பார்ட்டி, போட்டோ சூட் என கலக்கும் நடிகை ரவீனா..

0
55
#image_title

பார்ட்டி, போட்டோ சூட் என கலக்கும் நடிகை ரவீனா..

பிரபல பின்னணி குரல் கலைஞரும், நடிகையுமான ரவீனா அவர்கள் தற்போது விதவிதமான ஆடைகளில் பார்ட்டி, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படு பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

1694972180139

ரவீனா தமிழ் சினிமாவில் முக்கியமான பின்னணிக் குரல் கலைஞர் ஆவார். இவர், புகழ்பெற்ற பின்னணிக் குரல் நடிகையான ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார். இவர் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். அந்த பட்டியலை இங்கு பார்க்கலாம் :- சாட்டை – நடிகை மகிமா; 555- நடிகை மிருத்திகா; நிமிர்ந்து நில்- நடிகை அமலா பால்; கத்தி – நடிகை சமந்தா; ஐ- ஏமி சாக்சன்; பொன்னியின் செல்வன்-1 : நடிகை த்ரிஷா…

1694972191574

“ஒரு கிடாரியின் கருணை மனு” படத்தின் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்த ரவீனா, இதனைத் தொடர்ந்து காவல்துறை உங்கள் நண்பன், லவ் டுடே, மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றார். குறிப்பாக லவ் டுடே படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மாமன்னன் படத்தில் அவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது. தற்போது ரவீனா அவர்கள் விதவிதமான மாடன் மற்றும் கவர்ச்சி உடைகளில் பார்ட்டிகள் மற்றும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார். சில மூத்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்களை ரவீனா வாய்ப்பிற்காக அனுப்புவதாகவும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தற்போது ஹாட்ஸ்டார் -யில் “MY- 3” என்னும் வெப் சீரியஸில் நடிகை ஹன்சிகா நடித்துள்ளார். ரவீனா நடிகை ஹன்சிகாவுக்கு தற்போது பின்னணி குரல் பேசி உள்ளார். தொடர்ந்து விதவிதமான ஆடைகளில் போட்டோ சூட் எடுத்து, அதனை தன் சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருவதை நடிகை ரவீனா தொடர்ந்து செய்து வருகிறார்.

author avatar
Parthipan K