இந்த பாடல்களை பாடியவர் உங்கள் “தளபதி” விஜய்!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

இந்த பாடல்களை பாடியவர் உங்கள் “தளபதி” விஜய்!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக திகழும் விஜய் அவர்கள் தன் படங்களுக்கும் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் பல பாடல்களை படியுள்ளார்.இப்படி விஜய் பாடி ஹிட்டடித்த பாடல்களின் விவரம் இதோ.

1.ரசிகன்

கடந்த 1994 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘ரசிகன்’ படத்தில் விஜய்,சங்கவி,கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு ‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் “பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி விட்டா பாரு செவத்த குட்டி… ஹோய் ரெட்டு லைட்டு இங்க வந்தா குட்டு நைட்டு சொல்லும் குட்டி” என்ற பாடலை ‘இளையதளபதி’ விஜய் மற்றும் பிரபல பின்னணி பாடகி K.S.சித்ரா இணைந்து பாடினார்.இது தான் விஜய் அவர்கள் பாடி வெளிவந்த முதல் பாடலாகும்.ஆனால் ஒரு அனுபவம் வாய்ந்த சிங்கரைப் போல் பாடி அசத்தியிருப்பார்.

2.தேவா

கடந்த 1995 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘தேவா’ படத்தில் விஜய்,சுவாதி,சிவகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு ‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் “ஐய்யயோ அலமேலு ஆவின் பசும் பாலு தொட்டு புட்டா கொட்டி புடும் தேளு எப்பா” என்ற படலை விஜய் பாடியுள்ளார்.அதே படத்தில் “கோத்தகிரி குப்பம்மா கோவப்பட்ட தப்பம்மா… மாத்துமால எப்பம்மா.. மாமன்கிட்ட செப்பம்மா.. ஹோய் தென்பழநி சந்தனமே” என்ற பாடலை ‘இளையதளபதி’ விஜய் மற்றும் பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதா இணைந்து பாடினார்.

3.விஷ்ணு

கடந்த 1995 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான படம் ‘விஷ்ணு’ படத்தில் விஜய்,சங்கவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு ‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் “தொட்டாபெட்டா ரோட்டு மேல
முட்டை பரோட்டா.. நீ தொட்டு கொல்ல கோழி தரட்டா..” என்ற பாடலை விஜய் மற்றும் அவரது தாய் ஷோபா சந்திரசேகர் இணைந்து பாடினார்.

4.கோயம்பத்தூர் மாப்பிள்ளை

கடந்த 1996 ஆம் ஆண்டு சி.ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் விஜய்,சங்கவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் “பாம்பை பார்ட்டி ஷில்பா ஷெட்டி
லவ் பண்ணாலும் ஜாலி.. பாப்பம்பட்டி சின்ன குட்டி லவ் பண்ணாலும் ஜாலி..” என்ற பாடலை விஜய் மற்றும் ஷாகுல் ஹமீத் இணைந்து பாடினார்.

5.மாண்புமிகு மாணவன்

கடந்த 1996 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘மாண்புமிகு மாணவன்’ படத்தில் விஜய்,மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு ‘தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் “திருத்தணி போனா பட்ட பட்ட பட்ட
திருப்பதி போனா மொட்ட மொட்ட மொட்ட …படிப்புல நாங்க முட்ட முட்ட முட்ட” என்ற பாடலை விஜய் பாடினார்.

6.செல்வா

கடந்த 1996 ஆம் ஆண்டு ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான ‘செல்வா’ படத்தில் விஜய்,ரகுவரன்,சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் “சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி” என்ற பாடலை விஜய் பாடினார்.

7.காலமெல்லாம் காத்திருப்பேன்

கடந்த 1997 ஆம் ஆண்டு ஆர்.சுந்தர் ராஜன் இயக்கத்தில் வெளியான ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ படத்தில் விஜய்,டிம்பிள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் “அஞ்சா நம்பர் பஸ்சிலேறி தந்தானக்குயிலே… ஆறு முகனா பாக்கபோனேன் தந்தானக்குயிலே” என்ற பாடலை விஜய் பாடினார்.

8.ஒன்ஸ்மோர்

கடந்த 1997 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் விஜய்,சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் “ஊர்மிளா ஊர்மிளா கண்ணிலே காதலா
நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா.. உன் கண்ணம் தங்க ஆப்பிளா ஊர்மிளா.. நீ பூத்ததென்ன பூவிலா தேகம் என்ன திங்களா… கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா” என்ற பாடலை விஜய் பாடினார்.

9.காதலுக்கு மரியாதை

கடந்த 1997 ஆம் ஆண்டு இயக்குநர் பாசில் இயக்கத்தில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் விஜய்,ஷாலினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் வரும் “ஓ பேபி பேபி என் தேவ தேவி.. ஓ பேபி பேபி என் காதல் ஜோதி.. ஒரு பார்வை வீசிச் சென்றால் உலகம் விடிந்ததெங்கே.. வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததெங்கே” என்ற பாடலை விஜய் பாடினார்.

