நீங்க வைத்திருக்கும் ஒரு பவுன் 100 பவுன் ஆக மாற வேண்டுமா?? வெள்ளிக்கிழமைகளை இதை மறக்காமல் செய்யுங்கள்!!

0
137

நீங்க வைத்திருக்கும் ஒரு பவுன் 100 பவுன் ஆக மாற வேண்டுமா?? வெள்ளிக்கிழமைகளை இதை மறக்காமல் செய்யுங்கள்!!

பலருக்கும் தங்கத்தில் ஒரு பொருளை வாங்கிய பிறகு மீண்டும் மீண்டும் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் ஒரு சிலருக்கோ ஒருமுறை தங்கம் வாங்கிய பிறகு மீண்டும் வாங்குவதற்கான சந்தர்ப்பமே அமையாது. கையில் பணம் இருந்தும் அவர்களால் தங்கம் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க முடியாமல் போகும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால் உங்களின் வீட்டில் தங்க மழை பொழியும்.

வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை தினங்களில் உங்களது உங்களது பூஜை அறையை பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். மாலை நேரத்தில் விளக்கு ஏற்றுவதற்கு முன் இந்த பரிகாரத்தையும் சேர்த்து செய்ய வேண்டும். இதற்கு செம்பினால் ஆன ஒரு சின்ன சொம்பு அல்லது சின்ன கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு தங்கத்தை போட வேண்டும்.

நீங்கள் பயன்படுத்தும் திருகாணியாக இருந்தாலும் கூட அதில் போடலாம். அந்த தங்கத்தை மஞ்சள் தண்ணீரால் கழுவி விட்டு அந்த செம்பு பாத்திரத்தில் போட வேண்டும். அத்துடன் நாம் குடிக்கும் நல்ல தண்ணீர், ஏலக்காய் ,சிறிதளவு பச்சை கற்பூரம், கிராம்பு சிறிதளவு ஜவ்வாது மற்றும் பன்னீர் சேர்க்க வேண்டும்.

வாசனை நிறைந்த தண்ணீராக மாற்றி அதனை உங்களது பூஜை அறையில் வைக்க வேண்டும். பிறகு தங்கம் சேர வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் அந்தத் தண்ணீர் பூஜை அறையில் உள்ளே இருக்க வேண்டும். அடுத்த நாள் சனிக்கிழமை அந்த தண்ணீரில் உள்ள நகையை எடுத்து நகைகள் வைக்கும் பெட்டியினுள் வைத்து விட வேண்டும்.

நீங்கள் போட்டிருக்கும் நகையை இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தி இருந்தாலும் அதனை சிறிது நேரத்திற்கு பெட்டியினுள் வைத்து அதன் பிறகு எடுத்துப் போட்டுக் கொள்ளலாம். வாரம் ஒரு முறை இவ்வாறு பூஜை அறையில் தங்கத்தை வைத்து வழிபட தங்கம் வாங்குவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கும். நல்ல பலனை அடைவீர்கள்.