Wednesday, July 23, 2025
Home Blog Page 4589

மன்னிப்பு கேட்டார் எச் ராஜா!

0

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எச் ராஜா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் ஆட்சேபிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார்கள்.

அதாவது நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் அடைந்ததற்கு இயற்கை காரணம் அல்ல, அவர் கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்த எச் ராஜா, அவருடைய மரணத்திற்கு காரணம் அப்போது பாபநாசம் சட்டசபை உறுப்பினராக இருந்த ஜவாஹிருல்லாஹ் என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக, திருமாவளவன் உள்ளிட்டோர் அவருடைய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் அதோடு இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு எதிராக கொந்தளிக்கத் தொடங்கியது.

இந்த சூழ்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் குறித்து தான் பேசிய சர்ச்சை கருத்துக்கு எச் ராஜா மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதோடு தவறான நோக்கத்துடன் நான் அவ்வாறு பேசவில்லை என்று தெரிவித்து இருக்கிறார் எச் ராஜா.

அதேசமயம் ராஜாவிற்கு இவ்வாறு இஸ்லாமிய அமைப்புகளைப் பற்றியும், இஸ்லாமிய தலைவர்களை பற்றியும் தவறாக பேசி விட்டு மன்னிப்பு கேட்பது வாடிக்கையாகிப் போய்விட்டது. அதனால் இந்த முறை அவர் மன்னிப்பு கேட்டாலும் நாங்கள் அவரை மன்னிக்க மாட்டோம் என்று பல இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மக்களிடையே வந்த நம்பிக்கை! துரிதப்படுத்தும் மாநில அரசு!

0

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவால்லை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனால் பொதுமக்களுக்கு பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே தினத்தில் 33 ஆயிரத்து 764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று இந்த நோய்க்கு 475 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்து 715 ஆக அதிகரித்திருக்கிறது. 29 ஆயிரத்து 617 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து நலம் பெற்று வீடு திரும்பியதை தொடர்ந்து மொத்த நலன் பெற்றோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 13 ஆயிரத்து 221 ஆக அதிகரித்திருக்கிறது.

இதன் காரணமாக, தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. தற்சமயம் எல்லா ஊர்களிலும் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், தமிழ்நாட்டில் இரண்டாவது தினமாக நேற்று தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று இரண்டு லட்சத்து 59 ஆயிரம் பேர் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சென்ற வாரங்களில் தினசரி எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு கீழே இருந்த சூழலில் தற்சமயம் இந்த எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், தடுப்பூசி மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. ஆகவே எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகிறார்கள் குறிப்பாக இளைஞர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

உச்சத்தை தொட்ட பெட்ரோல் விலை!

0

இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறை இந்தியாவை பொறுத்தவரையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது.ஆனால் அதற்கு முக்கிய காரணமாக, சொல்லப்பட்டது அண்மையில் நடைபெற்ற தமிழகம், புதுவை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் தான் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது

அந்த வகையில், சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 95 ரூபாய் 28 காசுகளும். டீசல் ஒரு லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 89 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

திசை திருப்பும் முயற்சியா? பிரபலங்கள் கண்டனம்!

திசை திருப்பும் முயற்சியா? பிரபலங்கள் கண்டனம்!

சென்னையை சேர்ந்த பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து அனைத்து தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

சென்னை கே.கே நகரில் உள்ள பிரபலமான பி.எஸ்.பி.பி. பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின் மூலம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோரிடையே பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.அந்த கேடு கேட்ட ஆசிரியரின் அந்த செயலால் மனஉளைச்சலில் ஒரு மாணவி வேறு ஒரு முன்னாள் மாணவி ஒருவரிடம் தனது மன குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

தற்போது மாடலிங் துறையில் உள்ள அந்த முன்னாள் மாணவி அந்த ஆசிரியரின் தகவல்களை சேகரித்து வலைத்தளத்தில் பதிவிட்டதால் அந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.அதனை தொடர்ந்து, சென்னை நங்கநல்லூரில் இந்து காலனி 7 வது தெருவில் வசித்து வந்த அந்த ராஜகோபாலன் மற்றும் அவரது மனைவி மற்றும் தயார் ஆகியோரை கைது செய்து சென்றனர்.

அவரை 8 ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.போலீஸ் விசாரணையில், அவரை பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளது.அந்த ஆசிரியரின் ஆன்லைன் குழுவில் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவிகள் உள்ளனர் என்றும், 100 மாணவிகளுக்கு மேல் அவரிடம் படித்துள்ளதாகவும் கூறினார்.

