Saturday, July 26, 2025
Home Blog Page 48

அடேங்கப்பா ஒரு நாள் நைட்டுக்கு இத்தனை லட்சமா? டிராகன் பட நாயகி சிக்கியது எப்படி?

தமிழகத்தில் தற்பொழுது டாஸ்மாக் ஊழல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.டாஸ்மாக்கில் கிட்டத்தட்ட 1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.இது குறித்த புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை சம்மந்தப்பட்டவர்கள் மீது FIR பதிவு செய்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை டாஸ்மாக் ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் வீடுகள்,அலுவலகங்கள் மற்றும் சொந்தமான இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டது.விசாரணைக்கு பின்னர் டாஸ்மாக்கில் 1000 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது என்பதை அதிகார்பூர்வமாக அறிவித்தது.

கடந்த மே 16 அன்று ரத்தீஷ்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பர்கள்,திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டாஸ்மாக் ஊழல் விசாரணை பரபரப்பை கிளப்பியிருக்கும் நிலையில் பிரபல நடிகை கயாடு லோகருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி தற்பொழுது ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

டிராகன் படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கயாடு லோகர்.இவர் தற்பொழுது சிம்பு,ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.டிராகன் வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டில் டாப் இடத்தில் இருக்கும் நடிகை கயாடு லோகர் டாஸ்மாக் ஊழல் வழக்கில் சிக்கியிருப்பவர்கள் நடத்திய இரவு பார்ட்டியில் கலந்து கொள்ள ரூ.35,00,000 வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.இந்நிலையில் குறுகிய காலத்தில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் கயாடு லோகர் டாஸ்மாக் ஊழல் வழக்கில் தொடர்பு படுத்தப்படுத்தப்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வக்கீல் பீஸ் வேண்டாம்.. வீட்டிலிருந்தே ஈஸியாக உயில் எழுதலாம்!!

அந்த காலத்தில் சொத்துக்களை பிரிக்க உயில் உதவியாக இருந்தது.சொத்துக்களுக்கு சொந்தக்காரர் எழுதிய உயில் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு சொத்து வழங்கப்படும்.சொத்து வழக்கு,வாரிசுப் பிரச்சனை,சொத்துப் பிரச்சனை எதுவும் வராமல் இருக்க உயில் உதவியாக இருக்கிறது.

ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மட்டுமே உயில் எழுதி வைக்க முடியும்.பிரச்சனையில் உள்ள சொத்து மற்றும் பூர்விக சொத்தை பிறருக்கு உயில் எழுதி வைக்க முடியாது.முன்பு சாதாரண வெள்ளைத் தாளில் உயில் எழுதி வைக்கப்படும் வழக்கம் இருந்தது.முறையாக உயில் எழுத வெள்ளைத் தாளில் ஸ்டாம்ப் பயன்படுத்தலாம்.பிறகு உயிலுக்கு சாட்சி கையெழுத்து இருவரிடம் வாங்கி பதிவு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த உயிலில் கையெழுத்திடுபவர்கள் உயிலுக்கு தொடர்பு இல்லாதவராக இருக்க வேண்டும்.முன்பெல்லாம் கைகளால் உயில் எழுதப்பட்டு வந்தது.ஆனால் தற்பொழுது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.வெள்ளைத் தாளில் உயில் எழுத வக்கீல் செலவு ஏற்படும்.ஆனால் ஆன்லைனில் உயில் எழுதினால் பணம் மற்றும் நேரம் மிச்சமாகும்.

சிக்கல் இல்லாத சொத்துக்கு உயில் எழுத வக்கீல் உதவி தேவையிருக்காது.ஆன்லைனில் எழுதும் உயிலை அடுத்த 5 ஆண்டிற்குள் புதுப்பிக்க வேண்டும்.ஆன்லைன் உயிலுக்கும் இரண்டு சாட்சி கையொப்பம் அவசியமாகும்.

