ஆண்மை மலட்டுத்தன்மை குணமாக வேண்டுமா!! இந்த ஒரு லேகியம் போதும்!!

Photo of author

By Rupa

ஆண்மை மலட்டுத்தன்மை குணமாக வேண்டுமா!! இந்த ஒரு லேகியம் போதும்!!
ஆண்மைகுறைவு, மலட்டுத் தன்மை போன்ற பிரச்சனைகளில் இருந்து குணமாக பல விதமான சிகிச்சைகளும், மருந்து மாத்திரைகளையும் எடுத்திருப்போம். எதுவும் உங்களுக்கு பலன் தந்திருக்காது. இந்த பதிவில் அந்த பிரச்சனைகளை சரிசெய்ய என்ன மருந்து பயன்படுத்த வேண்டும் எவ்வாறு பயன்படுத்துவது என்றும் தெரிந்து கொள்வோம்.
ஆண்மை தன்மை குறைபாடு, மலட்டுத் தன்மை போன்ற பிரச்சனைகளை நாம் வெட்டி வேரை வைத்து குணமாக்கலாம். இந்த வெட்டி வேர் பல விதமான உடல்நலக் கோளாறுகளை சரி செய்ய உதவுகின்றது. இதை எவ்வாறு மருந்தாக பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
* பெண்கள் மற்றும் ஆண்கள் 13 வயது கடந்த பின்னர் பெண்களுக்கு ஈஸ்ட்ரோ ஜென்னும், ஆண்களுக்கு டெஸ்ட்ரோஜென் ஹார்மோன்களும் அதிகளவு சுரக்கும். இதனால் பெண்களுக்கு நாதமும் ஆண்களுக்கு விந்தும் அதிகளவு சுரக்கும். இதன் பால் பட்டால் அந்த இடங்கள் எல்லாம் புண் ஏற்படும். இந்த புண்களை குணப்படுத்தவும், விந்தும் நாதமும் அதிகளவு சுரப்பதை கட்டுப்படுத்த வெட்டிவேரை பயன்படுத்தி கசாயம் தயாரித்து குடிக்க வேண்டும்.
* இந்த வெட்டிவேரை கசாயம் செய்து குடித்தால் ஆண்களுக்கு ஏற்படும் உடல் சூடு குறையும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
* மேலும் இந்த வெட்டி வேரை தண்ணீரில் போட்டு காய்ச்சி அந்த தண்ணீரை எடுத்து வெள்ளை பூசணிக்காயை சேர்த்து பயன்படுத்தினாலும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும். மேலும் கண்களில் ஒரு பொலிவு ஏற்படும்.
* வெட்டி வேரை தண்ணீரில் போட்டு காய்ச்சி அதன் தண்ணீரில் வெள்ளை பூசணிக்காயின் சாறை சேர்த்து கருணை கிழங்கை அரைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும். அதில் கருப்பட்டியை கொதிக்க வைத்து அதன் நீரை இதில் சேர்த்து பிறகு இதில் சிறிதளவு நெய் சேர்த்து லேகியமாக தயாரித்து சாப்பிட வேண்டும். இதனால் விந்துப்பை, விதைப்பை ஆகிய பகுதிகள் குளிர்ச்சியாக இருக்கும்.
* உடலில் இரும்புச்சத்து மூலம் கிருமிகள் ஏற்பட்டால்  சிறுநீரகக் கோளாறு ஏற்படும். இதை சரிசெய்ய வெட்டி வேரை கசாயம் செய்து குடிக்க வேண்டும்.
* வெட்டி வேரை பயன்படுத்தினால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்சனை சரியாகும்.
* உடலில் உள்ள மெட்டல் கிருமிகள் அனைத்தையும் வெளியேற்ற உதவுகின்றது.
* வெட்டி வேரை மருந்தாக பயன்படுத்துவதால் உடலில் உள்ள சுண்ணாம்புச்சத்தை வலுப்படுத்த உதவுகின்றது.
* ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் உடலுறவு சார்ந்த பிரச்சனைகளையும் இந்த வெட்டி வேர் சரி செய்கின்றது.
* வெட்டி வேரை மருந்தாக பயன்படுத்தும் பொழுது மூலம் நோய் குணமாகும்.
* வெட்டி வேரை மருந்தாக பயன்படுத்தினால் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை கோளாறுகளும், பெண்களுக்கு ஏற்படும் பெண்மை கோளாறுகளும் குணமாகும்.
* இந்த வெட்டி வேரை மருந்தாக பயன்படுத்தும் பொழுது ஆசனவாய் எரிச்சல், ஆசனவாய் உஷ்னம், மூலம், பௌத்திரம், கொடி பௌத்திரம் போன்ற பிரச்சனைகளையும், நவ மூலங்களையும் சரி செய்யும்.
* இந்த வெட்டி வேரை தலையணை மாதிரி கீழே போட்டு அதன்மேல் உட்காரலாம். அல்லது கசாயம் செய்து குடிக்கலாம். இதனால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் குணமாகின்றது.
* வெட்டி வேரில் தயார் செய்யப்படும் லேகியத்தை சாப்பிட்டால் உச்சி முதல் பாதம் வரை ஏற்படும் உடல் உஷ்னம் குணமடைகின்றது.