போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! 2700 சிறப்பு பேருந்துக்குள் இயக்கம் எந்த ஊருக்கு தெரியுமா?

போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பு! 2700 சிறப்பு பேருந்துக்குள் இயக்கம் எந்த ஊருக்கு தெரியுமா?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.அதனையடுத்து டிசம்பர் ஆறாம் தேதி அன்று மகா தீபம் நடைபெறுகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் அன்று நடைபெறும் மாடவீதிகளில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது,

அதனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில் மாடவீதியில் சுவாமி வீதியுலா மற்றும் தேரோட்டம் நடைபெற உள்ளது.தீபத்திருவிழா தொடங்குவதால் வழக்கமாக காவல் எல்லை தெய்வ வழிபாடு செய்யப்படும்.அந்தவகையில் நாளை எல்லை தெய்வ வழிபாடு நடைபெறவுள்ளது.

நாளை துர்கையம்மன் உற்சவம் நடைபெற உள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தீபத்திருநாள் நடைபெறுவதால் சுமார் 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் பக்கதர்களுக்கு ஏதுவாக இருக்கும் வகையில் தீபத்திருவிழாவை முன்னிட்டு 2700 சிறப்பு பேருந்துக்குள் இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. பக்தர்களின் வருகையை கணக்கிட்டு மேலும் கூடுதலாக சிறப்பு பேருந்துக்குள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.