திமுகவின் வாக்குறுதி! நீட் தேர்வு விவகாரம் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

திமுகவின் வாக்குறுதி! நீட் தேர்வு விவகாரம் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!

தமிழகத்தில் தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர்.அந்த வைகையில் திமுக மகளிர்களுக்கு கட்டனமிலா பயண சீட்டு ,நீட் தேர்வில்லிருந்து விலக்கு பெறப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.அதனையடுத்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதில் முதற்கட்டமாக நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.அந்த குழுவானது 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டது.அவர்கள் கூறிய கருத்துக்களை 165 பக்க அறிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சமர்பித்தது.அந்த கருத்துக்களில் பெரும்பாலும் அனைவரும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ராஜன் குழுவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குழு அமைத்தது சரி தான் என கூறி அதற்க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது.இதனைதொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.அதனை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இந்த மனு தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில் தலையிட முடியாது எனவும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.