேறலாம்.உங்களின் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

மீன ராசி:

     இன்று அதிக நேரம் செயல் பட வேண்டி இருக்கும்.பொறுப்பின் காரணமாக நீங்கள் பணியில் மூழ்கி இருப்பீர்கள்.பணிகளை திட்டமிட்டு முடிக்க வேண்டும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா?? ஆயுஷ் அமைச்சகம் சொன்ன குறிப்பை கேளுங்க!!

0

கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வரும் நேரத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நம்மை அண்டாது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மத்திய அரசு ஆயுஷ் நிர்வாகம் பல்வேறு வழிமுறைகளை கூறியுள்ளது.

 

ஆயுஷ் அமைச்சகம் சொன்ன அனைத்துமே நான் வீட்டில் இருந்தே செய்ய கூடிய அருமையான ஆரோக்கியமான குறிப்புகள். அவை என்னவென்று பார்க்கலாம்.

 

1. சூடான நீரை மட்டுமே பருக வேண்டும். நாள் முழுவதும் வெதுவெதுப்பான தண்ணீரை பருக வேண்டும். நீருடன் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.

2. நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானம் அடையும் உணவு ஆக இருக்க வேண்டும். இஞ்சி, பூண்டு ,மஞ்சள், சீரகம் கொத்தமல்லி போன்ற வாசனைப் பொருட்களை உணவில் பயன்படுத்தும் பொழுது எளிதில் ஜீரணமாகும்.

3. ஆயுஷ் அமைச்சகம் சொன்ன தகவலின் படி உடற்பயிற்சிகள் மற்றும் தியானங்களை 30 நிமிடம் செய்ய வேண்டும். பகலில் தூங்குவதை தவிர்த்து இரவு 8 மணி நேர தூக்கம் அவசியம் ஆக இருக்க வேண்டும்.

4. அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை 150 மில்லி பாலில் கலந்து தினமும் 2 வேளை குடிக்கலாம்.

5. குடுச்சி கன்வதி (500 மி.கி) அல்லது அஸ்வகந்தா மாத்திரை (500 மி.கி) சாப்பிட்ட பிறகு இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

6. மூலிகை டீ அல்லது துளசி, இலவங்கப்பட்டை, உலர்ந்த இஞ்சி மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றால் செய்யப்பட்ட காபி தண்ணீரைக் குடிக்கவும். தேவைக்கேற்ப வெல்லம் சேர்த்து பருகலாம்.

7. நீராவி பிடிக்கலாம். அதில் துளசி இலை மற்றும் கற்பூரத்தை சேர்ப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அதிக சூடான நீரை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

8. கிராம்பு மற்றும் திரிபலா பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரும் பொழுது தொண்டைவலி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கும்.

9. வாயில் ஒன்று இரண்டு கிராம்புகளை அடக்கி வைத்துக் கொண்டிருக்கும் பொழுது ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும்.

10. தினம் ஒரு நெல்லிக் கனியை சாப்பிடலாம்.

11. தினமும் நீரை பருக கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம், கிராம்பு, துளசி இலைகளை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.

12. கொரோனாவால் உடல் சோர்வு அதிகமாக இருக்கும் பொழுது ராகியினால் ஆன கஞ்சியை குடித்து வரலாம்.

இவ்வாறு ஆயூஷ் நிர்வாகம் கூறியது.

ரோஜா வா வீட்டுக்கு போலாம்!! வர மறுத்ததால் கணவன் செய்த செயல்!!

0

திருவள்ளூர் அருகே தன் மனைவி வீட்டிற்கு வர மறுத்ததால் கணவன் காட்டுப் பகுதிக்குள் சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் கீளப்பூடி என்ற காலனியில் வாழ்ந்து வருபவர் வேலு. இவருக்கு வயது 27. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே அப்பகுதியை சேர்ந்த ரோஜா என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் காதல் திருமணம் நடந்த நிலையில் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

நன்றாக போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் குடிப்பழக்கம் வந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு ரோஜாவிடம் தகராறு செய்துள்ளார். தினமும் மது அருந்துவிட்டு ரோஜாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

 

அவரது மனைவி ரோஜா கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு தனது குழந்தைகளுடன் சென்றுள்ளார். மனைவியை பிரிந்த அவரால் இருக்க முடியவில்லை. மனைவியை பிரிந்த சோகம் தாளாமல் இருந்த வேலு மனைவியின் வீட்டிற்குச் சென்று மறுபடியும் சேர்ந்து வாழ அழைத்துள்ளார்.