நீங்கள் நம்பகத் தன்மை கொண்ட ஆன்லைன் சேவையை கண்டறிந்து உயில் எழுத வேண்டும்.ஆன்லைனில் உயில் எழுதுபவர்கள் தங்கள் முழு பெயர்,பிறந்த தேதி,சரியான விலாசம் ஆகியவற்றை பதவி செய்ய வேண்டும்.

பிறகு login செய்து சொத்து விவரங்கள்,முதலீடுகள் பணம் சம்மந்தப்பட்டவற்றை சரியாக பதிவிட வேண்டும்.இப்படி டிஜிட்டல் முறையில் உயில் எழுதுவது பாதுகாப்பானது மற்றும் பணச்செலவை குறைக்கும் விஷயமாக உள்ளது.

உடலுறவில் எல்லை இல்லா இன்பம் பெற ஆண் மலட்டு தன்மை நீங்க.. 1 முறை இந்த ட்ரிங்கை குடியுங்கள்!!

Male Infertility: இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெரும்பாலானோருக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளது. இதனால் கருவறுதலில் தாமதம் என ஏற்பட்டு இல்லற வாழ்வு வரை பாதிப்பை சந்திக்க கூடும். அதுமட்டுமின்றி இன்றைய காலகட்டத்தில் இது ரீதியாக விவாகரத்தும் அதிகரித்துவிட்டது. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கணவர் உடலுறவில் ஆர்வம் இல்லாமல் இருப்பது எனக் கூறுகின்றனர். இதனை எல்லாம் நாம் பாரம்பரிய சித்த வைத்திய முறையில் குணப்படுத்தலாம்.

யாருக்கெல்லாம் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகும்??

பெண்ணின் கர்ப்பப்பைக்கு ஒரே ஒரு விந்தணு அனுப்புவதில் தான் இத்தனை சிரமமும். அந்த வகையில் விந்தணு குறைந்த காணப்படுவது தரம் இல்லாமல் இருப்பது இவை அனைத்திற்கும் வழி வகுக்கும்.
ஒரு சிலருக்கு தொற்று மூலமாக இதன் வீரியம் குறைந்து காணப்படும்.
இரண்டாவதாக வெரிகோஸ் பிரச்சனையாலும் இது பாதிக்கப்படும். அதன் நரம்புகள் விதைப்பையில் விரிவாக்கமடைந்து இந்த உற்பத்தியை குறைய செய்யும்.
அது மட்டுமின்றி சிலருக்கு டிஎன்ஏ ரீதியாகவும் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு விந்து வெளியேறுவதில் சிக்கலை சந்திக்க கூடும்.
இதனோடு நமது உடலில் உண்டாகும் ஆன்டிபாடிகளும் இதற்கு எதிரானவை தான். மேலும் புற்றுநோய் கட்டிகள் ஹார்மோன் பிரச்சனை என இதே போல பல காரணங்கள் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டே போகலாம்.

சித்த வைத்திய முறையில் ஆண் மலட்டுத்தன்மையை சரி செய்வது எப்படி??

தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை
தூதுவளைக் கீரை
பசலைக்கீரை
அரைக்கீரை

இவை அனைத்தும் காய்ந்தது தனித்தனியே 100 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உளுந்து 100 கிராம்
சிறு பருப்பு 100 கிராம்
கொண்டைக்கடலை 100 கிராம்
பச்சரிசி 1 கிலோ
ஏலக்காய் 5 கிராம்
மிளகு 10 கிராம்

ஆண் மலட்டு தன்மையை நீக்கும் சத்துமாவு செய்யும் முறை:

முதலில் மிக்ஸி ஜாரில் காய்ந்து உள்ள கீரைகளை தனித்தனி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது நன்றாக அறைந்ததும் எடுத்து வைத்துள்ள பருப்பு வகைகள் ஏலக்காய் மிளகு உள்ளிட்டவற்றை சேர்த்து அரைக்க வேண்டும்.
இந்த சத்தமாக இரண்டு டீஸ்பூன் என்று அளவு காலை மற்றும் மாலை என இரு வேளையிலும் குடித்து வர ஆண் மலட்டுத் தன்மை நீங்கும்.

