Saturday, July 26, 2025
Home Blog Page 4593

மத்திய அரசுக்கு வானதி சீனிவாசன் எழுதிய அவசரக் கடிதம்!

0

தமிழ்நாட்டில் நடைபெற்று நாட்கள் செல்ல செல்ல அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சட்ட சபை உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் கோயமுத்தூர் தெற்கு சட்டசபை உறுப்பினர்கள் வானதி சீனிவாசன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலையில் தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கோவை மாவட்டம் இதுவரையில் இல்லாத அளவிற்கு தொற்றுப் பரவலில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இந்த நோயைத் தடுப்பதில் ஈடுபட்டிருக்கின்ற சுகாதாரத் துறையில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோயமுத்தூர் தொழில்துறை நகரம் என்பதால் 70சதவீதத்திற்கும் மேலான மக்கள் தொழில் துறையை சார்ந்தவர்கள் என்ற காரணத்தால், கோவையில் தடுப்பூசி போடுவதற்காக உடனடித் தேவை ஏற்பட்டிருக்கிறது. அதிகரித்து வரும் நோய்த்தொற்று காரணமாக இந்த பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை கடுமையாக பாதித்திருக்கிறது. அதோடு பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், மாநில அரசுக்கு உதவி புரிவதற்கும் மற்றும் நெருக்கடியை திறனுடன் கையாள்வதற்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு தமிழ் நாட்டிற்கு அனுப்பப் படவேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தி இருக்கிறார்.

அதோடு அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டும். அவற்றில் குறிப்பிடத்தக்க அளவை கோயம்புத்தூருக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் வானதி ஸ்ரீனிவாசன்.

2 முலாம்பழம் 18 லட்சம்!! எங்க தெரியுமா?

0

ஜப்பானில் இரண்டு யூபரி முலாம்பழம் 2.7 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. அதைக்கேட்ட மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

 

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ என்ற தீவில் பாரம்பரியத்தை குறிக்கும் விதமாக இந்த யூபரிய முலாம்பழம் விளைவிக்கப்படுகின்றன. ஒரு பாரம்பரிய ஏலத்தில் 2.7 மில்லியனுக்கு விலை போயுள்ளது. இது அமெரிக்க டாலரில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் அமெரிக்க டாலர்.

இந்தியாவில் 18,19,712 மிகப்பெரிய மதிப்பில் விற்கப்பட்டுள்ளது.

 

இது கடந்த ஆண்டின் விலையை விட 22 மடங்கு அதிகமாகும் என்று ஏல அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர். அதாவது,கடந்த ஆண்டு ஒரு ஜோடி முலாம்பழம்கள் ,1,20,000 மில்லியன் ய

யென்னுக்கு விற்கப்பட்டன.

 

ஒரு ஜோடி முலாம்பழம் ஒரு மொத்த சந்தையின் ஏலத்தில் ஐந்து மில்லியன் யென் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த முலாம்பழங்கள் ஹொக்கைடோ என்ற இடத்தில் மிகவும் பாரம்பரியமான முறையில் குளிர்காலத்திலும் வளர்க்கப்படுகிறது.. இந்த பழம் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால் இது ஒரு பாரம்பரியமாக நினைத்து பெருமைப்பட்டு வருகின்றனர். இதன் அறுவடை மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்டில் முடியும் என தெரிவித்தனர்.

 

நாம் இங்கே இரண்டு முலாம்பழம் 50 ரூபாய் என்றால் மூன்று தாருங்களேன் என்று கடைக்காரரிடம் வம்பிற்கு நிற்போம். ஆனால் அங்கு 18 லட்சத்திற்கும் மேல் விற்பனையானது, அதுவும் இரண்டு முலாம்பழங்கள் மட்டுமே என்பது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

 

 

உங்க கிட்ட ஆண்ட்ராய்டு போன் இருக்கா?? நீங்களே உங்க ஆக்சிஜன் அளவை செக் செய்யலாம்!!

கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவ உபகரணங்களின் விலை உயர்ந்து அதிகமாக விற்கப்படுகிறது. ஆக்சிஜன் அளவை அளக்க உதவும் ஆக்ஸி மீட்டரின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒருவருக்கு ஆக்சிஜன் அளவு 95க்கும் கீழே இருந்தால் ஆக்ஸிஜன் அளவு பற்றாக்குறை ஏற்பட்டு சுவாச பாதிப்புகள் ஏற்படும்.