 

ரோஜா வேலுடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். இதனால் மிகவும் மனம் உடைந்து போன மேலும் காட்டு பகுதிக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

தகவல் அறிந்த பொதட்டூர்பேட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வேலுவின் தந்தை பெரியப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!

 

 

அமெரிக்காவின் ஜனாதிபதி ஆன ஜோ பிடன், இந்திய-அமெரிக்க வர்த்தக நிபுணர் அருண் வெங்கடராமனை வெளிநாட்டு வர்த்தக சேவை தொடர்பான தனது நிர்வாகத்தில் முக்கிய பதவி வகிக்க நியமனம் செய்துள்ளார். அமெரிக்க வாழ் அருண் வெங்கடராமன் அமெரிக்காவின் ஜெனரல் இயக்குநர் மற்றும் வெளிநாட்டு வணிக சேவையின் வேட்பாளராகவும், வர்த்தகத் துறையின் உலகளாவிய சந்தைகளுக்கான உதவி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்று புதன்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.

 

சர்வதேச வர்த்தகங்கள் குறித்து , சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர் அருண் வெங்கடராமன். அவர் தற்போது வர்த்தக செயலாளரின் ஆலோசகராக பணியாற்ற உள்ளார். மேலும் வர்த்தக மற்றும் பிற சர்வதேச பொருளாதார விஷயங்கள் குறித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு கொடுக்க பட்டுள்ளது.

 

பிடென்-ஹாரிஸ் நிர்வாகத்தில் சேருவதற்கு முன்பு, அருண் வெங்கட்ராமன் VISA – வில் ஒரு சீனியர் இயக்குநராக இருந்துள்ளர். டிஜிட்டல் பொருளாதாரம், வர்த்தகம், வரி மற்றும் பொருளாதாரத் தடைகள் உலகளாவிய அரசாங்க பிரச்சனைகளை எதிர்கொண்டு வழிநடத்தி உள்ளார்.

 

அருண் வெங்கடராமன் முன்பு ஸ்டெப்டோ & ஜான்சன் எல்.எல்.பி.யில் வர்த்தக சார்ந்த மற்றும் முதலீட்டு கொள்கை ஆலோசகராக பணியாற்றி உள்ளார்., மேலும் அங்கு அவர் இ-காமர்ஸ், அறிவுசார் சொத்துரிமை மற்றும் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு வர்த்தக கொள்கைகள் குறித்து பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.

 

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் வர்த்தகத் துறையின் சர்வதேச வர்த்தக நிர்வாகத்தின் முதல் கொள்கை இயக்குநராக, அருண் வெங்கடராமன், இருந்துள்ளார். மேலும் நாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் சீனா, இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் பதில்களை வடிவமைத்தவர் என வெள்ளை மாளிகையில் கூறப்பட்டது.

 

அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் நீதிபதி ஜேன் ஏ ரெஸ்டானிக்கு சட்ட எழுத்தராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் அருண் வெங்கட்ராமன். மேலும் கொலம்பியாவில் உள்ள சட்டப் பள்ளியில் இருந்து ஜே.டி., பிளெட்சர் ஸ்கூல் ஆஃப் லா அண்ட் டிப்ளமோசியில் சட்டம் மற்றும் டிப்ளமோசி ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார். இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ளும் அளவு பிற நாட்டில் தனது திறமையை நிரூபித்து உள்ளார்.

 

இப்படியும் உயிர் போகும்! அதனுடன் இதை சேர்த்ததால் வந்த வினை!

0

இப்படியும் உயிர் போகும்! அதனுடன் இதை சேர்த்ததால் வந்த வினை!

தமிழகத்தில் ஏப்ரல் 10 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக மதுப்பிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதன் காரணமாக ஓரகடம் அருகில் உள்ள குன்ன வாக்கம் பகுதியில் சங்கர்(40) என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார்.

அதே பகுதியில் கிருஷ்ணா (58) மற்றும் சிவசங்கர் (44 ) ஆகியோரும் கூலி தொளிலாளர்களாக உள்ளனர். தின்னர் என்பது வர்னிஷுடன் கலக்கும் திரவம் ஆகும். இவர்களும் சங்கருடன் சேர்ந்து போதைக்காக தின்னருடன் எலுமிச்சை பழச்சாறு குடித்துள்ளனர்.

இதில் சங்கர் அதே இடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.உடனே அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் போகும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவசங்கர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், கிருஷ்ணா ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெளிநாட்டிலும் இந்தியா கெத்து!! வெளிநாட்டு இளைஞரின் வாழ்வை காப்பாற்றிய இந்திய இளைஞன்!!

0

ஆசைஆசையாக சிக்கன் சாப்பிட்ட இளைஞருக்கு சிக்கன் துண்டு மாட்டி கொள்ள மூச்சுத்திணறல் ஏற்படும் பொழுது இந்திய இளைஞர் ஒருவர் மூச்சுத்திணறல் இருந்து காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்கு உரியதாக பேசப்பட்டு வருகிறது.

 

பிரித்தானியாவில் உள்ள North Wales-ல் இருக்கும் இந்திய உணவகமான Bangor Tandoori என்பது அந்த பகுதியில் மிகவும் பிரபலமான ஒன்று. அங்கு நிறைய பேர் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார்கள். அங்கு இளைஞர்கள் அடங்கிய குழு ஒன்றும் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

அப்பொழுது திடீரென்று அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதை பார்த்த வங்கதேசத்தை சேர்ந்த இளைஞரான 24 வயது மதிக்கத்தக்க Sheakh Rifat என்ற மாணவன், அவரை வெளியே அழைத்து, பின்னிருந்து அவரை தூக்கி குலுக்கினார். இரண்டு மூன்று முறை குலுக்கிய பின்னர் சிக்கன் துண்டு வெளியே வந்து விழுந்துள்ளது. சிக்கன் சாப்பிட்ட அந்த நபர் சாதாரண நிலைக்கு திரும்பினார். அங்குள்ள அனைவரும் Sheakh Rifat செயலுக்கு நன்றி பாராட்டும் விதமாக கைதட்டினர். அந்த நபர் சிக்கனை சாப்பிட்டுவிட்டு அதை நன்றாக விழுங்காத காரணத்தால் தொண்டையில் மாட்டிக் கொண்டுள்ளது. தக்க சமயத்தில் காப்பாற்றிய Sheakh Rifat- க்கு நன்றி கூறினார்.

 

இதுகுறித்து Sheakh Rifat கூறுகையில், நான் அந்த வாடிக்கையாளரை கவனித்து வந்தேன். அவன் சிக்கனை சாப்பிட்டுவிட்டு சிறிது நேரத்திற்குள் அவர் கண்களில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும் அவர் முகம் சிவந்துபோய் மூச்சு விட சிரமப் பட்டுக் கொண்டிருந்தார், அப்போது உடனடியாக அவரை அழைத்து வயிற்றுப் பகுதியை நன்கு இறுக்கமாக பிடித்து 1,2 முறை குலுக்கும் பொழுது சிக்கன் துண்டு வெளியே வந்து விழுந்தது. அவர் பின் நன்றாக சுவாசிக்க தொடங்கினார். அதன்பின் என்னை அழைத்து இருக்கமாக கட்டிப்பிடித்து நன்றி சொன்னார்.

எப்படி இது உங்களுக்குத் தெரியும் என்று கேட்க, தான் சிறு வயதில் இருக்கும் பொழுது தனது தந்தை இப்படி செய்து தன்னை காப்பாற்றினார் .. அதனால் அந்த செயலையே நான் இவருக்கு செய்து காப்பாற்றினேன் என்று கூறினார்.

 

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கிறது. அதை மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்தியனாக இருக்க பெருமைப்படுகிறோம் என Sheakh Rifat – க்கு வாழ்த்துக் கூறி பாராட்டி வருகின்றனர்.

 

உங்கள் பார்வைக்காக அந்த வீடியோ

 

 

 

ரஜினியால் வெட்கப்பட்ட நடிகை மீனா!

0

ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்மையில் நடைபெற்ற அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ரஜினிகாந்த் மற்றும் மீனா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் ரஜினி மீனாவிடம் திடீரென்று என்று ஐ அம் வெரி சாரி ஐ அம் திஸ் அப்பாயின்மெண்ட் வித் யூ என்று தெரிவித்திருக்கிறார்.

உடனடியாக மீனா என்ன சார் என்று வினவ எல்லோரும் மாறிவிட்டார்கள் ஆனாலும் நீங்கள் மட்டும் இதுவரையில் மாறவில்லை வீரா திரைப்படத்தில் பார்த்தது போலவே இருக்கிறீர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைக் கேள்விப்பட்ட படப்பிடிப்புத் தளத்தில் இருந்த எல்லோரும் சிரிக்க தொடங்கி விட்டார்கள். இதன் காரணமாக எனக்கு வெட்கம் வந்து விட்டது எனவும், நடிகை மீனா படப்பிடிடிப்பு தொடர்பாக சமீபத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

படப்பிடிப்பில் ரஜினி சார் என்னுடன் ஜாலியாக பேசியதாகவும் 25 வருடம் கழித்து ரஜினி சார் அவர்களுடன் நடிக்க இருப்பதாகவும், இன்னும் அவர் மாறவில்லை என்றும் நடிகை மீனா தெரிவித்திருக்கிறார்.