உங்களுக்கு வந்திருக்கும் காய்ச்சல் கொரோனாவா டெங்குவா இன்ஃப்ளூயன்ஸா வா?? இதோ இந்த அறிகுறிகள் வெச்சு கண்டுப்பிடியுங்கள்!!

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.கொரோனா வைரஸால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர்.கொரோனா தாகத்துடன் டெங்கு,இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுகளும் அவ்வப்போது எட்டி பார்த்துவிட்டு செல்கிறது.

இந்த மூன்று நோய் பாதிப்புகளும் ஒரே அறிகுறி கொண்டவையா இதனை எப்படி வேறுபடுத்தி அறிவது இவை எதனால் பரவுகிறது என்பது குறித்த முழு விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.எந்தஒரு நோய் தொற்றாக இருந்தாலும் வெப்ப மண்டல பகுதியில் எளிதில் பரவக் கூடியவாக இருக்கிறது.

கோவிட்,இன்ஃப்ளூயன்ஸா மற்றும் டெங்கு தொற்று ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருப்பதால் நோய் தொற்று அறிவது சவாலான விஷயமாக இருக்கிறது.கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா சுவாசம் சம்பந்தப்பட்டநோய் பாதிப்பாகும்.இது ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு எளிதில் பரவக் கூடியத் தன்மை கொண்டவை.

டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவக் கூடிய பாதிப்பாகும்.இது ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவாது.வைரஸ் மூலம் பரவும் கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் 7 தினங்கள் வரை இருக்கும்.அதேபோல் டெங்கு காய்ச்சல் பாதிப்பின் அறிகுறியும் 7 நாட்கள் வரை காணப்படும்.

கொரோனா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள்:-

1.தொண்டை வலி
2.இருமல்
3.மூக்கு ஒழுகுதல்
4.சுவாசப் பிரச்சனை
5.உடல் வலி
6.தலைவலி

டெங்கு அறிகுறிகள்:

1.லேசான தலைவலி
2.ரத்தக்கசிவு
3.உடல் சோர்வு
4.கடும் தலைவலி
5.மலத்தில் இரத்தம் வெளியேறுதல்

மேலே சொல்லப்பட்டுள்ள கொரோனா இன்ஃப்ளூயன்ஸா மற்றும் டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் சிறிதும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா?? அப்போ கட்டாயம் இந்த பிரச்சனை வரும்!!

நின்று கொண்டு தண்ணீர் பருகலாமா?

தினசரி 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் அதனை அனைவரும் பின்பற்றுகிறார்கலா என்பதில் சந்தேகம்தான். அதிலும் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் பல விளைவுகளை சந்திக்க கூடும்.

தண்ணீர் குடிக்கும் போது நிற்க கூடாது என கூறுகின்றனர். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் வயிற்றுக்கு அதி வேகமாக சென்று பல்வேறு உபாதைகளை சந்திக்க நேரிடும்.

முதலாவதாக இரைப்பை குடல் பாதிப்பு:

நின்று கொண்டு தண்ணீர் அருந்தும் போது அது குடலுக்கு நேராக செல்வதால் அதன் மேற்புறம் மிகவும் பாதிப்பை சந்திக்க கூடும். இதனால் குடல் பாதை என அனைத்தும் பாதிக்கப்படும். செரிமானத்தில் பிரச்சனை உண்டாகும்.

சிறுநீரக செயலிழப்பு:

குடல் பிரச்சனைக்கு அடுத்து இருப்பது சிறுநீரக பாதிப்பு தான். நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரகங்களில் உள்ள கிருமிகளை வெளியேற்றும் செயல் முறையின் வேகம் குறைந்து விடும். சிறுநீரகம் தனது பணியை முறையாக செய்யாத பட்சத்தில் சிறுநீரக தொற்று என தொடங்கி செயலிழப்பு வரை பல நோய்களை சந்திக்க கூடும்.