 

ஆக்சி மீட்டர் இருந்தால் ஆக்ஸிஜன் அளவை துல்லியமாக கணக்கிட்டு தற்போதைய நிலைமையை அறிந்து கொள்ள முடியும். அதற்கு ஆண்ட்ராய்ட் மட்டும் iOs செயலிகள் பயன்படுகின்றன. கேமரா மற்றும் செல்போன் லைட் மூலம் துல்லியமாக ஆக்சிஜன் அளவை கணக்கிடுகின்றன. ஆக்சி மீட்டர் செயலிகள் யாவை என்பதை பற்றி பார்க்கலாம்.

 

1. கேர்பிளிக்ஸ் விட்டல்ஸ் (CarePlix Vitals)

 

கொல்கத்தாவைச் சேர்ந்த கேர் நவ் ஹெல்த்கேர் ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த செயலி கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டாரில் கிடைக்கிறது. ஈமெயில் ஐடி மூலம் இதில் பதிவு செய்ய வேண்டும். இந்த செயலி தொலைபேசியில் உள்ள லைட் இன் மூலம் ஆக்சிஜன் அளவை கணக்கிடுகிறது. இரண்டு வெவ்வேறு பதிவுகள் உடன் ஒப்பிடும் பொழுது இது துல்லியமாக ஆக்சிஜன் அளவை கணக்கிட்டது.

 

2. எம்.பைன் (MFine)

 

உங்கள் செயலி ஆன்டிராய்டு போனில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த செயலி மருத்துவர்களுடன் நோயாளிகளை இணைக்கிறது. கேமரா மற்றும் லைட் மூலம் ஆக்சிஜன் அளவை கணக்கிடுகிறது. இவற்றின் முடிவுகள் ஏறத்தாழ ஒத்து இருக்கிறது.

 

3. பிளட் ஆக்சிஜன் (Blood Oxygen)

 

இந்த செயலி ஆப்பிள் போன்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடியது. ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் லேவெல் மற்றும் இதயத்துடிப்பு கணிக்கிறது. சுவாச முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது மூலம் இது ஆக்சிஜன் அளவை கணக்கிடுகிறது.

 

4. பல்ஸ் ஆக்சிமீட்டர் டிராக்கர் (Pulse Oximeter Tracker)

 

ஆன்டிராய்டு போன்களில் மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய பல்ஸ் ஆக்சி மீட்டர் செயலி ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்வதற்காக பயன்படுகிறது. ஏறத்தாழ 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது கண்காணிக்க முடியாது. ஆனால் அனைத்து பதிவையும் சேமித்து வைக்கும்.

 

5. இ.இசட் விட்டல்ஸ் (Ezvitals)

 

பல்ஸ் ஆக்சிமீட்டர் போலவே இந்த செயலியும் ஆக்சிஜன் அளவை பதிவு செய்யாது என்றாலும், ஆக்சி மீட்டரில் பதிவாகியிருக்கும் தகவல்களை சேகரித்து வைக்கப் பயன்படும். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் என இரண்டிலும் கிடைக்கிறது. உடல் தொடர்பான தகவல்களை, தெரிந்து கொண்டு மருத்துவரிடம் பகிர உதவுகிறது.

 

மேற்கூறிய அனைத்து செயல்களும் அதன் நிறுவனம் வெளியிட்ட தகவல்களை வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இதை அப்படியே நம்பாமல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்.இதை அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

 

 

திமுகவின் முக்கிய எம்எல்ஏவுக்கு தொற்று உறுதி! அதிர்ச்சியில் முதலமைச்சர்!

0

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் முதல் அலையைவிட இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதை தடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் போன்றவர்கள் இந்த நோய்களினால் பாதிக்கப்பட்டு வருவது வழக்கமாகி விட்டது.

இந்த சூழ்நிலையில், கடலூர் மாவட்ட சட்ட சபை உறுப்பினர் ஐயப்பன் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் கட்சிக்காரர்களுடன் ஒன்றிணைந்து ஒரு சில தினங்களாக நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடந்த வாரம் ஐயப்பனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.அதில் நோய்த் தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கின்ற ஒரு பதிவில் தன்னுடைய உடல் நிலை சீராக இருப்பதாகவும், அதோடு தமிழக மக்கள் எல்லோரும் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அணி மாறும் முன்னாள் அமைச்சர்கள்! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

