ட்ரெயின் பயணிகள் கவனத்திற்கு!! இந்த ஊருக்கு இடையே செல்லும் ரயில்கள் இயங்காது!!

0
53

ட்ரெயின் பயணிகள் கவனத்திற்கு!! இந்த ஊருக்கு இடையே செல்லும் ரயில்கள் இயங்காது!!

தற்பொழுது பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு இடையான ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு இரவு 11.55 மணிக்கு கிளம்பி காலையில் 6.10 மணிக்கு சென்றடையும்.

தற்பொழுது பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் நவம்பர் 30 முதல் டிசம்பர் இரண்டாம் தேதி வரை இந்த ரயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளனர். அதேபோல சேலத்தில் இருந்து இரவு 9:30 மணிக்கு சென்னைக்கு செல்லும் ரயில் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளனர்.

அதேபோல சென்னை எம்ஜிஆர் சென்டரில் இருந்து கோவைக்கு மதியம் 2:30 மணிக்கு செல்லும் ரயில் சேவை டிசம்பர் மூன்றாம் தேதி வரை ரத்து செய்துள்ளனர்.

அதே எம்ஜிஆர் சென்டரில் காலை 6 10 ரயில் கிளம்பி மதிய வேலை 3.15 மணிக்கு சென்றடையும். அவ்வகையில் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் டிசம்பர் மூன்றாம் தேதி வரை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.