தொடங்கியது லியோ பட வைப்!!! 30 நாட்களும் விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது!!!

0
129
#image_title

தொடங்கியது லியோ பட வைப்!!! 30 நாட்களும் விஜய் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது!!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் புதிய போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. மேலும் வரும் 30 நாட்களும் லியோ திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளி வரும் என்று லோகேஷ் கனகராஜ் அவர்கள் சைமா விருது நிகழ்ச்சியில் கூறியதில் இருந்தே ரசிகர்கள் லியோ வைபுக்குள் புகுந்து விட்டனர்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் நாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் அவர்கள் லியோ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் லியோ திரைப்படத்தை தயாரித்துள்ளார். நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

லியோ திரைப்படத்தின் முதல் சிங்கில் பாடல் வெளியான நிலையில் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் கூடிய விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நேற்று(செப்டம்பர்17) லியோ திரைப்படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவியது.

அதே போல இன்று(செப்டம்பர்18) லியோ திரைப்படத்தின் கன்னட போஸ்டர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதன்படி இன்று(செப்டம்பர்18) மாலை 6 மணிக்கு லியோ திரைப்படத்தின் கன்னட போஸ்டர் வெளியாகி இருக்கின்றது. இந்த போஸ்டர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.