தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!!

0
324
#image_title

தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!!

செப்டம்பர் 30ல் இருந்து தொடர்பு விடுமுறை நாட்கள் வருவதால் தாம்பரம் முதல் திருச்சி வரை சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த வாரம் இறுதியில் இருந்து அதாவது செப்டம்பர் 30(சனிக்கிழமை), அக்டோபர் 1(ஞாயிற்றுக் கிழமை), அக்டோபர் 2ம் தேதி(காந்தி ஜெயந்தி – திங்கட்கிழமை) என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் வருகின்றது. இதையடுத்து தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் காரணமாக திருச்சி மற்றும் தாம்பரம் இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே “வரும் செப்டம்பர் 30ம் தேதி இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 6.10 மணிக்கு திருச்சியை சென்று அடையும்.

அதே போல திருச்சியில் இருந்து அக்டோபர் 1ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலையில் 6.10 மணிக்கு தாம்பரத்திற்கு வந்து சேரும்” என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று(செப்டம்பர்28) தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.