மூன்றாவதாக ஆர்த்ரைடிஸ்:

நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் ஆர்த்ரிடிஸ் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றது. முன்னதாகவே மூட்டுகளில் நீர்மங்கள் சமநிலையில் இருக்கும். அதனை இவை கலைப்பதாக கூறுகின்றனர்.

நான்காவதாக நரம்பு பிரச்சனை:

நமது உடலில் சிம்பதெட்டிக் நரம்பு வேலை செய்ய ஆரம்பித்தால் இதய துடிப்பு ரத்த நாளங்கள் என அனைத்தும் வீரியமடையும். இந்த பிரச்சனையானது நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது தான் உண்டாகும். இதுவே உட்கார்ந்து தண்ணீர் குடிக்கும் போது பாரா சிம்பதெட்டிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து உடலை லேசாக வைத்துக் கொள்ள உதவும்.

உங்களின் மலம் எந்த நிறத்தில் உள்ளது!! இதோ அல்சரின் டாப் 5 அறிகுறிகள்!!

ULCER: இந்த காலகட்டத்தில் மக்கள் எடுத்துக் கொள்ளும் மாறுபட்ட உணவு பழக்கம் துரித உணவுகள் என அனைத்தும் பலவித நோய்களுக்கு வழி வகுத்து விடுகிறது. அதிலும் குறிப்பாக டயாபடீஸ் பெண்கள் சந்திக்கும் பி சி ஓ எஸ், அல்சர், சிறுநீரக கோளாறு, இவை அனைத்தும் இளம் வயதினரை பெருமளவு தாக்குகிறது.

அல்சர் என்றால் என்ன?

நமது உடலில் இரைப்பை மற்றும் சிறுகுடலானது பாதிப்பை சந்தித்தால் வயிற்றுப்புண் உண்டாகிவிடும். அதாவது வயிற்று உட்பகுதியில் பாதிப்பை சந்திக்கும் போது இரைப்பை புண் உண்டாகிறது. தினசரி எடுத்துக் கொள்ளும் உணவை அரைக்க ஒரு அமிலம் உண்டாகும். அதன் வீரியம் அதிகரிப்பதிலிருந்து தங்களை பாதுகாக்க ஒரு வித எதிர்ப்பு சக்தியாக செயல்படும் திரவமானது அதன் செயல்பாட்டை குறைக்கும் பட்சத்தில் அல்சர் ஏற்படுகிறது.

அல்சரி முக்கிய ஐந்து அறிகுறிகள்:

முதலாவதாக அல்சர் பிரச்சனை இருப்பவர்களுக்கு எப்பொழுதும் மந்தமாக இருப்பது போலவே காணப்படும். பசியின்மை வயிறு உப்பசம் அதுமட்டுமின்றி வயிற்று எரிச்சல் போன்றவை இருக்கும்.

இரண்டாவதாக அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும். உங்களது மார்பில் நடுப்பகுதியில் எரிச்சல் காணப்படும். இந்த வயிற்று எரிச்சலானது உணவுக் குழாய் பகுதிக்கு வயிற்றின் அமிலம் செல்வதால் ஏற்படுகிறது.

மூன்றாவதாக குமட்டல் காணப்படும். எந்த உணவு சாப்பிட்டாலும் குமட்டல் போல் உணர்வு அல்லது ஒரு சிலருக்கு வாந்தி இருக்கும்.

நான்காவதாக மலத்தின் நிறத்தில் மாற்றம் உண்டாகும். உங்களுக்கு கருப்பு நிறத்தில் மலம் வெளியேறினால், அது செரிமான ரத்தம் என கூறுகின்றனர். இதை வைத்து வயிற்று அல்சர் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஐந்தாவதாக நமது உடலில் அல்சர் இருக்கும் பட்சத்தில் செரிமானத்தில் ஏற்படுத்தும் பிரச்சனையால் அதிகப்படியான எடை இழப்பு உண்டாகும்.