10.துள்ளித் திரிந்த காலம்

கடந்த 1987 ஆம் ஆண்டு இயக்குநர் பாலசேகரன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளித் திரிந்த காலம்’ படத்தில் வரும் “ஹே முதல் முதல் ஒரு புதுவித விடுகதை” என்ற பாடலை விஜய் பாடினார்.

11.பிரியமுடன்

கடந்த 1998 ஆம் ஆண்டு இயக்குநர் வின்செட் செல்வா இயக்கத்தில் வெளியான ‘பிரியமுடன்’ படத்தில் வரும் “மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா… மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா” என்ற பாடலை விஜய் பாடினார்.

12.நிலவே வா

கடந்த 1998 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவே வா’ படத்தில்
வரும் “நிலவே நிலவே சரிகம பதநி பாடு.. என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு.. நிலவே நிலவே சரிகம பதநி பாடு என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு” என்ற பாடலை விஜய் பாடினார்.

13.பெரியண்ணா

கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘பெரியண்ணா’ படத்தில் வரும் “நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்துதனலட்சுமி விரும்புச்சு.. நான் ரம் அடிக்கிற ஸ்டைல பாத்துராக்கம்மா விரும்புச்சு நான் கண் அடிக்கிற ஸ்டைல பாத்து கவிதா புள்ள விரும்புச்சு.. நான் சிரிச்சு பேசும் ஸ்டைல பாத்து சின்ன பொண்ணு விரும்புச்சு” மற்றும் ரோட்டுல ஒரு சின்ன பொண்ணு.. நடந்து போனாலாம்.. எதிரே வந்த பையன் அவள இடிச்சுபுட்டானாம்”
இரு பாடல்களை விஜய் பாடினார்.

14.நெஞ்சினிலே

கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சினிலே’ படத்தில் வரும் “தங்க நிறத்துக்குத்தான் தமிழ் நாட்டில் எழுத்துத் தரட்டுமா… உன் கண்ணு அழகுக்குத்தான்.. கன்னட நாட்டு வாங்கி தரட்டுமா” என்ற பாடலை விஜய் பாடினார்.

15.பிரியமானவளே

கடந்த 2000 ஆம் ஆண்டில் இயக்குநர் செல்வ பாரதி இயக்கத்தில் வெளியான ‘பிரியமானவளே’ படத்தில் வரும் “மிசிசிபி நதி குலுங்க குலுங்க மினி ஸ்கெர்ட்டு மெல்ல குதிக்க குதிக்க உனக்கு
பிடிக்குமா.. அன்பே உனக்கு பிடிக்குமா..” என்ற பாடலை விஜய் பாடினார்.

16.பத்ரி

கடந்த 2001 ஆம் ஆண்டில் இயக்குநர் அருண் பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘பத்ரி’ படத்தில் வரும் “என்னோட லைலா வராளே மெயிலா.. சிக்னலே கெடைக்கல கெடைக்கல
நெஞ்சுல கூலா ஊத்துது கோலா தாகமே அடங்கல அடங்கல..” என்ற பாடலை விஜய் பாடினார்.

17.பிரண்ட்ஸ்

கடந்த 2001 ஆம் ஆண்டில் இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ படத்தில் வரும் “ருக்கு ருக்கு ரூப்பு க்யா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா… ஷைய ஷையா ஓ ஷையா மேரே தில்லு க்யா ஹோ கயா… நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் பாடலே ஹே ஹேய்ய
ஓசையின்றி பேசிக்கொள்ள அன்சர் ஒன்று சொல்லு சொல்லு” என்ற பாடலை விஜய் பாடினார்.

18.தமிழன்

கடந்த 2002 ஆம் ஆண்டில் இயக்குநர் மஜித் இயக்கத்தில் வெளியான ‘தமிழன்’ படத்தில் வரும் “உள்ளத்தை கிள்ளாதே… கிள்ளி விட்டு செல்லாதே.. காயத்தில் முத்தம் வையப்பா..” என்ற பாடலை விஜய் பாடினார்.

19.பகவதி

கடந்த 2002 ஆம் ஆண்டில் இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான ‘பகவதி’ படத்தில் வரும் “கொக்க கோல பிரவுன் கலரு டா.. என் அக்கா பொன்னும் அதே கலரு டா.. காபியில பன்
அமுக்குடா அந்த காம்பினேஷன் ரொம்ப தூள் டா” என்ற பாடலை விஜய் பாடினார்.

20.சச்சின்

கடந்த 2005 ஆம் ஆண்டில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சச்சின்’ படத்தில் வரும் “ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD
Thousand watt bulb போல கண்ணு கூசுதேடி” என்ற பாடலை விஜய் பாடினார்.

21.துப்பாக்கி

கடந்த 2011 ஆம் ஆண்டில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தில் வரும் “கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில… இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல… யாஹூ யாஹூ பண்ணி பாத்தும் இவன போல.. எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல..” என்ற பாடலை விஜய் பாடினார்.

22.தலைவா

கடந்த 2013 ஆம் ஆண்டில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘தலைவா’ படத்தில் வரும் “வாங்கனா வணக்கங்கனா… மை சாங்க நீ கேளுங்கனா நா ஒலரல ஒலரலனா ரொம்ப
பீலிங் பீலிங்குனா ஹேய் ஆனானா உனானா உன் ஆள தேடி போவ நீ வேணாணு போனானா தேவதாசா ஆவ… அவ லேட்டா தான் நா டாடா சொல்வா.. பின்னால போவாத” என்ற பாடலை விஜய் பாடினார்.

23.ஜில்லா

கடந்த 2014 ஆம் ஆண்டில் இயக்குநர் ஆர்.டி.நேசன் இயக்கத்தில் வெளியான ‘ஜில்லா’ படத்தில் வரும் “ஏ…கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்தப் பொண்ணு.. கண்டாலேக் கிறுகேத்தும் கஞ்சா வச்சக் கண்ணு.. அந்தக் கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி.. அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதித் தாரேன்டி… முத்தம் தரியா… ஆ… ஒஹோ..” என்ற பாடலை விஜய் பாடினார்.

24.கத்தி

கடந்த 2014 ஆம் ஆண்டில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கத்தி’ படத்தில் வரும் டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு… நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு… டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு… நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…” என்ற பாடலை விஜய் பாடினார்.

25.புலி

கடந்த 2015 ஆம் ஆண்டில் இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான ‘புலி’ படத்தில் வரும் “அடி.. ஏன்டி ஏன்டி.. என்ன வாட்டுற… அடி ஏன்டி ஏன்டி.. கண்ணால் தீட்டுற… அடி ஏன்டி ஏன்டி…
நெஞ்சக் கிள்ளுற… ஹா… ஓ… அடி ஏன்டி… காதல் கடலில் தள்ளுற” என்ற பாடலை விஜய் பாடினார்.

26.தெறி

கடந்த 2016 ஆம் ஆண்டில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘தெறி’ படத்தில் வரும் “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு செல்ல குட்டி யே… என் காதல் துட்ட சேது வெச்ச
கல்ல பெட்டியே.. தொட்டு பாக்க கிட்ட வந்த மிட்டா மிரசே… உன் வெரலு பட்ட வெடிக்கும் இந்த வெள்ளப் பட்டாசே..” என்ற பாடலை விஜய் பாடினார்.

27.பைரவா

கடந்த 2017 ஆம் ஆண்டில் இயக்குநர் பரதன் இயக்கத்தில் வெளியான ‘பைரவா’ படத்தில் வரும் “பாப்பா  பாப்பா  பப்பரப்ப வா.. சும்மா வா பா வா  பா வந்தாடப்ப.. நான் உன் ஆளப்பா.. டாப்  ஆஹ்  டாப்  ஆஹ்   டான்ஸ்  ஆடப்பா” என்ற பாடலை விஜய் பாடினார்.

28.பிகில்

கடந்த 2019 ஆம் ஆண்டில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘பிகில்’ படத்தில் வரும் “நெஞ்சுக்குள்ள குடி இருக்கும் ஹேய்… நம்ம சனம் வெறித்தனம்… இன்னா இப்போ…லோக்கலுனா… நம்ம கெத்தா… ஒலாத்தனும்..” என்ற பாடலை விஜய் பாடினார்.

29.மாஸ்டர்

கடந்த 2021 ஆம் ஆண்டில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் வரும் “லெட் மீ சிங் எ குட்டி ஸ்டோரி ப்பே அட்டேன்ஷன் லிஸ்ஸன் டு மீ.. இப் யூ வான்ட் டேக் இட் ஆர் எல்ஸ் வேணாம் டென்ஷன்.. லீவ் இட் பேபி..” என்ற பாடலை விஜய் பாடினார்.

30.பீஸ்ட்

கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் வரும் “ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குரியா தெம்பா… எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா… யப்பா… ரெண்டுல ஒன்னு பாக்கலாம் நிக்குரியா தெம்பா… எப்பவும் லைஃபு திரும்பலாம் நம்புறியா நண்பா… யப்பா…” என்ற பாடலை விஜய் பாடினார்.

31.வாரிசு

கடந்த 2023 ஆம் ஆண்டில் இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் வெளியான ‘வாரிசு’ படத்தில் வரும் ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே… ஹேய் ரஞ்சிதமே.. ரஞ்சிதமே… மனச கலைக்கும் மந்திரமே… ரஞ்சிதமே ரஞ்சிதமே… உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே…” என்ற பாடலை விஜய் பாடினார்.

32.லியோ

வருகின்ற அக்டோபர் 19 அன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘லியோ’ படத்தில் வரும் “நா ரெடி தா வரவா… அண்ணன் நா இறங்கி வரவா… தேள் கொடுக்கு
சிங்கத்த சீண்டாதப்பா… எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா…” என்ற பாடலை விஜய் பாடி இருக்கிறார்.