மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா!

0
106
#image_title

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 18ல் துவங்கி வெள்ளி அதாவது செப்டம்பர் 22 வரை நடைபெற இருக்கிறது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு கூட்டத்தில் முதல் மசோதாவாக லோக்சபா மற்றும் சட்டசபையில் பெண்களின் உரிமையை நிலைநாட்ட 33% இடஒதுக்கீடு குறித்த மசோதா நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.மத்திய சட்ட அமைச்சர் ‘அர்ஜுன் ராம் மேக்வால்’ இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.மகளிருக்கான 33% இடஒதுக்கீடு சட்டத்திற்கு ‘நாரி ஷக்தி வந்தன் அதினியம்’ (Nari Shakti Vandan Adhiniyam) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில் இதற்கு நாட்டு மக்களிடையே சிறப்பான ஆதரவு கிடைத்து வருகிறது.

கடந்த 1996 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா உறுப்பினர்களின் ஆதரவின்றி பலமுறை தொலைவியுற்ற நிலையில் தற்பொழுது நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளின் ஆதரவால் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது.அதாவது இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும்,எதிராக 2 வாக்குகளும் பதிவாகி நிறைவேற்றப் பட்டுள்ளது.இந்நிலையில் இந்த மசோதா தற்பொழுது நிறைவேற்றப் பட்டாலும் வரும் 2029 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் அமலுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

நாட்டில் உள்ள தொகுதிகள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் தான் இந்த மசோதா சட்டமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மசோதாவுக்கு ஆதரவு கிடைத்து வரும் அதேவேளையில் விமர்சனமும் எழுந்து இருக்கிறது.இந்த மசோதா இப்பொழுது நிறைவேற்றப்பட காரணம் வரவுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தான்.தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் பாஜக அரசு இதனை கொண்டு வந்துள்ளது.

எத்தனையோ மசோதாக்களை அறிமுகப்படுத்திஅவை உடனடியாக சட்டமாக இயற்றப்பட்டுள்ள நிலையில் இந்த 33% இட ஒதுக்கீடு மசோதாவை மட்டும் சட்டமாக இயற்ற ஏன் அத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இடஒதுக்கீடு குறித்த விவாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து பேசி இருக்கிறார்.இந்த இடஒதுக்கீடு மசோதா தேர்தல் லாபத்திற்காக கொண்டு வரப்பட வில்லை.பெண்களுக்கு உரிமை மற்றும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.தொடர்ந்து பேசிய அவர் ஓபிசி மற்றும் இஸ்லாமிய பெண்களுக்கு இட ஒதுக்கீட்டினால் பயன் இல்லை என்று சிலர் மசோதாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை.இந்நிலையில் இந்த மசோதாவுக்கு ஆதரவு கிடைக்காவிட்டால் எப்படி நிறைவேற்ற முடியும் என்று கூறினார்.