0

அதிமுகவில் சமீபகாலமாக ஒரு சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மத்திய அரசின் நெருக்கடி காரணமாக தான் முன்னாள் அமைச்சர்கள் வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமி அணுகுமுறை மற்றும் வியூகங்கள் காரணமாக தங்களுக்கு எந்த விதமான லாபமும் இல்லை என்று நினைக்கின்றனர் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள். என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக ஓ பன்னீர்செல்வம் வழியாக சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி கொடுத்து பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த முயற்சித்து இருக்கிறதுஆனால் பன்னீர்செல்வம் நானே அதிமுகவின் கட்சி தலைவர் என்ற ரீதியில் ஒரு முடிவில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் இதுவரையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசாத நிலையில், அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் தற்சமயம் தேனி நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பன்னீர் செல்வத்தின் சகோதரர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என்ற பெயரில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அதிமுகவில் பன்னீர்செல்வம் அதிகார மையமாக திகழ தொடங்கி இருக்கிறார்.

இவர்கள் அமைதியாக இருந்தால் அனைத்தும் கிடைக்கும்! இன்றைய ராசி பலன்கள்

0

இவர்கள் அமைதியாக இருந்தால் அனைத்தும் கிடைக்கும்! இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி:

     இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ஈடுபடுவதன் மூலம் சீராக செல்லும்.பணிகளை கவனமாக செய்ய வேண்டும்.வீட்டில் வாக்குவாதம் ஏற்படும்.தேவையற்ற செலவுகளை குறைக்கவும்.

ரிஷப ராசி:

     இன்று உங்களுக்கு அனுகூலமான நாள்.முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.திட்டமிட்டு செயல் ஆற்றினால் வேலை எளிதாக முடியும்.உங்கள் உறவில் அன்பு பொங்கும்.பண வரவு காணப்படும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுன ராசி:

     இன்று உங்களின் முடிவுகள் சாதகமாக இருக்கும்.தனி திறமை ஒளிந்து இருக்கும்.உங்களுடன் நல்ல புரிந்துணர்வு இருக்கும்.இன்று பணவரவு காணலாம்.உடல் நிலை சீராக இருக்கும்.

கடக ராசி:

     இன்று பல தடைகளை கடக்க வேண்டும்.உங்களின் மனநிலை பதட்டமாக இருக்கும்.பண விசயத்தில் நிதி நிலைமை சரி ஆகும்.சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி தெரியும்.

சிம்ம ராசி:

     உங்களின் வார்த்தையில் கவனம் தேவை.உறவில் மோதல் ஏற்படும்.பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.பண இழப்பு ஏற்படலாம்.

கன்னி ராசி:

     வசதிகள் பெருகும் நாள்.அனைவரிடமும் பாராட்டை பெறுவீர்கள்.சேமிப்பை ஏற்படுத்துங்கள்.நம்பிக்கை தரும் நாளாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

துலாம் ராசி:

     இன்று அமைதியாக இருப்பதனால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.பணிகள் அனைத்தும் சவால்கள் மற்றும் அதிகமாக இருக்கும்.பண வரவு குறைவாக தான் இருக்கும்.

விருச்சிக ராசி:

     பலன் சுமாராக இருக்கும்.பணிகளை அதன்படி ஏற்க வேண்டும்.உங்கள் உறவில் மகிழ்ச்சி பாதிக்கப்படும்.செலவுகள் காணப்படும்.ஆரோக்கியம் குறைவாக இருக்கும்.

தனுசு ராசி:

     இன்று சுமாரான நாள்.கூடுதல் பணிகள் ஏற்படும்.துணையுடன் பொறுமையாக பேச வேண்டும்.நிதி நிதி நிலைமை சுமாராக இருக்கும்.

மகர ராசி:

     இன்று அனுகூலமான நாள்.உற்சாகமாக இருப்பெர்கள்.வங்கியில் ஊக்கத்தொகை செய்வது குறையலாம்.ஆரோக்கியம் காணப்படும்.

கும்ப ராசி:

     விரைந்து செயலாற்றும் ஆற்றல் மிக்கவர்கள்.பணிகளை விரைவாகை முடிக்க சொல்லவா? நிதி நிலைமை சீராக இருக்கும்.

மீன ராசி:

     செயளாற்றும் போது கவனம் தேவை.அதிக பணம் செலவாகும்.இன்று கண் சம்பந்தப்பட்டதை மருத்துவரை கேர்கொள்ள வேண்டும்.போட்டு

அய்யோ!! சிரிப்ப அடக்க முடியல!!! கலர் பூஞ்சை மீம்ஸ்!! நீங்களும் பாருங்க! சிரிங்க!!