மீன் உடம்பை விட கண் மற்றும் தலை தான் பெஸ்ட்!! வாழ்நாள் முழுவதும்”Heart Attack”வராது!!

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

மக்கள் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்தாலே பலவித நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் உணவு பெரியவர்கள் எடுத்துக் கொள்ளும் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி தவிர்த்து கடல் சார் உணவுகளில் தான் பன்மடங்கு பலனை காண முடியும். ஏனென்றால் மீனில் தான் சாச்சுரேட் என்ற கொழுப்பு இருக்கிறது.

இதனால் மற்ற இறைச்சி சாப்பிட்டால் உடல் எடை போடக்கூடும். ஆனால் மீன் அப்படி இல்லை. இதில் சாச்சுரெட் அமிலம் உள்ளதால் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளும். மேற்கொண்டு ஒமேகா 3 இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் முதல் குழந்தைகள் என பலரும் இதனை அதிகமாக உட்கொள்ளலாம். இதனையெல்லாம் தவிர்த்து, நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்திற்கும் மீன் உகந்தது.

எப்படி சொல்கிறேன் என்றால், மீனை உண்பதால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை, தைராய்டு பாதிப்பு உள்ளிட்டவை குணமாகும். மேற்கொண்டு வாரத்திற்கு ஒரு முறை என்று எடுத்துக் கொண்டால் மூளைக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி மீன் எண்ணெயில் கூட பலவித சத்துக்கள் உள்ளது. குறிப்பாக ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இந்த மீன் எண்ணெய் பயன்படுகிறது. சருமம் பொலிவாகவும் அழகாகவும் இருக்க பெண்கள் மீன் எண்ணெய்யை உபயோகித்து சமைக்கலாம்.

மீன் கண் மற்றும் மீன் தலை பயன்கள்:

பலரும் மீன் சாப்பிட்டாலும் அதனின் கண் மற்றும் தலைப்பகுதியை விட்டு விடுகின்றனர். ஆனால் இதில் தான் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. குறிப்பாக மீன் கண் மற்றும் அதன் தலையை சாப்பிடுபவர்களுக்கு இதய சம்பந்தமான எந்த பிரச்சனையும் வராதாம். மாரடைப்பைக் கூட தடுக்க வழி வகுக்குமாம். மேலும் கண்பார்வையும் மேம்படும் என கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இதனை ஒரு சில ஆய்வுகளில் உண்மை என்றும் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் மாம்பழம் சாப்பிடலாமா? அதிகம் சாப்பிட்டால் சூடு பிடித்துக்கொள்ளுமா!!

பெரியவர்கள்,குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று மாம்பழம்.இது கோடை காலத்தில் அதிகம் விளைச்சலுக்கு வருகிறது.மல்கோவா,அல்போன்சா,பங்கனப்பள்ளி என்று பல ரக மாம்பழங்கள் இருக்கின்றது.

மாம்பழத்தில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள்:

**இரும்புச்சத்து
**நார்ச்சத்து
**காரோட்டினாய்டு
**வைட்டமின் ஏ
**வைட்டமின் பி
**வைட்டமின் சி
**பொட்டாசியம்
**புரதம்
**சர்க்கரை சத்து

குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கலாமா?

சில குழந்தைகள் மாம்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுக்கலாமா என்ற சந்தேகம் சில குழந்தைகளுக்கு இருக்கின்றது.நன்கு பழுத்த மாம்பழத்தை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

மாம்பழம் சாப்பிடும் குழந்தைகளுக்கு சருமம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.அதேபோல் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த மாம்பழம் சாப்பிடலாம்.

மாம்பழத்தில் இருக்கின்ற வைட்டமின் ஏ கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.மாம்பழத்தில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.

மாம்பழத்தில் இருக்கின்ற பொட்டாசியம் சத்து இரத்த அழுத்த பாதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.இரத்த சோகை வராமல் இருக்க மாம்பழம் சாப்பிடலாம்.ஆறு மாதமான குழந்தைகளுக்கு மாம்பழம் சாப்பிடக் கொடுக்கலாம்.இருப்பினும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

பழுக்காத மாம்பழம் குழந்தைகளுக்கு செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும்.மாம்பழத் தோல் குழந்தைகளின் செரிமான மண்டலத்தை பாதிக்கச் செய்துவிடும்.

சில குழந்தைகளுக்கு மாம்பழம் அலர்ஜி பிரச்சனையை ஏற்படுத்தும்.ஒவ்வாமை பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு மாம்பழம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

திமுக அரசை நெருக்கடியில் தள்ள பாமக திட்டம்! இரட்டை சிக்கலில் ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அடித்தளத்தை அமைக்கும் நோக்கில் பாமக மீண்டும் வன்னியர் உள்இடஒதுக்கீட்டு போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக திமுக அரசு பல திசைகளிலும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

பாமகவில் உள்கட்சி சிக்கல்கள் இருப்பதாக பேசப்பட்டாலும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முக்கிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாமக தயாராகியுள்ளது.

பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா?

தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயம், சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களே. சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் மேடையேற்ற முயற்சித்தாலும், அது நடக்கவில்லை. அவர் அதிமுகவுடனான கூட்டணியை மட்டுமே உறுதி செய்துவிட்டு புறப்பட்டார்.

இந்நிலையில், இதற்கு முன் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து செயல்பட்ட பாமக, தற்போது எந்த கூட்டணியில் இணையப்போகும் என்பதை தெளிவுபடுத்தவில்லை. திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதாலேயே, பாமக NDAவா, இல்லையெனில் தனியே தானா என்பது குறித்து யூகங்கள் எழுகின்றன.

இந்நிலையில் ராமதாஸ் அதிமுகவுடன் செல்ல விருப்பமுள்ளதாகவும், அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன் செல்ல விரும்புவதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து தற்போது அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், பாமக எப்போது வேண்டுமானாலும் அதனை உறுதிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 – தனி அணியா! ராமதாஸ் திட்டம் என்ன?

ஆனால் பாமகவில் இருந்து வரும் தகவல்களின்படி, ராமதாஸ் தனித்து போட்டியிடும் பிளானில் இருப்பதாக கூறப்படுகிறது. 2021 ல் தனித்து போட்டியிட்ட பாமக 4 சட்டமன்ற இடங்களை பெற்றது. ஆனால் கூட்டணியில் சென்றபோது 5 இடங்களையே பெற்றது. எனவே தனியே போட்டியிட்டு கணிசமான வெற்றியை காணலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வன்னியர் உள் இடஒதுக்கீட்டு போராட்டம் மீண்டும்?

2021 தேர்தலுக்கு முன்பு பாமக வன்னியர்களுக்காக 10.5% உள்இடஒதுக்கீட்டை கோரி போராட்டம் நடத்தியது. அப்போது சட்டமன்ற தேர்தல் காலம் என்பதால் ஆளும் அதிமுகவுக்கு இது பலத்த நெருக்கடியை உண்டாக்கியது. இதனால் அதிமுக அரசு உடனடியாக அந்த இடஒதுக்கீட்டை அறிவித்தது.

2021 தேர்தலில் இதனால் அதிமுக-பாமக கூட்டணிக்கு வன்னியர் வாக்குகள் திரண்டன. ஆனால் அந்த சட்டம் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. 2026 தேர்தலை முன்னிட்டு பாமக மீண்டும் இந்த விவகாரத்தை எடுத்து திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த வன்னியர் உள்இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதை அவ்வப்போது பாமகவினர் விமர்சித்து வந்துள்ளனர்.

இந்த உள்இட ஒதுக்கீட்டை எதிர்த்து தென் மாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்துக்கு எதிராகவும், வட மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகமாக அனுபவித்து கொண்டிருப்பதாகவும் திமுக தலைவர்கள் பேசியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு மூலம் உள்இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட பின்புலமாக திமுக வழக்கறிஞர்கள் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரங்களை மக்கள் மத்தியில் எடுத்து சென்றால் வட மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை கொண்ட திமுகவுக்கு பெருத்த அடி விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை சிக்கலில் திமுக?

