தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள். எதிர்பாராமல் ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு அல்லது சுப காரிய செலவுகள் வந்து சேரும்.

குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சஞ்சலத்துடன் காணப்படுவீர்கள். வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகள் அணிவகுத்து காணப்படும். உத்தியோகத்தில் பணியிடமாறுதல் சிலருக்கு உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணம் மேற்கொண்டு மகிழ்வார்கள். கலைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலைகள் உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்களுக்கு பயணங்களை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன ஆடை அணிந்து குரு பகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.