0

இணையதளத்தில் கலர் பூஞ்சைகளை பற்றி மீம்ஸ்கள் வெளிவந்து அனைவரையும் சிரிப்புக்குள் ஆழ்த்தியுள்ளது.

என்னதான் கஷ்டம் இருந்தாலும் இந்த மாதிரியான மீம்ஸ்களை பார்க்கும் பொழுது சிரிப்புதான் வருகிறது.

 

தடுப்பூசி போடவந்தால் இதை செய்வது அவசியம்! மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு!

0

தடுப்பூசி போடவந்தால் இதை செய்வது அவசியம்! மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்கு!

மத்திய பெங்களூருவில் உள்ள நாகரத்பேட்டையில்  உள்ள தர்மநாராயணசாமி கோயில் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு இளைஞர்கள் தங்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக பதிவு செய்ய மாநகராட்சி முகாமுக்குச் சென்றனர். ஆனால், இரு இளைஞர்களும் கொரோனா பரிசோதனைக்கு வந்துள்ளதாகக் கூறி அவர்களி்ன் பெயரைப் பதிவு செய்த அதிகாரிகளுக்கு ஓடிபி எண் வந்துள்ளது.

ஆனால், இளைஞர்கள் இருவரும் தாங்கள் தடுப்பூசி செலுத்த பதிவு செய்வதற்கு தான் வந்தோம் என்றும், கொரோனா பரிசோதனைக்கு வரவில்லை என்றும், ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஆனாலும், மாநகராட்சி ஊழியர்கள், இரு இளைஞர்களையும் வலுக்கட்டாயாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கட்டாயப்படுத்தினர்.ஆனால், அந்த இரு இளைஞர்களும் தாங்கள் உடல்நலத்துடன் இருக்கும் போது பரிசோதனை செய்ய முடியாது எனத் தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஒரு ஊழியன் இரு இளைஞர்களில் ஒருவரை கடுமையாகத் தாக்கி, கீழே தள்ளி பரிசோதனைக்கு உட்படுத்த முயன்றார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி, வைரலானது.இதைப் பார்த்தவர்கள் அனைவரும்  எவ்வாறு கட்டாயப்படுத்தி ஒருவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என்றும், இளைஞர்களை தாக்கியது தவறு என்றும் கண்டித்தனர்.

இந்த சம்பவம் பெரிதானதையடுத்து, பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுர்வ குப்தா தலையிட்டு சமூக வலைத்தளத்தில் மன்னிப்புக் கோரினார். மேலும் அவர் பதிவிட்ட கருத்தில் “ நாகரத்பேட்டையில் இளைஞர்களை தாக்கிய சம்பவத்துக்கு மன்னிப்புக் கோருகிறேன் என்றும் யாரையும் கட்டாயப்படுத்தி பிசிஆர் பரிசோதனை செய்யக்கூடாது. இளைஞர்களை தாக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக துறைரீதியான விசாரணை மற்றும், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.இந்த வைரலான வீடியோவின் அடிப்படையில் போலீசார் மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகரிக்கும் அடுத்த நோய்த்தொற்று! மருந்து கிடைக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

0

அதிகரிக்கும் அடுத்த நோய்த்தொற்று! மருந்து கிடைக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

கொரோனா தொற்றையடுத்து கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அதற்கான மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலுக்கு இணையாக கருப்புப் பூஞ்சைத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருப்புப் பூஞ்சை நோயால் கணிசமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை குணப்படுத்துவதற்கான மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. தமிழகத்தின் அனைத்து கிராமங்களையும் கொரோனா வைரஸ் தாக்கி, மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். அதனால் மக்களிடையே ஏற்பட்ட அச்சம் இன்னும் விலகாத நிலையில், அடுத்த சோதனையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருப்புப் பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் பலரும் இந்த உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தான் கருப்புப் பூஞ்சைத் தாக்குதல் இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், எல்லா மாவட்டங்களிலும் கருப்புப் பூஞ்சை பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அது குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படாத நிலையில், அந்நோயை குணப்படுத்துவதற்கான மருந்தும் கிடைக்காதது நிலைமையை மோசமாக்கியுள்ளது.