வகுப்பு எடுக்கும் போதே அரைகுறை ஆடையுடன் தோன்றிய காட்சிகள் நேற்று விடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதனை தொடர்ந்து மாணவிகளின் தனி எண்களுக்கு அவர் அனுப்பிய ஆபாச வீடியோக்களை பற்றியும் விசாரணையில் அவரே போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.மேலும் இந்த பிரச்சனையை சாதி பிரச்சனையாக திசை திருப்ப பலர் முயற்சிக்கிறார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். 2 பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பை பற்றிய எனது பதற்றமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ’மகாநதி’. இன்னும் அந்த பதற்றம் குறைந்தபாடில்லை. ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை பின்பற்றும் நம் பிள்ளைகள் சொல்லும் பிரச்சினைகளுக்கு காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி துணையாக இருக்கவேண்டும்.

இந்த பிரச்சினையை சாதிப் பிரச்சினையாகக் திசை திருப்பும் முயற்சி பல தரப்பிலிருந்தும் நிகழ்வதைக் காண்கிறேன். குற்றத்தை பேசாமல் குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சினையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக அமைந்துவிடும்” என்று கூறியிருக்கிறார்.

அதே போல் இந்த விவகாரம் குறித்து இயக்குனர் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். அவருக்கு பள்ளி நிர்வாகம் கொடுக்கும் இடைப்பணி நீக்கம், பணிநீக்கம் போன்ற தண்டனையெல்லாம் தூக்கிப்போடுங்கள். சட்டப்படி கடும் தண்டனை வேண்டும். அவர் இனி எங்கும் ஆசிரியர் பணி தொடரக்கூடாது.

இது சம்பந்தமாக நிறையப்பேர் குரல் கொடுக்கிறார்கள். அதில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கொடுக்கும் குரலைவிட, பழி வாங்கும் குரல்கள்தான் அதிகமாக கேட்கிறது. பலரின் எழுத்துப்பதிவுகள், வீடியோ பதிவுகள் குவிகின்றன. வரவேற்க வேண்டிய விஷயம்தான். ஆனால் அதில் பல பேர் குற்றவாளி ராஜகோபாலனை விட்டுவிட்டனர்.

சிலரை அசிங்கப்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது. மாணவிக்காக கொடுக்கும் குரலில் தாயின் குரல், தந்தையின் குரல், அண்ணனின் குரல் இப்படி அக்கறையோட, சமூக அக்கறையோட குரல் இருக்க வேண்டும். இப்படி அரசியல் குரலாகவும், ஜாதிக்குரலாகவும், மதக்குரலாகவும் இருப்பது அவலம்.

உங்களின் அரசியல் பழிவாங்களுக்கு அரசியல் ரீதியாக வேறொரு சந்தர்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இது மாணவிகளின் மானப்பிரச்சனை. இதில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். நிர்வாகத்தின் மீது தவறிருந்தால் சட்டப்படி தண்டிக்கட்டும்.

இது மட்டுமல்ல, மீண்டும் பொள்ளாச்சி வழக்கை அரசு கையில் எடுத்து உண்மை குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு மட்டும் தயவுதாட்சண்யம் பார்க்காதீர்கள். அரசியல், மதம், ஜாதி இதற்கெல்லாம் அப்பாற்பட்டதுதான் பெண்ணின் மானம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு மாணவி புகார்! “அசிங்கமான வார்த்தைகளால் மாணவிகளை அழைப்பார்” சின்மயி வெளியிட்ட பதிவு!!

சென்னை சாந்தோம் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தான் அனுபவித்த பாலியல் தொல்லைகளை பற்றி சின்மயி இடம் புலம்பியுள்ளார் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கே கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்த மாணவிகள் ஆசிரியர் ராஜகோபாலன் மீது அடுக்கி வைத்த பாலியல் புகார்கள் அனைத்தும் வெளிக் கொண்டு வரப்பட்டு விசாரணை செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அந்த பள்ளியின் நிர்வாகத்துடன் இன்னும் விசாரணை போய்க் கொண்டுதான் உள்ளது. தொடர்ந்து தான் அனுபவித்த பாலியல் தொல்லைகளை பற்றி பல மாணவிகள் கூறி வருகின்றனர். 96 படத்தில் நடித்த ஜானு கௌரி கிஷன் கூட தனது பள்ளியில் ஏற்பட்ட சம்பவத்தைப் பற்றியும் நேற்று பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் சாந்தோம் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தான் பள்ளியில் நடந்த கொடுமைகளை சின்மயிக்கு பகிர்ந்துள்ளார். அதை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அந்த மாணவி, PSBB பள்ளியில் நடந்தவற்றை வெளியில் கொண்டு வந்ததற்கு மிகவும் நன்றி. பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது நான் அனுபவித்த பாலியல் கொடுமைகளை கூறுகிறேன். உங்களது இரண்டு நிமிடங்களை ஒதுக்கி எனக்காக இதை படிக்கவும். சாந்தோம் உயர் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியரான பால் அமலனால் நான் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டேன்.