இந்நிலையில் பாமக போராட்டத்தை அறிவித்தால் அதை  திமுக அரசு எப்படி கையாளும் என்பது முக்கியம். போராட்டத்தால் சாலை மறியல் உள்ளிட்டவைகளால் பொது மக்கள் பாதிக்கப்பட்டால் அது திமுகவுக்கு எதிராகப் போகலாம்; அதேபோல் போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் திமுக அரசு வன்னியர்களுக்கு எதிரானது என்ற விமர்சனத்தை பாமக ஏற்படுத்தும்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குழுக்கள் எதிர்ப்பு?

மேலும், வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கினால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிற சமூகங்களின் எதிர்ப்பு உருவாகும். எனவே, எந்தவிதமாக பார்த்தாலும் இந்த விவகாரத்தில் பாமக, திமுக அரசுக்கு கடுமையான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தவுள்ளது என்பது தெளிவாகிறது.

அதே நேரத்தில் இதற்கு திமுக அரசு எவ்வாறு பதிலடி கொடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவில் ஜெயக்குமாருக்கு எம்.பி. சீட் கிடைக்குமா?

மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்.பி. இடம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இதில் சுழற்சி முறையில் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஆறு எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிவடைகிறது. அதன்படி, ஜூலை மாதத்துடன் திமுக எம்.பி.க்கள் வில்சன், சண்முகம், அப்துல்லா, மதிமுகவின் வைகோ, பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இந்த ஆறு இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19 அன்று தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தற்போதைய எண்ணிக்கை அடிப்படையில் திமுக கூட்டணிக்கு நான்கு இடங்களும், அதிமுக கூட்டணிக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதில் அதிமுகவுக்கு கிடைக்கும் இரண்டு இடங்களுக்கு யார் போட்டியிடுவார்கள் என்பது குறித்த வட்டாரங்களில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் நிலவுகின்றன. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு இதில் ஒரு இடம் வழங்கப்படலாம் என்ற கருத்துக்கள் எழுகின்றன. அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊடகங்களில் கட்சியின் முக்கிய பேச்சாளராக ஜெயக்குமார் செயல்பட்டிருந்தார். ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் தோல்வியடைந்ததால் மாநிலங்களவை இடம் கேட்டும் அவருக்கு அப்போது கிடைக்கவில்லை.

2022 ஆம் ஆண்டிலும் அவர் முயற்சி செய்தாலும், ஓபிஎஸ் ஆதிக்கத்தால் அவரது ஆதரவாளர் மட்டும் எம்.பி. ஆனார். இதனையடுத்து, ஒற்றைத்தலைமை ஆதரிக்க தொடங்கி அதிமுக பங்கில் புதிய நிலைப்பாடுகளை எடுத்தவர் ஜெயக்குமார். தற்போது மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை வகித்துக் கொண்டிருக்கும் அவர், பாஜகவுடன் கூட்டணி நிலைப்பட்டால் ஏற்பட்ட பாதிப்பால் ஏமாற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவுடனான கூட்டணி காரணமாக தான் ராயபுரத்தில் தோல்வியடைந்ததாகவும், அதனால் ஊடகங்களை தவிர்த்து வந்ததாகவும் கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் மாநிலங்களவையில் அவருக்கு ஒரு இடம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயக்குமாரின் எதிர்கால அரசியல் வடசென்னை மையமாகவே தொடரும் என்றும், அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்பதால், மாநிலங்களவை இடத்தில் நீண்ட காலம் இருக்க வாய்ப்பு குறைவாக இருக்கலாம். எனவே, அவருக்கு எம்.பி. சீட் அளிக்க வாய்ப்பு என்பது 50–50 என அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகின்றது.