சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு! அடுத்து புதுவைக்கு செல்லவுள்ளதாக தகவல்!!

சென்னைக்கு வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு! அடுத்து புதுவைக்கு செல்லவுள்ளதாக தகவல்!

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் சென்னைக்கு வரவுள்ளதாகவும் பிறகு புதுவைக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுவை முதல்வர் ரங்கசாமி அவர்கள் புதுவையில் சில நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வருகை தரவுள்ளதாக அறிவித்தார். ஆனால் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களின் புதுவை பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் ஜூன் 15ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூன் 15ம் தேதி தமிழகம் வரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் சென்னையில் நடக்கும் பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பிறகு ஜூன் 16ம் தேதி புதுவைக்கு செல்லும் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் அரசு சித்த மருத்துவ கல்லூரி அடிக்கல் விழாவில் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இதன் பின்னர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுத்த பிறகு டெல்லிக்கு செல்லவுள்தாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளது.