ராகுல் காந்தியின் வேலை பிரதமர் மோடியை திட்டுவதுதான்! மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து!!

0
151
#image_title

ராகுல் காந்தியின் வேலை பிரதமர் மோடியை திட்டுவதுதான்! மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து!

இந்தியாவக இருந்தாலும் சரி வெளிநாடாக இருந்தாலும் சரி இராகுல் காந்தி அவர்களின் ஒரே வேலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை திட்டுவதுதான் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான இராகுல் காந்தி அவர்கள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முன் உரையாற்றினார். இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு அருகில் கடவுளே உட்கார்ந்தாலும் அவர்(பிரதமர் மோடி) கடவுளுக்கே பாடம் எடுப்பார். வேலை வாய்ப்பு, விளைவாசி உயர்வுகள் போன்ற அத்தியாவசிய பிரச்சனைகளை பிரதமர் மோடி அரசு எதிர்கொள்ளவும் புரிந்து கொள்ளவும் மறுக்கின்றது. செங்கோல் மனோபாவம் கொண்டவர்களிடம் நாம் என்ன சொன்னாலும் புரியாது” என்று பேசினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி அவர்களின் இந்த பேச்சை பற்றி மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ அவர்கள் “இந்தியாவாக இருந்தாலும் சரி வெளிநாடாக இருந்தாலும் சரி இராகுல் காந்தி அவருகளுக்கு இருக்கும் ஒரே வேலை பிரதமர் மோடி அவர்களை திட்டுவதுதான். பிரதமர் மோடியை இராகுல் காந்தி அவர்கள் ஏன்.இந்த அளவுக்கு வெறுக்கிறார்? நாட்டுக்கு எதிராக ஏன் இவ்வாறு பேசிகிறார்? என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பொதுநபர் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு இந்திய நாடு அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் வழங்கியது” என்று கூறியுள்ளார்.

மேலும் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ அவர்கள் “பொதுமக்களில் இருந்து வந்த ஒருவர் நாட்டின் பிரதமராக ஆகிவிட்டார் என்பதை இராகுல் காந்தியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவருடைய பேச்சையும் பேசும் விதத்தையும் யாரும் தீவிரத்துடன் கணக்கித் எடுத்துக் கொள்ளவில்லை” என்று மத்திய மந்திரி கிரண் ரிஜீஜூ கூறினார்.