சென்னையில் சில மருத்துவமனைகளைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் என எந்த மருத்துவமனையிலும் கருப்புப் பூஞ்சையை குணப்படுத்துவதற்கான ஆம்போடெரிசின்-பி (Amphotericin ஊசி மருந்து இருப்பு இல்லை. கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இரு நாட்களாக எந்த மருத்துவமும் அளிக்கப்படவில்லை. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களின் மருத்துவமனைகளிலும் இதே நிலை தான். திருச்சியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கருப்புப் பூஞ்சை நோய்க்காக மருத்துவம் பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்து விட்டார். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும், மாவட்ட மருத்துவமனைகளுக்கும் உடனடியாக ஆம்போடெரிசின்&பி மருந்து அனுப்பி வைக்கப்படாவிட்டால், அடுத்த சில நாட்களில் அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழப்பதை தடுக்க முடியாது என்பதே எதார்த்தம்.

கருப்புப் பூஞ்சை நோய் எவரும் எதிர்பாராத நிலையில், திடீரென தாக்கத் தொடங்கியுள்ளது என்பதும், அதை மருத்துவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதும் உண்மை தான். ஆனால், நிலைமை மோசமாகி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. கள நிலைமை மிகவும் மோசமாக இருப்பதை உணர்ந்து கொண்டு கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களைக் காப்பாற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதன்படி, எந்தெந்த வழிகளில் எல்லாம் ஆம்போடெரிசின்-பி மருந்தை கொள்முதல் செய்ய முடியுமோ, அந்தெந்த வழிகளில் எல்லாம் அந்த மருந்தை வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு ஆம்போடெரிசின்&பி மருந்தை போதுமான அளவுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

செம்பருத்தி, மௌனராகம் நாடகத்தில் இந்த காட்சிகளை வைங்க! டாக்டர் அறிவுறுத்தல்!!

செம்பருத்தி, மௌனராகம் போன்ற மக்கள் அதிகமாக பார்க்கும் சீரியல்களில் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு காட்சிகளை ஒளிபரப்பினால் மக்கள் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு வரும் என்று டாக்டர் ராஜ்மோகன் பதிவிட்டுள்ளார்.

 

கொரோனா தடுப்பூசியை பற்றிய விழிப்புணர்வு நகரங்களில் உள்ள மக்களிடம் ஏற்பட்டுள்ளதே தவிர கிராமங்களில் உள்ள மக்களிடம் கொரோனா தடுப்பூசியின் விழிப்புணர்வு யாருக்கும் தெரிவதில்லை. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தினமும் வீடியோ வெளியிட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி வருகிறார்.

 

 

மேலும் திரைப்பட பிரபலங்கள் சிவகார்த்திகேயன்,கீர்த்தி சுரேஷ், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் போன்றவர்களும் முகக்கவசம் அணிவதை பற்றியும், கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்கள்.

 

இதேபோல் தொலைக்காட்சியில் வரும் சீரியல் தொடர்களிலும் கூட மிகப் பிரபலமானவர்கள் முக கவசம் அணிவது பற்றியும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அதன் அவசியத்தைப் பற்றியும் தாங்களாகவே முன்வந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

சமூக ஊடகங்களில் மற்றும் வலைதளங்களில் சொல்லப்படும் செய்திகள் எதுவும் மக்களிடம் அதிகமாக போய் சேரவில்லை. நகர்ப்புறங்களில் ஏற்படும் விழிப்புணர்வு கிராமப்புறங்களில் ஏற்படுவதில்லை. அதுவும் கிராமப் புறங்களில் உள்ள முதியோர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது என்றாலே பயந்து நடுங்குகிறார்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று அவர்களாகவே யூகித்து தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்.

 

மிக பிரபலமான தொலைக்காட்சி சீரியல் தொடர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வது போல் சீன்கள் வைத்தால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று நல்ல ஐடியா ஒன்றை டாக்டர் சொல்லி உள்ளார்.

 

தஞ்சாவூரை சேர்ந்த ராஜ்மோகன் வெளியிட்ட பதிவில். “செம்பருத்தி, மவுனராகம் இந்த மாதிரி சீரியலில் கோவிட் தடுப்பூசி போட்டுக்குற சீன் வச்சா பாதி பேர் போய் போட்டுக்குவாங்க” என்று கூறியுள்ளார்.

 

இவர் சொல்லுவதையும் பார்த்தால் ஒரு பக்கம் நல்ல ஐடியாவாக தான் இருக்கிறது. சன் டிவி,விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் டிவி போன்ற தொலைக்காட்சியில் வெளிவரும் நாடகங்களில் ஹீரோ ஹீரோயின்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் போல் நடித்து ஒளிபரப்பப்பட்டால் பாமர மக்களும் அதன் அவசியத்தை உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.