அவர் மிகவும் அசிங்கமான வார்த்தைகளை உபயோகிப்பார். மாணவர்களை மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி அவரது கேரக்டர்களை மிகவும் மோசமாக சித்தரித்து பேசுவார். சொல்லவும் வாய் கூசும் வார்த்தைகளை கொண்டு அழைப்பார்.

அவர் கேட்ட வார்த்தைகளை பேசும் பொழுது நான் அவரை எதிர்த்தேன். அதனால் என்னைக் கண்டால் அவருக்கு பிடிக்காது. தேவையில்லாமல் என்னை பிரம்பால் அடிப்பார். அம்மாவை பள்ளிக்கு கூட்டி வரச் சொல்லி அவர்கள் முன் அசிங்கமாக பேசி அவமானப்படுத்தினார். என் அம்மா கண்களில் கண்ணீரோடு வெளியேறியது இன்றும் எனக்கு ஞாபகம் உள்ளது. யாரும் உதவவில்லை. அவர் பிராக்டிக்கல் மார்க்கை குறைத்து விடுவேன் என்று கூறி பயமுறுத்தினார். என அந்தப் பெண் சின்மயிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து இந்த மாதிரியான பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் பூதாகரமாக வெடிக்கும் என்பதில் ஐயமில்லை.

முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை! ஊரடங்கு நீட்டிப்பு?

0

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மற்றும் மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அனுமதி இல்லாமல் முழு ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த முழுமையான ஊரடங்கு தினங்களில் பத்திரிக்கை, ஊடகங்கள் உள்ளிட்ட மிகவும் அத்தியாவசியமான ஒரு சில வேலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அனுமதி வழங்கப்பட்ட அவர்களை தவிர்த்து வேறு யாராவது சாலைகளில் தேவையில்லாமல் சுற்றி தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு ஊரடங்கு தினங்களில் பழங்கள், காய்கறிகள் போன்றவை பொது மக்களுக்கு விநியோகிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து இருக்கிறது.

இந்த நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூரில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே மாதம் 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு அமல் படுத்தி இருக்கின்றோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதம் செய்கையில் முதலில் ஒரு வார கால ஊரடங்கை செயல்படுத்தி அதன் பின்னர் நோய்த்தொற்று பரவலை பொருத்து அந்தப் தொற்று பரவலை நீட்டித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. நோய்த்தொற்று பரவலை பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தற்சமயம் அமலில் இருக்கின்ற ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் அவரின் உறவினரா? கிளம்பியது புது சர்ச்சை!

0

பாலியல் புகாரில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் திமுகவில் ஆர் எஸ் பாரதி உறவினர் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பி எஸ் பி பி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரம் தொடர்பான பிரச்சனைகள் பலவிதமாக உருவெடுத்து இருக்கிறது.

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கின்ற பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர் எஸ் பாரதியின் உறவினர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இதனை உண்மை என நம்பி பலரும் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுகவின் வழக்கறிஞர்கள் பிரிவைச் சார்ந்த சூர்யா வெற்றி கொண்டான் அவர்கள் நேற்றைய தினம் ஒரு புகாரை அளித்தார். அதில் சென்னையில் இருக்கின்ற ஒரு பிரபலமான பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டு அவர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

அதிலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால் நாராயணன் சேஷாத்ரி என்பவர் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் என்கின்ற ஆசிரியர் திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்களுக்கு உறவினர் எனவும், அதன் காரணமாக, இந்த வழக்கை மூடி மறைத்து விடுவார்கள் எனவும், பொது இடங்களில் ஒரு சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கருத்துக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் தான் கூறுவது பொய் என தெரிந்தோ அல்லது அதன் தன்மையை குறித்து ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமலே தன்னுடைய எண்ணத்திற்கு எதிர் கருத்து உடையவர் என்ற ஒரே காரணத்திற்காக, எங்கள் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்களின் பெயரை கெடுக்கும் எண்ணத்துடன் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

