இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் ஒன்றிணைந்த அழைப்பு – மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

0
79

அதிமுக கட்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் கட்சி தொண்டர்களுக்கு ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளனர். அது என்னவென்றால் வருகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலின் பணியை இன்று தொடங்க வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக கட்சியின் 49 ஆவது ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இணைந்து அதிமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அதிமுக தற்போது திறன்மிகு உழைப்பாலும், ஒற்றுமை உணர்வுடனும் கட்சியையும், அரசையும் மிகுந்த பொறுப்புணர்வோடு பணியாற்றிக் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா என்ற மாபெரும் இரண்டு தூண்களையும் அதிமுக கட்சி இழந்த இந்த சூழ்நிலையிலும் தாங்கள் தங்கள் ஒற்றுமையில் இருந்து சிறிதும் விலகாமல் மக்களின் நலனுக்காக அனைத்தையும் செய்துவருவதாகவும், இனிமேலும் தொடர்ந்து செய்வோம் என்றும் நம்பிக்கையாக கூறியுள்ளனர்.

மேலும் மருத்துவத் துறையிலும், கல்வியிலும், பொருளாதார மேம்பாட்டிலும், தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக அதிமுக பாடுபடும். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கும், சமதர்ம சமுதாயத்தை காக்க வேண்டும் என்றும் இருவரின் அழைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.