இன்பத்திற்கு அழைத்த கணவன்! மறுத்த மனைவி! இறுதியில்!!

0

உத்திரபிரதேச மாநிலத்தில் கணவன் உடலுறவுக்கு அழைத்து மனைவி மறுத்ததால் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திர பிரதேச மாநிலத்தில் முசார்பூர் அருகேயுள்ள பெசிண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பப்பு. இவருக்கு வயது 35. அவரது மனைவி டோலியால். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சானியா (5), வான்ஷ் (3) மற்றும் அர்ஷிதா (18 மாதம்).

 

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பப்பு தனது மனைவியை உடல் உறவுக்கு அழைத்துள்ளார். சிறு வயது குழந்தைகள் இருந்ததால் அந்தக் காரணத்தைக் கொண்டு பப்புவின் மனைவி உறவுக்கு மறுத்துள்ளார்.

 

கடந்த 15 நாட்களாக தன்னுடன் உறவுக்கு மனைவி மறுத்ததால் கோபப்பட்ட பப்பு அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக் கொன்றார்.

 

மனைவி இல்லாமல் குழந்தைகளை எப்படி ஏற்றுக் கொள்வது என நினைத்து 3 பிஞ்சு குழந்தைகளையும் ஆற்றில் வீசி கொன்று உள்ளார்.

 

எப்படியோ அறிந்து கொண்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பப்புவை கைது செய்தனர்.

 

பின் விசாரணையில் பாபுவின் மனைவி டோலியால் ஏற்கனவே பப்புவின் சகோதரரை திருமணம் செய்து இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பப்புவின் சகோதரரை விட்டுவிட்டு, மறுபடியும் பப்புவை திருமணம் செய்து கொண்டவர் என தெரியவந்தது. பப்புவிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

உடலுறவுக்கு மறுத்ததால் மனைவியையும் குழந்தைகளையும் கொள்வதா என அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

கோரோனாவிற்கு மருந்து வேண்டுமா? அப்ப நீங்கள் இதை செய்ய வேண்டும்! தெறிக்க விட்ட மனிதர்!

0

கோரோனாவிற்கு மருந்து வேண்டுமா? அப்ப நீங்கள் இதை செய்ய வேண்டும்! தெறிக்க விட்ட மனிதர்!

உலகெங்கும் கொரோனாவின் இரண்டாம் அலை பல சொல்ல முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது நோய் பரவலின் மையபகுதியாக திகழ்கிறது இந்தியா தான்.அமெரிக்காவை அடுத்து இந்தியா மட்டுமே கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆகும்.

ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை 2.6 கோடியை தாண்டும் அளவுக்கு நோயின் தீவிரம் அதிகரித்துள்ளது.இரண்டாம் அலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள், போலீசார், திரையுலகினர், பொது மக்கள், கர்ப்பிணிகள், மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாகுபாடின்றி பாதிக்கப்படுகின்றனர்.

சில நாட்களாக நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாமல் நாடே திணறி விட்டது.இருந்தாலும் முழு ஊரடங்கின் மூலம் கடந்த திங்கள் முதல் நோய் தொற்று சற்று குறைய தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரசை ஒழிக்க உலகம் முழுவதிலும் மருத்துவர்கள், மருந்து கம்பெனிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை ஒழிக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அரும்பாடு பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோரோனாவிற்கு அறிய வகை மருந்து என கூறி மதுரை அருகே ஒருவர் உயிருள்ள பாம்பை பிடித்து சாப்பிடும் வீடியோ வைரலாக சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை! மத்திய அரசிற்கு முதல்வர் அவசர கடிதம்!

0

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று நோய் பரவல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் , இந்த தொற்றுக்கான தடுப்பூசிக்கு தமிழகத்தில் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. தட்டுப்பாட்டை நீக்குவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தில் செங்கல்பட்டில் இருக்கின்ற ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசு செயல்படுத்தும் ஆனால் அங்கே தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யலாம் எனவும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து அதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக செங்கல்பட்டு தடுப்பூசியை நேரில் சென்று ஆய்வு செய்த முதல் அமைச்சர் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை செய்ததாக சொல்லப்படுகிறது. அதோடு செங்கல்பட்டு தடுப்பு மையத்தை ஆரம்பிப்பதற்கு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த சூழலில் செங்கல்பட்டு மத்திய அரசின் இந்த தடுப்பூசி உற்பத்தி ஆலையை குத்தகைக்கு விட உத்தரவிட வேண்டும் என்று தமிழக முன்னாள் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.