இவரை அடுத்து இன்னும் பலர் இதனை பதிவிட்டு வருவதன் காரணமாக, இது தொடர்பான அவதூறு பல தரப்பினரிடமும் பரவி வருகின்றது கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் அரசு பாரதியின் உறவினர் என்பதும் பொய் அதே போல அப்படி அவர் உறவினர் என்ற காரணத்தால் தான் தமிழக அரசு இந்த வழக்கை மூடி மறைக்க முயற்சி செய்கிறது என்பதும் பொய் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பது மிகவும் கீழ்த்தரமான அவதூறு என்று தெரிவித்ததோடு, மேலும் எங்களுடைய ஆட்சியின் மீதும், எங்களுடைய கட்சியின் மீதும் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டு. அதோடு மக்களிடையே கட்சி மற்றும் ஆட்சியாளர்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த கையாளப்படும் சதி என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே நாராயணன் சேஷாத்திரி மற்றும் அதனை பின்பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் பதிவுகள் செய்தோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பதிவுகளை உடனடியாக நீக்குவதுடன் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது

விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள்! சீல் வைத்த அதிகாரிகள்!

0

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி செயல்பட்ட பேக்கரி உள்ளிட்ட மூன்று கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து இருக்கிறார்கள்.

நோய் தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் எந்தவிதமான தளர்வுகளும் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கடைகள், திருமண மண்டபங்கள், போன்றவற்றில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்து, அபராதம் விதித்து, அதோடு சீல் வைத்துவிடுகிறார்கள் என்று சொல்ல படுகிறது. அதன்படி நேற்று திண்டுக்கல் மாநகராட்சி நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான அதிகாரிகள் நகரின் பல இடங்களில் ஆய்வு செய்து வந்தார்கள்.

இந்த ஆய்வு நடைபெற்றபோது ஆர்.என் காலனி பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து இருக்கிறார்கள். இதேபோல அரசு மருத்துவமனை பகுதியில் இருக்கின்ற பேக்கரி கடை மற்றும் பேகம்பூர் பகுதியில் இருக்கின்ற தேனீர் கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்து இருக்கிறார்கள்.

இது தொடர்பாக உரையாற்றிய மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து! களத்தில் குதித்த திமுக சட்டசபை உறுப்பினர்!

0

சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு கஸ்தூர்பா மருத்துவமனையில் நேற்று இரவு தீ விபத்து உண்டாகியிருக்கிறது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் தீ விபத்து உண்டாகியிருக்கிறது.

திருவல்லிக்கேணியில் இருக்கின்ற அரசு மகப்பேறு மருத்துவமனையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக, இந்த தீ விபத்து உண்டாகியிருக்கிறது சரியான சமயத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக, மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவமனையில் புகை சூழ்ந்ததன் காரணமாக, குழந்தைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த விபத்து காரணமாக, பொதுமக்கள் இடையே மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் திமுகவின் சபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார்.

மேலும் அங்க ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்க ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது சேப்பாக்கம் சட்டசபை தொகுதியில் தான் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி அடைந்து சட்டசபை உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் அலட்சியத்தால் பீதியில் பொதுமக்கள்!

0

உத்தரபிரதேச மாநிலத்தில் நோய் தடுப்பூசி முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி கோவாக்சினும் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

அங்கே சித்தார்த் நகர் மாவட்டத்தில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் நோய்த்தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணி நடந்துவருகின்றது. சென்ற மாதம் 20ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்ற 20 நபருக்கு முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கடந்த 14ஆம் தேதி அந்த மருத்துவமனைக்கு சென்ற சமயத்தில் கோவாக்சின் தடுப்பு ஊசியை செலுத்தி இருக்கிறார்கள். இதுதொடர்பாக தகவல் தெரியவந்ததும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறு இருவேறு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதன் காரணமாகவே அவர்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக, எந்த விதமான பக்க விளைவு ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருவதாகவும். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக மருத்துவ அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய போது இது முழுக்க முழுக்க கவனக்குறைவு காரணமாக, நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். கவனக்குறைவாக செயல்பட்டது யார் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், விசாரணை நடந்து வருவதாகவும், தெரிவித்திருக்கிறார். அதோடு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை நேரில் சந்தித்து பேசி இருப்பதாகவும், அவர்களுக்கு பக்க விளைவுகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.