தேவா ரூமிற்கு பெண்ணை அனுப்பிய சத்யராஜ்? – வெளியான ரகசியத் தகவல் !!

0
29
#image_title

தேவா ரூமிற்கு பெண்ணை அனுப்பிய சத்யராஜ்? – வெளியான ரகசியத் தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளரும், பாடகருமான தேவநேசன் சொக்கலிங்கம் என்ற தேவா. இவர் கனா பாட்டுக்கு பெயர் போனவர். கடந்த 36 ஆண்டுகளாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில, 400க்கும் மேற்பட்ட படங்களில் இவர் இசையமைத்துள்ளார்.

சிறு வயது முதலே தேவாவிற்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. சந்திரபோஸுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். லண்டனில் உள்ள டிரினிட்டி இசைக் கல்லூரியில் மேற்கத்திய இசைப் பாடத்தை முடித்திருக்கிறார்.

இளையராஜாவிற்கும், தேவாவிற்குமே கடுமையான போட்டி நிலவியது. கிட்டத்தட்ட ரஜினியின் எல்லா பட டைட்டிலிலும் இவர் இசையே ஒலித்தது.

ஒரு சேனலுக்கு இசையமைப்பாளர் தேவா பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் மனம் விட்டு கலகலப்பாக பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

இயக்குநர் மணிவண்ணன் ‘புது மனிதர்’ படத்தை இயக்கினார். அவருடைய படங்களுக்கு பாடல் உருவாக்குவதே ரொம்ப சுலவபம். அவர் வெளியூருக்கு சென்றால், எங்களையும் அழைத்துக் கொண்டு போவார். நானும், என் குழுவையும் அழைத்துச் செல்வேன்.

ஒருமுறை சில்வர் பீச்சில் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, உங்களுக்கு என்னென்ன பாட்டு தோன்றுகிறதோ அதை ஒரு கேசட்டில் பதிவு பண்ணி வச்சுக்கோங்க… பின்னர் யூஸ் ஆகும் என்று கிண்லடிப்பார். அந்த நேரத்தில் அவருடன் நடிகர் சத்யராஜ் இருந்தார். ஒருமுறை நாங்கள் ஏற்காடுக்கு சென்றோம். போகும்போது சத்யராஜ் சில சில்மிஷங்கள் செய்வார். கிண்டலடித்து எங்களை கொன்றுவிடுவார்.

நான் ரூமில் தனியாக இருக்கும்போது, சத்யராஜ் ஏதாவது ஒரு பெண்ணிடம் காபி கொடுத்து என் ரூமிற்கு அனுப்பி விட்டு, ஜன்னல் ஓரத்தில் இருந்து எட்டிப்பார்ப்பார். சத்யராஜ் சில்மிஷம் எனக்கு நன்றாகவே தெரியும். அதனால், ஏதாவது ஒரு பெண் என் ரூமிற்கு வந்தால், நான் வெளியே வந்துவிடுவேன். உடனே சத்யராஜ் அதைப் பார்த்து தப்பிச்சிட்டீங்க சார் என்று கலாய்ப்பார். எப்போதுமே மணிவண்ணனுடன் வேலை செய்யும் போது 75 சதவீதம் அரட்டைதான் இருக்கும். 25 சதவீதம் தான் வேலை செய்வோம். எவ்வளவு காமெடியாக இருந்தாலும், வேலைகள் சீக்கிரம் நடந்து விடும் என்று மனம் திறந்து பேசினார்.

 

author avatar
Gayathri