தொகுப்பாளினி அளித்த புகாரால் பிரபல நடிகருக்கு புதிய படங்களில் நடிக்க தடை!

0
185

தொகுப்பாளினி அளித்த புகாரால் பிரபல நடிகருக்கு புதிய படங்களில் நடிக்க தடை!

மலையாள நடிகரான ஸ்ரீநாத் பாசி சமீபத்தில் யுட்யூப் தொகுப்பாளினியிடம் முறையற்ற வார்த்தைகளை பேசியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மலையாள சினிமாவில் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல தரமான படங்களில் நடித்த ஸ்ரீநாத் இப்போது கைதாகி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நேர்காணலின் போது நேர்காணல் செய்த பெண்ணை அவமதித்ததாக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியை கேரள போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீநாத் தனது சமீபத்திய படமான சட்டம்பியை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்த சர்ச்சையில் சிக்கினார். யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்தபோது, ​​பெண் தொகுப்பாளினியின் கேள்வியால் ஸ்ரீநாத் தனது அமைதியை இழந்துள்ளார்.

நேர்காணல் செய்த அந்த பெண் ஸ்ரீநாத்திடம் ‘உங்களுடன் நடித்த நடிகர்களை அவர்களின் ‘ரவுடித்தனத்தின்’ அடிப்படையில் தரவரிசைப்படுத்துமாறு கேட்டபோது கோபமாகி வசைபாடியதாக சொல்லப்படுகிறது. இந்த கேள்வி அவரைக் கோபப்படுத்த ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதாக குற்றச்சாட்டை அந்த யுட்யூப் சேனல் வைத்தது. இதையடுத்து ஸ்ரீநாத் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட அந்த யுட்யூப் சேனல் நிர்வாகத்தினர் மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அளித்த புகாரின் படி ஸ்ரீநாத்துக்கு இப்போது தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களைத் தவிர புது படங்களில் அவரை யாரும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous article12 அணிகள் மோதும் டி 20 உலகக்கோப்பை… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
Next articleதிமுகவின் வாக்குறுதி! நீட் தேர்வு விவகாரம் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!