திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு!

MK Stalin With Rahul Gandhi-News4 Tamil- Latest Political News in Tamil

திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய அறிவாலயத்திலிருந்து அழைப்பு! 2021 சட்டமன்ற தேர்தல் தேதியை ஏப்ரல் 6 என தேர்தல் ஆணையம் அறிவித்ததால் தமிழகத்திலுள்ள பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகளை நடத்தி கொண்டு வருகிறது. அதிலும் முக்கியமாக அதிமுக கூட்டணியில் பாமகவினர் கேட்ட வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீடு நிலுவையில் இருந்த நிலையில் இரு நாள்களுக்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் … Read more

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செய்து முடித்த அதிமுக! கட்டளையிட்ட மருத்துவர் ராமதாஸ்!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தந்தவர்கள் அதன் காரணமாக, வெற்றி பெற்றார்கள் என்று தெரிவிக்கும் அளவிற்கு அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக எல்லா வன்னியர் சமூக மக்களும் பணி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். வன்னியர்களின் வெகு கால கோரிக்கையான இட ஒதுக்கீடு கோரிக்கையை அதிமுக நிறைவேற்றி இருக்கின்ற நிலையில், மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். வன்னியர் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற மிக நீண்ட கால கோரிக்கையை … Read more

தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி! மாநாட்டை ஒத்திவைத்த எதிர்க்கட்சி!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை முதல் கட்சியாக பெறத்தொடங்கியது திமுக. அந்த விதத்தில் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் விருப்பமானவை கொடுத்திருக்கிறார்கள் ஏராளமானோர். இந்த நிலையில், ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த கட்சியின் சார்பாக போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தவர்களுக்கு வேட்பாளர்களின் நேர்காணல் குறித்த அறிவிப்பை திமுக வெளியிட்டிருக்கிறது. வேட்புமனு கொடுத்தவர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் … Read more

சட்டசபையில் கண்ணீர் விட்ட அமைச்சர்!

மருத்துவமனையிலிருந்து மறுபிறவியில் வந்திருக்கிறேன் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டசபையில் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இருக்கின்ற கலைவாணர் அரங்கில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. இதில் சட்டசபை விதி எண் 110 இன் கீழ் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன் மற்றும் நகை கடன் அதோடு மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன் போன்றவற்றை தள்ளுபடி செய்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில், பிப்ரவரி மாதம் 27 … Read more

எடப்பாடி காட்டிய அதிரடி! தெரிந்துதான் செய்தாரா?

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பரபரப்பு தொற்றிக்கொண்டது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக சட்டசபையில் அறிவித்த பல அதிரடியான அறிவிப்புகள் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமடைய செய்திருக்கிறது. அதேபோல தமிழ்நாட்டிலேயே பெரும்பான்மையாக இருக்கும் வன்னிய சமூக மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனியான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வெகு காலமாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுகவின் ஆட்சி காலத்தில் … Read more

தொகுதி பங்கீடு! முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்த முக்கிய கட்சிகள்!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அந்தவிதத்தில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் ஆரம்பமானது. சென்னை பசுமை வழிச்சாலை பகுதியில் இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் … Read more

தமிழகத்தில் அடுத்த பரபரப்பு கமல்ஹாசனுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு! உருவாகிறதா மூன்றாவது அணி!

சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும், தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்கள். இந்நிலையில், அதிமுகவின் கூட்டணியிலிருந்து சமத்துவ மக்கள் கட்சியின் திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சியில் வெளியே வந்து புதிய கூட்டணியை உருவாக்கியது. எங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் சரத்குமார் மற்றும் ரவி பச்சமுத்து போன்றோர் தெரிவித்திருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில், மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் … Read more

தேர்வின்றி தேர்ச்சி! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

கொரோனா காரணமாக, சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனைத்தொடர்ந்து தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பள்ளியில் எதுவும் செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், அண்மையில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும் மாணவர்கள் இணையவழி மூலமாகவே வகுப்பில் பங்கேற்று வந்தார்கள். அவர்கள் இணையதளம் மூலமாக சரியாக கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக, அவர்களுக்கான பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஒன்பது, பத்து மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் தேர்வு … Read more

தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்! அவதியில் மக்கள்!

ஊதிய உயர்வு மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசின் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு போக்குவரத்து கழகத்தின் ஊழியர்கள் சார்பாக நடத்தப்படும் இந்த போராட்டமானது மூன்றாவது தினமாக தொடர்ந்து வருகிறது. போராட்டம் தொடர்ந்தாலும் கூட கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து துறை செயலாளர் அல்லது அதிகாரிகளோ எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. வேலை நிறுத்தம் காரணமாக, தமிழக மக்கள் … Read more

தொடங்கியது பேச்சுவார்த்தை! விரைவில் தொகுதிப் பங்கீடு!

தமிழ்நாட்டில் தேர்தல் விறுவிறுப்பு ஆரம்பமாகிவிட்டது இதுவரையில் ஓரளவிற்கு இருந்த தேர்தலுக்காக வேலைகள் இனி வேகம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.ஆகவே அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. என்னும் அரசியல் கட்சிகளில் மீதம் இருப்பது தொகுதிப்பங்கீடு மற்றும் வேட்ப்பாளர் அறிவிப்பு மட்டுமே என்று சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிருஷ்ணன் ரெட்டி மற்றும் சி.டி.ரவி போன்றோர் தமிழக முதல்வர் … Read more